"வருவாய் அருள்வாய் குகனே!"-
("வார்த்தைகளில் புகுந்து விளையாடும் பெரியவா")
( வருமானம் பத்தாம ரொம்பக் கஷ்டமாயிருக்குங்க என்ற அடியாருக்கு ஹாஸ்யமாக உபதேசித்த மந்திரமும் ,அனுகிரஹமும்)
.[பெரியவாளை ரா.கணபதி ஸ்ரீசரணர் என்றே விளிப்பார்]
ரா.கணபதி எழுதியது
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
-அடியார் : வருமானம் பத்தாம ரொம்பக் கஷ்டமாயிருக்குங்க. பாராயணத்துக்குப் பெரியவங்க ஏதாவது ஸோஸ்தரம் [ஸ்தோத்திரம்} சொல்லணுங்க.
ஸ்ரீசரணர்: நீதான் முருக பக்தனாச்சே, தினமும் '[கந்தர்] அனுபூதி' சொல்றவனாச்சே! அதுக்கு மேலே புதுசா என்ன பாராயணம் பண்ணணும்கிறே?
அடியார்: [சற்று நேரம் முகதைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்துவிட்டு} அது ஞான நூலான்னாங்க இருக்கு? நமக்கோ அன்னாட அல்லாட்டத்துல வருமானம்னா தேவையாயிருக்கு!
ஸ்ரீசரணர்: [கணமும் யோசியாமல், குமிண் சிரிப்புடன்] ஸரி, அதுல கடைசி வரி என்ன?
((மெம்பர்களுக்காக அப்பாடல்)
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.)
அடியார்: "குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!"
ஸ்ரீசரணர்: "வருவாய்"னாலும் வருமானம்தானே? 'வருவாய் அருள்வாய்'னே வரதே! அதுவும் முடிஞ்சு முடிவா ஸ்தோத்ரத்தின் ஈற்றடியிலே வரதே! அதையே சொல்லிண்டிரு, போறும்.
வார்த்தைகளில் புகுந்து விளையாடும் அவரது வித்தகத்துக்கும் ஒரு சான்று
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
கரை காணமுடியாத கருணை பெருங்கடலே ஞானப்பேரொளியே ஸாந்தரூபனே ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸத்குரோ நின் திருமலர் பொற்பாதம்
போற்றி போற்றி.🌹🌹🙏🙏
https://chat.whatsapp.com/I66BlGEcAqaGuQ1lS8YFWj
⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️
குறிப்பு:
"மஹா பெரியவா அனுபவங்கள்" குழு 1இல் இருந்து 6 வரை அனைத்து குழுவிலும் ஒரே பதிவு தான் வரும். ஒருவர் ஒருமுறை மட்டுமே சேர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். புதிதாக இணைபவர்களை வரவேற்கிறோம்.
* உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்பினால் whatsapp மூலம் "மஹா பெரியவாஅனுபவம் comments" குழுவில் அனுப்பவும். உங்கள் பெயர், source, மற்றும் அனைத்து முக்கிய விபரங்களையும் தெரிவிக்கவும். உங்கள் சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்க. Copy paste, forward களை தவிர்க்கவும்..
https://chat.whatsapp.com/HD6nOOan01S9J3E5tbc8T8
*மஹா பெரியவரின் பரிபூரண அருளையும், வழிகாட்டுதலையும் பெற இணைவீர்*
https://t.me/+uFeoRWv-CwZjZTZl
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
No comments:
Post a Comment