விருதை மண்ணின் மரியாதை !
உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் பங்குனி பொங்கலுக்கு ஊரை பார்க்க கிளம்பிடுவாங்க !
ஜெர்மனியில் சாப்ட்வேர் எஞ்சினியராக இருந்தாலும் மாரியம்மன் கோவிலில் பயபக்தியோடு உருண்டு கொடுப்பாங்க !
சொந்த பந்தத்தை பாக்கவே கடா வெட்டி சோறு போடுவாங்க !
அமெரிக்க டிஸ்னி வேர்ல்டு போனவங்க கூட கேவிஎஸ் பள்ளி பொருட்காட்சியில் ராட்டினம் சுத்துவாங்க !
பாரத் மேட்ரிமோனி எல்லாம் தெரிஞ்சாலும் எங்க மக்கள் பொருட்காட்சியில் தான் பொண்ணு பாப்பாங்க !
அப்பா, தாத்தா ,தாத்தாவின் அப்பா , அவரோட அப்பா என அனைவரின் பெயரும் தெரிந்த ஒரே ஆளுங்க நம்ம தான் மற்ற ஊர்காரங்களுக்கு தாத்தா பேரே தெரியாத நிலை இருக்கு .
பேருக்கு முன்னாடி ஆறு எழுத்து இன்சியல் போடறவங்க உலகத்திலையே நம்ம ஊர்லதான் இருக்காங்க !!.
சிவராத்திரி அன்னைக்கு அங்காளி - பங்காளி எல்லாரும் ஒன்று கூடி பொங்கல் வைப்பாங்க !
குடும்பத்திற்கு ஒரு நந்தவனம் (கோவில்), குலத்திற்கு ஒரு கோவில், வகையரா, கொத்து, கிளை, குடும்ப, பிரிவு என எல்லா சமுதாய மக்களும் வாழையடி வாழையாக தங்கள் குடும்ப மரபுகளை வகைப்படுத்தி ஒன்றாக கூட வழிவகை செய்து தருகிறார்கள் !
அப்பா தன் பிள்ளையை தம்பி என்பதும், பிள்ளை அப்பாவை அய்யா என்பதும் நம்ம மண்ணில் தான் !
நிகழ்ச்சிகளில் குடும்பம் குடும்பமா கலந்து கொண்டு அந்தாக்சரி முதல் கண்ணாமூச்சி வரை ஓடி பிடித்து விளையாடுவதும் நம்ம மக்கள் தானே !
பேரகுழந்தைகள் எடுத்தவர்கள் கூட தங்கள் தந்தையின் கை பிடித்து நடக்கும் அழகை வீதிகளில் காண முடியும் !
காதல் திருமணங்களை ஏற்றும்கொள்ளும் பெற்றோர் , பெற்றோர் பார்க்கும் மணக்கும் குழந்தைகள் என பாசமும் அன்பும் மேலோங்கிய தலைமுறை வித்தாயசம் கடந்த உறவுகள் இங்கு தானே !
வெற்றி பெற்ற வியாபார, தொழில் சாம்ராஜ்ஜியத்தில் தன்னுடைய வாரிசுகள் ஐ.ஐ.எம் மாணவர்களாக இருந்தாலும் அவர்கள் கைபிடித்து ஜாக்கிரதையாக வழிநடத்தும் அக்கறை இருப்பதுவும் இங்கு தானே !
இன்றும் தந்தையின் ஆலோசனைகளை புறக்கணிக்காத பிசினஸ் ஜாம்பவான்கள் இருப்பதுவும் இங்கு தானே !
கடல் கடந்து சென்றாலும் நம்மவர்களின் எண்ணங்கள் எல்லாம் என்றும் எப்பொழுதும் விருதுநகர் சுற்றியே சுழல்கிறது.
உறவுகளை காண லட்ச ரூபாய் செலவு செய்தாகினும் தெரு ( ஊர்) பொங்கலுக்கு கூட வரும் எண்ணம் நம்மை தவிர வேறு யாருக்கும் இல்லை.
சுவிட்ஜர்லாந்து குளிரில் சுகமளிப்பதை விட நட்புகளுடன் விருதுநகர் வெயில் காயும் வீதிகளில் நடப்பது நம்ம மக்களின் உண்மையான சுகம்.
தென் அமெரிக்க கடலில் குளிப்பதை விட கார்த்திகை நாளில் நம் தெப்பத்தில் குளிப்பது என்ன! என்ன!! சுகம்.
ஆப்பிரிக்க காடுகளில் பஞ்சு வியாபாரத்துக்கு போகின்றவர்கள் கூட நிஜ புலிகளை பார்க்காமல் மகர நோன்பிற்கு நம்மூர் புலி ஆட்டம் பார்க்க பறந்தோடி வருகிறார்களே !
இன்றைய தகவல் தொடர்பு முன்னேற்றமும் , நுகர்வு கலாச்சாரமும் நம்மை பல திசைகளில் வாழும் சூழ்நிலை இருந்தாலும் நம் கலாச்சாரமும், நம் விருதுநகர் பூமியில் முன்னோர்கள் விதைத்து சென்ற பாசபிணைப்பும் காந்தமாய் நம்மை இந்த வெயில் தேசத்தை நோக்கி ஈர்க்கிறது.
விருதுநகர் விருதுநகர் தான் !!!
No comments:
Post a Comment