🕉️"காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்:"🕉️
(காமகோடி பீடம் - தமிழ்நாடு...)
கா மாட்சி அம்மன் கோயில் காஞ்சிபுரத்தில் அமைத்துள்ள புகழ்பெற்ற சக்தி தலமாகும்.
"காஞ்சி காமாட்சி - மதுரை மீனாட்சி - காசி விசாலாட்சி"என்ற சொல்லாடல் இம்முப்பெரும் சக்தி வடிவங்களைக் குறிப்பிட்டுச் சொல்லும்.
அதிலும் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சக்திக்கான தனிப்பட்ட கோயிலாகும்.
இக்கோயிலில் காமாட்சி அம்மன் இங்கே இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பானதொரு அம்சமாகும்.
அ வரது ஒரு கையில் கரும்பு வில்லினையும் - தாமரை மற்றும் கிளியினை இன்னொரு கையிலும் கொண்டுள்ளார்.
தந்திர சூடாமணியின்படி இது 51 சக்தி பீடங்களில் தேவியின் முதுகு எலும்பு விழுந்த சக்தி பீடமாகும்.
இ க்கோவில் மகா சக்தி பீடங்களிலும் ஒன்றாகத் திகழ்கிறது...
கோவில் வரலாறு:
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலின் பொற்கோபுரங்கள்.
1811 ஆம் ஆண்டைய ஓவியம் காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களையும் மையமாகக் கொண்ட ஒரே சக்தி ஆலயம் காமாட்சி அம்மன் கோவில் ஆகும்.
இது போல வேறிடங்களில் அம்மனுக்கு தனி ஆலயங்கள் இல்லை...
No comments:
Post a Comment