Monday, March 21, 2022

சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்

 சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் - இவற்றில் எது சமையலுக்கு மிகச்சிறந்தது? ஏன்?

 இரண்டுமே சமையலுக்கு உகந்தவை தாம்.

அவற்றை relevant- ஆன உணவு வகைகளுக்குப் பயன்படுத்தி சமைக்கும்போது, உணவின் சுவை மற்றும் மணத்தை enhance செய்து, சமைத்த கரங்களுக்குத் தங்க வளையல் பெற்றுத் தரும்.

(உங்க வீட்டுல நீங்க செஞ்சதை சாப்பிட்டுத் தங்க வளையல் வாங்கித் தரலேன்னா கம்பெனி பொறுப்பாகாது 😂)

உதாரணமாக, உளுந்து, பீர்க்கங்காய், முட்டைக்கோஸ், சௌசௌ, தக்காளி போன்றவற்றைக் கொண்டு செய்யும் சட்னி வகைகள், குருமா, கிரேவி (gravy), சூப் (soup), பஜ்ஜி, உப்புமா, கிச்சடி வகைகள்,

மசாலா பேஸ்ட், பிரியாணி, புலாவ், ஃபரைட் ரைஸ் (fried rice) மற்றும் நூடுல்ஸ் வகைகள்😋

இவற்றைச் சமைக்கும் போது பெரிய வெங்காயம்(onion) பயன்படுத்துவது சிறப்பு.

இவற்றில் ஒவ்வொரு விதமான உணவுக்கும் அதற்கேற்ற வகையில் வெங்காயத்தை நறுக்கி உபயோகிப்பது சமையலில் நீங்கள் ஒரு pro என்பதை வெளிக்காட்டும் 🤠.

பெரிய வெங்காயத்தின் வகைகளில் நாம் பொதுவாகப் பயன்படுத்துவது சிவப்பு நிறத்தில் உள்ளவை தான் (red onions). சிலர் வெள்ளை நிறத்தில் உள்ளனவற்றைப் (white onions) பயன்படுத்துவதும் உண்டு.

சாம்பார், வத்தக்குழம்பு, புளிக்குழம்பு, பக்கோடா போன்ற பாரம்பரிய உணவு வகைகளுக்குப் பயன்படுத்த, சிறிய வெங்காயம் (shallot) மிகப் பொருத்தமானதாகும்.

சிறிய வெங்காயம் வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட அசௌகரியங்களைக் குணப்படுத்தும். இதயப் பிரச்சனைகள், ரத்த அழுத்தம் போன்றவை கூட தினசரி இரண்டு சிறிய வெங்காயத்தை உட்கொள்வதால் குணமடையும் எனக் கேள்விப்பட்டதுண்டு.

நாம் பாரம்பரியமாக பயன் படுத்தி வருவது சின்ன வெங்காயத்தைத் தான்.அதுதான் சமையலுக்கு சிறப்பான சுவையும் மணமும் தரும்.சித்த மருத்துவம் பரிந்துரைப்புதும் சின்ன வெங்காயத்தைத் தான்.ஆகவே, சின்ன வெங்காயம் பயன் படுத்துவதே சிறந்தது.

வெங்காய சாம்பார்  உருளைக் கிழங்கு குருமா வைக்கும் போது மட்டும் பெரிய வெங்காயம் பயன் படுத்தலாம்.வெங்காயப் பக்கோடா வைக்கவும் பெரிய வெங்காயம் நல்லது.

No comments:

Post a Comment