Sunday, March 27, 2022

வாட்ச்/ ஹெல்த் பேண்ட்

 எக்ஸர்ஸைஸ் - வாக்கிங் இதெல்லாம் ரெகுலரா செய்ய பலருக்கு சோம்பேறித்தனம் வரும்.

நாளைக்குக் காத்தாலேந்து ஆரம்பிக்கலாம்னு, 5 மணிக்கு அலாரம் வச்சுட்டு, ட்ராக் பேன்ட்- பழைய டீ ஷர்ட், காலுறை, நடையன்கள் (ஷூவுக்கு தமிழ்வாணன் தந்த அழகிய தமிழ் வார்த்தை) எல்லாம் எடு்த்து வைத்துவிட்டு, மொபைலில் கேட்க உபன்யாஸம் - சினிமாப் பாட்டு எல்லாம் ரெடியாக்கி… காலை அலாரம் அடித்ததும் - கண்கள் கனக்க, கனவு இழுக்க “சாயந்திரம் போகலாம்” என்று வாக்-கைக் காப்பாற்றாமல் விடுபவர் அதிகம்.

இப்படிப்பட்டவர்களுக்கென்றே, எழுவதற்கும் - நடப்பதற்கும் ஊக்கம் தர என்று பல அணிகரணங்கள் வந்துவிட்டன. மொபைலிலும் motion sensor appகள் பல இருக்கின்றன.

ஆப்பிள் - சாம்சங் வாட்ச்கள், Fitbit, Noise என்று ஏகப்பட்ட ஹெல்த் ட்ராக்கர்கள் மார்க்கெட்டில்.  விலை Brand, quality, featuresக்கு ஏற்றபடி ரூ 2000 முதல் ரூ 35000 வரை.  அதிலேயே ஃபோன் அட்டென்ட் பண்ணும் வசதியும், வங்கிக் கணக்கில் பணம் என்று பார்க்கும் வசதியும், சின்ன மெஸெஜ்களை டிக்டேட் செய்து ஃபோன் வழியாக அனுப்பும் வசதியும், ஃபோன் கேமிராவுக்கு ரிமோட் கன்ட்ரோலாக உபயோகிக்கும் வசதியும் ஆப்பிள் - சாம்ஸங் வாட்ச்களில் இருக்கின்றன.  

சதா சர்வகாலமும் நம் நாடித்துடிப்பை கவனித்து பல்ஸ் கவுன்ட் - ஹார்ட் பீட் மட்டுமின்றி, இரவுத் தூக்கம் எவ்வளவு நேரம், அதில் ஆழ்நிலை உறக்கம் எத்தனை நேரம் என்று பல்ஸ் ரிதம் வைத்து கண்டுபிடித்து தமக்குக் காட்டுகின்றன. செட்டிங் செய்துவிட்டால் “தம்பி!  கொஞ்சம் படபடப்பா ஃபீல் பண்ற, எதுத்தாப்புல அந்த பொண்ணு இருக்காளா?” என்று நோட்டிஃபிகேஷன் காட்டும் திறன் உண்டு. 

இதைத் தவிர ஒருநாளைக்கு எத்தனை தப்படி வைத்தோம், எவ்வளவு தூரம் நடந்தோம், எவ்வளவு ஆக்டிவாக இருந்தோம் என அழகான சார்ட்கள், வட்டங்கள் நமக்குக் காட்டுகின்றன.  கூடவே, நம்முடைய சொந்த ஆக்டிவிட்டி சரித்திரம் - ஒப்பீடுகள். 

இந்த அணிகரணங்களிலும், Appகளிலும் நம்முடைய health goal set செய்து விடவேண்டும். 

உதாரணத்துக்கு my active calories burn goal 400, ஒரு நாளைக்கு உடற்பயிற்சி டார்கெட் 40 நிமிடங்கள், ரொம்ப நேரம் இருக்கையில் இறுக்காமாக இருக்காமல் குறைந்தது 12 முறையாவது ஓரிரு நிமிடங்கள் எழுந்து நிற்க வேண்டும், ஒரு பதினைந்து நிமிடம் தியானம் செய்யவேண்டும், ஏழு மணி நேரம் தூங்க வேண்டும், தூங்கப் போகும் நேரம் 10 மணி, எழிந்து கொள்ளும் நேரம் 5 மணி (காலை)  என்று செட் செய்து விட்டால்… அதை நூல் பிடித்துக்கொண்டு ட்ராக் செய்து “சபாஷ் மச்சி! நீ செட் பண்ணின டார்கெட் எல்லாம் அச்சீவ் பண்ணிட்டடா… ஆனா ஃபேஸ்புக் பார்த்துண்டே இருந்ததுல நேத்து ராத்திரி பன்னண்டரைக்குத் தூங்கி… ஏழு மணி நேரத் தூக்கம் goal மிஸ்ஸாயிடிச்சு” என்று அச்சீவ்மென்ட் கைத்தட்டல்-மெடல் எல்லாம் கொடுத்துவிடுகிறது.

இந்த சின்ன சின்ன மெடல்கள், உடற்பயிற்சி சரித்திரம், க்ராப் எல்லாம் நம்மை உற்சாகப்படுத்தியோ, guilt feeling பக்கம் தள்ளியோ நம்மை உடல்நலனை கருத்தில் கொள்ள ஊக்கப்படுத்துகின்றன.

பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் கூகுளும் இந்த ஹெல்த் ட்ராக்கரில் இருக்கிறது.  ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் ஹெல்த் என்று ஒரு App வைத்திருப்பது போல கூகுளும் கூகுள் ஃபிட் என்று ஒரு App வெளியிட்டிருக்கிறது.   அதில் நம் குறிக்கோள்களை பதிவு செய்துவிட்டால் தொடர் கண்காணிப்பு செய்து நாம் டார்கெட் அச்சீவ் செய்தால் பாயின்டுகள் வழங்கி ஊக்கப்படுத்துகிறது. கேமிரா லென்ஸை பயன்படுத்தி ஃபோனிலேயே ஹார்ட் பீட் கவுன்ட் தருகிறது. செல்ஃபி மோடில் நம் மார்பின் மூச்சேற்ற இறக்கத்தை கவனித்து ரெசிப்பிரேட்டரி கவுன்ட்டும் தருகிறது.

என் சொந்த உபயோகத்தில் இன்னும் நூறு அடி நடந்தால் டெய்லி ஸ்டெப்ஸ் இன்னும் நூறு கூடுமே, இன்னும் கொஞ்சம் பாயின்ட் ஏறுமே என்று செய்ய வைத்து விட்டன இந்த ஆப்கள்.

இதிலேயே நண்பர்களையும் கூட்டு சேர்த்துக் கொண்டு peer pressure ஏற்படுத்தி நம்மை கூட்டாக உடல்நலன் பக்கம் கூட்டிச் செல்லவும் வசதிகள் இருப்பது சிறப்பு.

நீங்கள் எந்த App - வாட்ச்/ ஹெல்த் பேண்ட் உபயோகிக்கிறீர்கள்?  இல்லை என்றால் இன்றே படையெடுங்கள். குறைந்த பட்சம் கூகுள் ஃபிட் டவுன்லோட் செய்து ட்ராக் செய்ய ஆரம்பியுங்கள். 

நல்ல உடல்நலனுக்கு வாழ்த்துகள்!

No comments:

Post a Comment