#Easychair_7
அத்யாயம் : 7 ... ஈஸி சேர்
ஆட்டோவில் பெற்றோரிடம் போய்க் கொண்டிருக்கும் போதே வைத்தா தீர்மானத்தில் இருந்தான், பெற்றோரை நடராஜ மாமாவுக்கு அறிமுகப் படுத்திய பிறகு அங்கு இருக்கக் கூடாது என்று.
பெற்றோர்கள் மனம் விட்டு பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் என்று. தான் அங்கு இருந்தால் தமக்கும் சங்கடங்கள் ஏற்படலாமோ என்ற பயமும் இருந்தது அவனுக்கு.
வாங்கோ, வாங்கோ, வாங்கோ என்று வாயார வறவேற்றார் வைத்தாவின் பெற்றோர்களை, நடராஜ மாமா. அப்பா பாதி சிரிப்புடனும் அம்மா முழு சிரிப்புடனும் உள்ளே சென்றார்கள்.
வைத்தா ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி விடை பெற்றான்.
குசலங்கள் பறிமாற்றம். நடராஜ மாமா தொடர்ந்தார்.
சத்புத்திரனை பெத்திருக்கேள். வைத்தா மாதிரி ஒரு புள்ளையாண்டானை பார்க்கரது இந்த காலத்தில் அபூர்வம். ரெண்டு நாளா அவனைப் பாரக்காமல் கை ஒடஞ்ச மாதிரி இருந்தது.
நான் எங்கெல்லாம் வைதீகம் ஒத்துக்க போறேனோ, அங்கெல்லாம் வைத்தா வாத்யார் வருவாரில்லையோன்னு கேழ்க்கறான்னா பாருங்களேன். மந்திரம் சொல்லும் போது என்ன ஒரு குரல்....பிரஸ்தாபித்துக் கொண்டே இருந்தார்.
அப்போது பர்வதம் காப்பி எடுத்துக் கொண்டு வந்தாள்.
பர்ர்வதம், இவா வைத்தாவோட அப்பா அம்மா. நமஸ்காரம் பண்ணிக்கோம்மா.
புன்முறுவலோடு நமஸ்கரித்தாள். அப்பா சமையல் பண்ணிண்டு இருக்கேன். இவா ஜபமெல்லாம் பண்ணிட்டு இங்கேயே சாப்பிட்டு சாயரக்ஷையா போலாம்பா.
விசு வாத்தியார் கொஞ்சம் அசந்துதான் போனார். ஆனால் காண்பித்துக் கொள்ளவில்லை. நாராயணியும், நான் கொஞ்சம் பர்வதத்தோட சித்த பேசிண்டு இருக்கேன் என்று தானும் சமையல் உள் சென்றாள்.
இவதான் என் ஒரே பொண்ணு. தாயில்லாமல் எப்படியோ வளர்த்துட்டேன். கல்யாணி இல்லாததால இவதான் ஆத்து நிர்வாகம் எல்லாம். எவ்வளவோ சொல்லியும் போன வருஷத்தோட படிப்ப நிறுத்திட்டா. எனக்கு ஒத்தாசையா இருக்கேன்னு பிடிவாதமா சொல்லிட்டா. படிப்புல படு சுட்டி, என்ன பண்றது. எனக்கு வருத்தம் தான்.
நடராஜ மாமா கண்களில் சற்று கலக்கம்.
விசு வாத்யாருக்கும் சற்று வருத்தமா இருந்தது. கொஞ்சம் பேச்சை மாற்றினார்.
அவர்கள் சம்பாஷணை சற்று வேதம், இதிகாஸத்துக்குள் போனது. அந்த பாஷ்யம், இந்த பாஷ்யம் என்று கடலாய் நிறைந்து கொண்டிருந்தது. இருவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை. எதற்காக வந்தாரோ அதையே மறந்து சம்பாஷித்துக் கொண்டிருந்தார் விசு வாத்யார்.
அப்பொழுது நாராயணி சமையல் உள்ளிலிருந்து வந்து....
நம்மாத்து மாட்டுப் பொண் ரொம்ப நன்னா சமைக்கறாண்ணா.
இப்படி பொசுக்குன்னு போட்டு உடைப்பாள்னு விசு வாத்யார் எதிர் பார்க்கவே இல்லை. அவள் மீது கோபம் வேறு.
நடராஜ மாமாவும் அப்படியே ஒரு க்ஷணம் ஸ்தம்பித்துவிட்டார்.
நிசப்தம் சிறிது நேரம் அங்கே...
தொடரும்.
No comments:
Post a Comment