Monday, March 21, 2022

மருதாந்தநல்லூர் சற்குணலிங்கேஸ்வரர்

 l: இன்றைய கோபுரம் தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம்மிகவும் பழமையான தலம் திருவடி பணிந்து கோடி ஜென்ம வினைகள் தீர வேண்டிய நின்றேன்

 தர்மத்தின் வழி நடப்பவர்களுக்கு என்றும் ஸ்வாமி துணை நிற்பார் 🙏

132. திருக்கருக்குடி (மருதாந்தநல்லூர்)

சிவஸ்தலம் பெயர்

திருக்கருக்குடி (தற்போது மருதாந்தநல்லூர் என்று வழங்கப்படுகிறது)
🙏இறைவன் பெயர்🙏
சற்குணலிங்கேஸ்வரர், கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர்
🙏இறைவி பெயர்🙏
சர்வலங்கார நாயகி, அத்வைத நாயகி, கல்யாணநாயகி

தேவாரப் பாடல்கள்

🙏சம்பந்தர்🙏

நனவிலுங் கனவிலும்

எப்படிப் போவது

கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில் சாக்கோட்டைக்கு தென்கிழக்கில் 1.5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

ஆலய முகவரி

அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில்
மருதாநல்லூர்
மருதாநல்லூர் அஞ்சல்
திப்பிராஜபுரம் S.O.
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612402
தொடர்புக்கு: 99435 23852

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 10 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

இத்தலம் தற்போது 'மருதாந்தநல்லூர் ' என்று மக்களால் வழங்கப்படுகிறது.

சற்குணன் என்ற மன்னன் பூஜித்துப் பேறு பெற்றதால், இத்தல இறைவர் இப்பெயர் பெற்றார்.

இராமேசுவர வரலாறு இங்கும் சொல்லப்பட்டு, அநுமத்லிங்கம் என்ற பெயரால் வழிபடப் பெறுகிறது.

சிறிய பழைமையான கோயில். கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. சுவாமி, அம்பாள் ஆகிய இரு சந்நிதிகளும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இவ்வாலயத்தின் சிறப்பாகும். கருவறை விமானங்கள் மிகவும் உயர்ந்தவை. வாயிலில் விநாயகர், கார்த்திகேயர் சந்நிதிகள் உள்ளன. பக்கத்தில் உள்ளது அநுமத்லிங்கம். கருவறையில் உள்ள சிவலிங்கம் மிகவும் சிறியது. இத்தல இறைவன் மணலால் ஆன சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மண்ணினை கையால் பிடித்து செய்த சுவடுகள் தெரிகிறது. அரையடி உயர சிறிய ஆவுடையார். பீடம் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. கோஷ்டங்களில் நர்த்தனவிநாயகர், இருபுறம் பூதகணங்கள், தட்சிணாமூர்த்தி (மேலே வீணாதர தட்சிணாமூர்த்தி), லிங்கோத்பவர் ஆகியோரின் மூர்த்தங்கள் உள்ளன. பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், நவகிரக சந்நிதி. சூரியன், சந்திரன், லிங்கோத்பவர், முருகன் உள்ளனர். இத்தல விநாயகர் வலம்புரி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். பிரம்மா, சற்குணன் என்ற அரசன் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபபட்டுள்ளனர். இதனால் இறைவன் சற்குணலிங்கேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

இராமேசுவர வரலாறு இத்தலதிற்கும் சொல்லப்படுகிறது. ராமாயண காலத்தில் ராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன் இத்தலத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இராமேஸ்வரத்தில் நடந்தது போல குறித்த நேரத்தில் வழிபாடு செய்ய அனுமன் சிவலிங்கம் கொண்டு வர தாமதமானதால், ராமன் தன் அருகிலிருந்த மணலிலேயே இரண்டு கைகளாலும் லிங்கம் பிடித்து இத்தலத்தில் வழிபட்டார் என்றும் அதுவே தற்போதைய பிருதிவி லிங்கமாகும் என்றும் கூறப்படுகிறது. அனுமன் கொண்டு வந்த லிங்கம் கோயிலின் இடப்புறம் அனுமந்த லிங்கம் என்ற பெயரில் தனி சந்நிதியில் உள்ளது

இத்தலத்திற்கு மற்றொரு வரலாறும் உண்டு. தனஞ்சயன் என்ற வணிகன் ஒருவன் தன் சிற்றன்னையை அறியாது புனர்ந்தமையால் தொழுநோய் ஏற்படுகிறது. மனம் வருந்திய அவன் இத்தல இறைவனை வேண்டி தொழுநோய் நீங்கப்பெற்றான். அம்மன் சன்னதி எதிரே தனஞ்சய வணிகனின் வணங்கிய சிலை உள்ளது. எனவே தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல இறைவனை வழிபட்டு வந்தால் பலன் நிச்சயம்.

சிறப்புகள்

இக்கோயில் கருவறை விமானங்கள் மிகவும் உயர்ந்தவை.

சிவலிங்கத் திருமேனி - சிறிய மூர்த்தி, மிகமிகத் தாழ்வான ஆவுடையார், மண்ணாலானது. கல்லாலான பீடம்.

சோழ மன்னன் திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவரின் கல்வெட்டு இக்கோயிலில் உள்ளது.

தொடரும்#தலம் : திருக்கருக்குடி.

#அருளியவர் :

     எம்பிரான் திருஞானச்சம்பந்தர்   பெருமான்.

#பாடல்எண் : 01

****
நனவிலும் கனவிலும் நாளும் தன்னொளி
நினைவிலும் எனக்குவந் தெய்து
  நின்மலன்
கனைகடல் வையகம் தொழுக ருக்குடி
அனலெரி யாடுமெம் அடிகள் காண்மினே. 

அருள்மிகு சுரும்பார்குழல் அரிவை  சற்குணநாதர்

 பாடல் எண் 7

பண் காந்தார பஞ்சமம்

 காலமும் ஞாயிறும் தீயும் ஆயவர் கோலமும் முடிய
அரவு அணிந்த கொள்கையர்
சீலமும் உடையவர் 
திருக்கருக்குடி சாலவும் இனிது அவர் உடைய தன்மையே. 

ஞான தேவி அம்மை ஆச்சியின்  அருள் செல்வர் திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய தேவாரம் மூன்றாம் திருமுறை  21 வது  

 திருத்தலம்     திருக்கருக்குடி
முகவரி: மருதாந்த நல்லூர் அஞ்சல் திப்பிராசபுரம்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612402
தொபே. 0435 2414388 

விளக்கம் 🌿

கடற்கரைச் சோலைகளில் நறுமணம் கமழும் மலர்கள் நிறைந்த சீகாழியில் அவதரித்த, வானவர் தொழுதெழு திருக்கருக்குடி என்னும் திருத்தலத்திலுள்ள சிவனொளியே தானான மெய்ஞ்ஞான சம்பந்தன் அருளிய குற்றமில்லாத இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்குப் பேரின்பம் மிகும்.

திருச்சிற்றம்பலம்🙏🏻

விளக்கம் 🌿

புத்தரும் சமணர்களுமான வஞ்சகர்

கூறும் பொய்ம்மொழிகளை உரையாகக் கொள்ள வேண்டா. பெறுதற்கரிய சைவசமயத்தில் நம்மைப் பிறக்குமாறு செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற அழகிய திருக்கருக்குடி என்னும் திருத்தலத்திலுள்ள பூமணம் கமழும் திருக்கோயிலைச் சார்ந்து உய்தி அடையுங்கள்

விளக்கம் 🌿

தாமரைப் பூவில் வாழ்கின்ற பிரமனும், அழகிய வாமனாவதாரம் எடுத்த திருமாலும் அறிய முடியா வண்ணம், ஓங்கிய நெருப்பு மலையாய் உயர்ந்து நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தை நாம் மனத்தால் நினைந்து வழிபட நன்மையாகும்.

தினமும் சொல்ல 1000 கோடி கோவிலுக்கு சென்ற பலன் கிடைக்கும்



No comments:

Post a Comment