Saturday, March 26, 2022

காலத்தின் நிழல்.

காலத்தின் நிழல்..

தங்கள் பள்ளி இறுதித் தேர்வில்.. வெற்றி பெற்ற ,சதீஷ், சந்தோஷ், மணீஷ்,மணி.. எனும் நான்கு நண்பர்கள் ஒன்று கூடி..

அந்த நகரத்தில் பெரிய ஓட்டல் ஒன்றில்.. காலை பத்து மணிக்குத் தங்கள்  காலைச் சிற்றுண்டியை  முடித்து விட்டு,அப்போதுஅவர்களுக்குள் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்..

சரியாக ஐம்பது ஆண்டுகள் கழித்து வரும் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதியன்று, அதே ஓட்டலில் மறுபடியும் ஒன்று கூடுவதென்றும்..

அந்த நான்கு பேரில் யார் அன்று கடைசியில் வருகின்றாரோ அவர்தான்.. அன்றைய செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பேசிக் கலைய..

அன்று அவர்களுக்கு சர்வீஸ் செய்த..காலு.. என்ற வெயிட்டரும்..அதைக் கேட்டுக் கொண்டு அருகில் நின்றிருந்தார்..

ஆயிற்று.. அந்த ஐம்பது ஆண்டுகள் கடந்ததும் அதே ஓட்டலில் சதீஷ்.. முதலில் ஓர் ஆடம்பரக் காரில் வந்து இறங்கி நடந்து வரவும்..

அப்போது அது ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலாக மாறிப் போயிருந்தது..அன்று அவர்களுக்கு வெயிட்டராக சப்ளை செய்த காலு என்பவர்..இப்போது.. காலுசேட்..என அழைக்கப்பட்டு அந்த ஓட்டலின் ஓனராக மாறிப் போயிருந்தார்..

நெருங்கி வந்ததும் நீங்கள் என்றதும்..நான் சதீஷ் என ஓ..உங்களுக்காக ஒரு ஆடம்பர அறை ஏற்கனவே மணி.. அவர்களால் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது..

நீங்கள் போய் அதிலே ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பி வைத்தார்..

அடுத்ததாக இன்னொரு காரில் நண்பர்.. சந்தோஷ் வந்து இறங்க அவரையும்  அழைத்து அதே அறைக்கு அனுப்பி வைக்கவும்..

மூன்றாவதாக மற்றொரு காரில்..மணீஷ் வந்து இறங்கியதும்.. அவரையும்அதே அறைக்கு அனுப்பி வைத்தார் காலுசேட்..

 மூவரும் சேர்ந்து நான்காவது நண்பருக்கு காத்திருக்க..சதீஷ் இதே நகரத்தில் மூன்று நகைக்கடைகள் வைத்து நடத்தி வருவதாகவும்..

இரண்டாவது நண்பர் சந்தோஷ் சிட்டியிலேயே பெரிய பில்டர் என்றும்..

மூன்றாவதாக.. நண்பர் மணீஷ் நகரில் பெரிய பிசினஸ்மேன்..என்றும் மூன்று நண்பர்களும் ஒருவருக்கொருவர்.. அளவளாவி.. நான்காவது நண்பர் மணிக்காக காத்திருந்தனர்..

காலு சேட் வந்து நண்பர் மணி வரக் கொஞ்சம்.. காலதாமதம் ஆகுமாம்.. அதனால் உங்களை பிரேக்பாஸ்ட் எடுத்துக் கொள்ளும் படி செய்தி அனுப்பி இருக்கிறார்.. எனவும் மூவரும் சேர்ந்து காலை சிற்றுண்டி முடித்து மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டு நண்பர் மணி வரவுக்காக காத்திருக்க..

மதியம் மீண்டும் வந்த காலு சேட்..சார்..உங்கள் நண்பருக்கு ஒரு முக்கிய வேலை இருக்கிறதாம்..

அதனால் உங்களை டின்னர் எடுத்துக் கொள்ளச் சொல்லி செய்தி அனுப்பியதோடு ஆன்லைனில் பில்லையும்  செட்டில் செய்து விட்டார்..

அதனால் கால தாமதத்திற்கு உங்களிடம்  மன்னிப்புக் கேட்பதாகவும் இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவார் என்றதும்.. 

மதிய டின்னரை முடித்துக் கொண்டு..மூன்று நண்பர்களும் மீண்டும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியாகப் பேசிப் பொழுதைக் கழித்துக் கொண்டு, நண்பர் மணி வரவுக்காக, ஆவலுடன் காத்திருந்தனர்.

காலம் கடந்து கொண்டே இருந்தது..ஆனால் மணி மட்டும் வரவில்லை..மணி ஐந்திருக்கும்..டிப்டாப்பாக உடையணிந்த ஒரு இளைஞன் காரிலிருந்து இறங்கி வரவும்..

அவரை அங்கிருந்த பலர் இவரை எங்கோ பார்த்தமாதிரி இருக்கிறதே.. என்று மனதில் நினைத்துக் கொண்டே நகர்ந்தனர்..

இறங்கி வந்த இளைஞன் நேரே காலு சேட்.. அவர்களிடம் சென்று அறை புக் பண்ணியதில் இருந்து பில் செட்டில் செய்ததெல்லாம்.. 

நான் தான்..அந்த மூன்று பெரியவர்கள் தங்கி இருக்கும் அறையைக் கேட்டறிந்து அங்கே போய்க் கதவைத் தட்டவும்..மணிஎன்ற தங்களைப் போல ஓர் முதியவரை எதிர் பார்த்த அவர்களுக்கு..அங்கே ஓர் இளைஞன் நின்று தன்னை அறிமுகப். படுத்திக்கொண்டு..

ஐயா..நான் தான் மணி அவர்களின் மகன்..எனது அப்பா..இனியும் வரமாட்டார்..ஆமாம் அவர் இறந்து ஒருமாதம் ஆகிறது 

எனது தந்தை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்..என்னைக் கலெக்டராக பார்க்க ஆசைப்பட்டார்.. அவரது விருப்பப்படி நான் இப்போது இந்த சிட்டியின் கலெக்டராகப் பணி புரிகிறேன்..

ஆனால் அவர் இறக்கும் தருவாயில்.. என்னை அழைத்து..உங்களுக்குள்  ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தைச் சொல்லி..அதை நிறைவேற்றி வைக்கும் பொறுப்பையும் என்னிடம்  ஒப்படைத்தார்..

அதே வேளையில் உங்கள்  மகிழ்ச்சி எந்த வகையிலும் குறையக் கூடாது..அதற்கு தகுந்தாற்போல்..அவர் மறைந்த செய்தியை முதலில் சொன்னால் நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சியாக இருக்காது.. 

என்பதால்..முன்கூட்டியே சொல்லாதே என்றும் என்னிடம் அந்தக் கடமையை தந்து விட்டுச் சென்றிருந்தார்..

அதனால் தான்..நான் அப்பா..இறந்து செய்தியை முன்னரே சொன்னால் ஐம்பது ஆண்டுகள் கழித்து சந்திக்கும் உங்கள் சந்திப்பு மகிழ்ச்சியாக..இருக்காது..

என்பதால் அதை நான் இப்போது தெரிவிக்கிறேன் என்று சொன்னபிறகே.. நண்பர்களுக்கும் உண்மை தெரிய வந்தது..

எனவே சொந்தங்களே.. நண்பர்களே..ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும்..உங்களுக்காக படைக்கப் பட்டதுதான்

இந்த உலகம் என்பதை மறந்து விடாதீர்கள்..

 ஆகவே..அடிக்கடி கூடிக் குலாவி மிகவும்  மகிழ்ச்சியாக காலத்தைக் கழியுங்கள்..காலம் பொன் போன்றது..

ஆமாம்..வெண்கலக் குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய 

பாடலுக்கிணங்க..

இன்றிருப்போர்..

நாளையிங்கே..

இருப்பதென்ன உண்மை..

இதை அறிந்திடாமல்..

சேர்த்து வைத்து அடைவதென்ன நன்மை..

என்ற பாடல் தான் எனது 

நினைவுக்கு வருகிறது..

No comments:

Post a Comment