நோய் எதிர்ப்புச் சக்தியை அள்ளிதரும் பழங்கள்...
அன்னாசி – ‘சிசிஎஸ்’ மற்றும் ‘சிசிஇஸட்’ என்ற இரண்டு பொருள்கள் அதிகமாக இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
அவகாடோ – நாள்தோறும் இந்த பழத்தையும் ஒரு தம்ளர் பாலையும் சாப்பிட்டு வந்தால் எந்த வயதுக்காரரையும் தொற்றுநோய் நெருங்காது.
ஆப்பிள் – நாள்தோறும் ஓர் ஆப்பிள்பழம் சாப்பிடுபவர்களுக்கு நோய்க் கிருமிகள் தொற்றாது. உடலை நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வைத்திருக்க உதவுகிறது.
ஆரஞ்சு – தினமும் ஆரஞ்சுப் பழச்சாற்றை அருந்திவர ஃபிரீராட்டிக்கல் திரவம் சுரப்பது கட்டுப்படுத்தப்பட்டு, நோய் எதிர்ப்புச் சக்தியுடன், இளமஇ குன்றாமல் இருக்கலாம்.
இலந்தை – கடுமையான ஜலதோஷம், காய்ச்சல், இருமலுக்கு இலந்தை பழச்சாறில் ஒரு சிட்டிகை மிளகுத்தூள் கலந்து 2 அல்லது 3 வேளை குடித்தால் குணமாகும்.
கொய்யா – நெல்லிக் கனியைத் தவிர, வேறு எந்தப் பழத்திலும் உள்ளதை விட வைட்டமின் ‘சி’ அதிகம் நிரம்பியது. 100 கிராம் கொய்யாவில் 305 மில்லி கிராம் அளவு சத்து உள்ளது.
சாத்துக்குடி – நாரின், ஜெனின், ஹொஸ்பெரிடின், வைட்டமின் ஏ, கரோட்டீன், பார்வைத்திறனை அதிகரிக்கும் லூட்டீன், ஜியாக்ஸ் ஆன்த்தின் போன்ற நோய் எதிர்ப்புப் பொருள்கள் உள்ளன.
திராட்சை – லைசின் என்ற அமினோ அமிலமும், வைட்டமின் ‘சி’ சத்தும் இரண்டும் சேர்ந்து திராட்சையில் இருப்பதால் நமது உடலுக்குள் வைரஸ் நுழையாமல் பார்த்துக்கொள்கின்றன.
நெல்லிக்கனி – 100 கிராம் நெல்லிக்கனியில் 600 மில்லி கிராம் அளவுக்கு வைட்டமின் ‘சி’ உள்ளது.
பலாப்பழம் – பலாச்சுளைகளை நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வர உடல் உறுதி பெறும். ஆஸ்துமா நோயாளர்கள் சாப்பிடவேண்டாம்.
பேரிக்காய் – 500 வகையான பைட்டோ நியூட்ரியன்கள் உள்ளன. அவற்றுள் பெனால்ஸ் (Phenols) என்பது மிகச் சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தி இதனுள் உள்ளது.
மாம்பழம் – உடலுக்குள் நோய் பரப்பும் நுண்ணுயிரிகள் செல்வதும், உடலுக்குள் நச்சு நுண்மங்கள் செல்வதும் தடுக்க உதவுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
மாதுளை – எல்லாஜிக் என்ற அமிலமும், வைட்டமின் சி-யும் நிறைய உள்ளது.
வாழை – உடலுக்கு உடனடியாகச் சக்தியைத் தரும். நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது.
தக்காளிப்பழம் – தக்காளிப்பழ சாற்றில் நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்திவர நோய் எதிர்ப்புச் சத்து அதிகரிக்கும்.
முந்திரிப்பழம் – ஆரஞ்சு பழத்தைவிட ஐந்து மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கின்றது.
வெள்ளரிப் பழம் – இதன் சாறு உடலுக்கு ஊட்டம் அளிக்கும்.
No comments:
Post a Comment