பேபி கார்ன் பஜ்ஜி
▶️🔰தேவை
பேபி கார்ன் – 10
கடலை மாவு – ¼ கப்
அரிசி மாவு – 2 டே.ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீ.ஸ்பூன்
சாட் மசாலா – ½ டீ.ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீ.ஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
கடலை மாவு – ¼ கப்
அரிசி மாவு – 2 டே.ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீ.ஸ்பூன்
சாட் மசாலா – ½ டீ.ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீ.ஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
▶️🔰செய்முறை
1.🔰பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்தவும்.அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து அதில் பேபி கார்னை போட்டு நன்றாக வேக வைக்கவும்.
2.🔰ஒரு பவுலில் கடலை மாவு,அரிசி மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகுத்தூள் ,உப்பு மற்றும் சாட் மசாலா ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.
3.🔰கலவையில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலக்கவும்.கலவை நீர்த்துப்போகாமல் பார்த்துக்கொள்ளவும்.
4.🔰வேகவைத்த பேபி கார்னை மாவில் நன்றாக முக்கி எடுக்கவும்.
5.🔰பானில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
6.🔰கலவையில் முக்கிய பேபி கார்னை எண்ணெயில் போட்டு நன்கு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
7.🔰பொரித்து எடுத்த பேபி கார்னை எண்ணெய் உறிஞ்சுமாறு டிஸ்யூ பேப்பரில் போட்டு எடுக்கவும்.
8.🔰சூடாக பரிமாறவும்.

No comments:
Post a Comment