Friday, March 25, 2022

தில்லைஸ்தானம்

 ** தில்லைஸ்தானம்*

   "அம்மா!  யம்மா!"

 "ஏன்டி காட்டுக்கத்தல் கத்துற...டிபன்தான் பேக் பண்ணி டைனிங்டேபிள்ல வெச்சிருக்கேனே!அப்புறம் என்ன?"

"அது தெரியுது...எக்ஸாம் ஃபீஸ் குடும்மா!..இன்னிக்கு லாஸ்ட் டேட்..நானே எடுத்துக்கிட்டா?"

 "இரு,வரேன்,வரேன்.."

தோசைக்கல்ல ஸிம்ல போட்டுட்டு, கைய கழுவி தொடச்சிக்கிட்டே வந்தா சீதா.அலமாரிய திறந்து புடவைகளுக்கு அடியிலிருந்து அந்த சில்வர் டிபன்பாக்ஸ வாஞ்சையோடு எடுத்தா..பணத்த எண்ணி எடுத்துக்கிட்டு, அதே வாஞ்சையோடு மூடி கவனமா அதே மாதிரி வெச்சிட்டு, "இந்தாடி, பத்திரமா எடுத்துட்டு போ."

  "ஜி பே, போன் பேனு டெக்னாலஜி எவ்ளோ முன்னேறுது...இன்னும் ஏம்மா இந்த டப்பால வெச்சிதான் குடுப்பேன்னு அலம்பல் பன்ற..."

மௌனமா கிச்சனுக்குள்ள போய், தோசைய வார்க்க ஆரம்பிச்சா சீதா..

டைனிங் டேபிளில் இருந்த ராம் குரல உயர்த்துனாப்ல..'பணத்த வாங்கிட்டியா,கெளம்பு...லாஸ்ட் மினிட் டென்ஷன் ஆகாம கெளம்புறதில்ல.."

  "ம்ம்',.  பை ப்பா...வரம்மா!... ஸ்கூட்டி சாவிய எடுத்துக்கிட்டு போனா ஸ்வாதி..

  தட்டில் தோசையை வைத்த சீதாவிடம்.

"இன்னிக்கு கொத்தமல்லி சட்னி ரொம்ப சூப்பர்'..மெல்ல புன்னகைத்த சீதா, அப்போ இன்னொன்னு வார்க்கவா?..ம்ம்

..நெய் தாராளமா ஊத்தி..

 ஹை கொலஸ்ட்ராலாம்,இதுல நெய் தாராளமாவாம்..

.ம்கூம்."

கன்னத்தில் இடித்த சீதாவ பாத்து சிரிப்பு வந்தது..சொல்லிட்டு மனசு கேக்காம மேலாப்லயாவது  நெய் தடவி தருவானு தெரியும்..23 வருட தாம்பத்யமாச்சே..

   "தரகர் வர்ரன்னாரு..

ஆள காணோம்..3,4வாட்டி வந்தாலும் திருப்தி ஆகற மாதிரி வரன கொண்டு வர மாட்ராறு இல்ல...

"ப்ச்..தரகர் வேண்டாம்,மேட்ரிமோனில போடலாம்னா கேக்க மாட்றீங்க'

என் ப்ரெண்ட்ஸ் ,அதுல  நெறய ஃபால்ஸ் ஸ்டேட்மெண்ட்ஸ்னு கம்ப்ளயின்ட் சொல் றாங்க..அதான், தெரிந்தவர் ன்னு இவர வர சொன்னேன்..

"இந்த முறை அவருக்கு நான் பணம் குடுக்குறேன்..."ராம் தலையாட்டினாப்ல.,"கைராசி வேலை செய்தான்னு பாப்போம்.."

 நாம சொல்றதுதான் தரகர்..ஆனா ஆள் டிப்டாப்பா பைக்ல வருவாப்ல..லேப்டாப்லதான் ஃபோட்டோஸ் காமிப்பாப்ல..பிடிச்சிருந்தா டீடெய்ல்ஸ்  அடுத்த ஸ்கிரீன்ல வரும்..பொருத்தம் பாக்கனும்னு   ஃபீல் பண்ணுனா ,அவரே கம்பேட்டிபிலிட்டி பார்த்து நட்சத்திரப் பொருத்தம் இருக்கா இல்லையா சொல்லிடுவாப்ல..மேலும் பிடிச்சிருந்தா டீடெய்ல்ஸ் வாட்ஸப் நம்பருக்கு மெசேஜ் போட்டுடுவாப்ல...அதே போல் அந்தப் பக்கமிருப்வர்களுக்கு நம்ம டீடெயில் போகும்..ஆனா நோ போட்டோ ட்ரான்ஸாக்ஸன்..அவர் லேப்டாப்பில் மட்டுமே மாப்பிள்ளையோ பொண்ணோ பாத்துக்கலாம்..

அவர் விசிட்டிங் கார்டில் தமிழில் கூட 'மேரேஜ் அசெம்ப்ளர்' என்றுதான் போட்டிருப்பார்..எல்லாம் ஹைடெக் ஆகிடிச்சி...

   ஹாரன் சத்தம் கேட்டது..'வந்துட்டார் பாரு..சீதா நீ ரெடியா?"

"..ம்ம் இதோ வரேன்.."கிச்சனிலேயே ரெண்டு தோசைய சாப்பிட்டு கைகழுவிய சீதா சொன்னாள்.. "தண்ணீர் கொண்டு வந்த போது எல்லாம் ரெடியாக டைபிள் மேலிருந்தது..தேங்க்யூ மேம்' என்று தண்ணீரை வாங்கி பருகினார் தரகர்,, இல்லல்ல..இனிமேல் MA (marriage assembler)..

எல்லாம் பார்த்து மெசேஜ் வாங்கி முடிக்க 3/4மணி ஆனது.."தேங்யூமேம்" என்று அவள் கவனமாய் பாக்ஸிலிருந்து எடுத்துக்குடுத்த பணத்தை வாங்கிக் கொண்டார்..எப்பவும் ஜிபேதான பன்னுவீங்க என்று ராமை கேட்க..இது 'சென்டிமென்ட்' என்று ராம் சொல்ல..' லெட் ஆல் பி ஃபைன்..:.கைகுலுக்கி கெளம்புனாப்ல MA..

சரி, நான் ஆஃபிஸ் கெளம்புறேன்.என்று ராம் ரெடியாக,காஃப்பி தந்தாள் சீதா..குடித்துவிட்டு,"பை சீத்து, டாட்டா "சொல்லி காரெடுத்தான் ராம்..கார் கெளம்ப ,வள்ளி வேலைக்கு வர சரியாயிருந்தது.."நீ போக்கா ,கேட்ட நான் பூட்டிட்டு வரன்னு சொல்ல உள்ளே வந்து ரெண்டு காஃப்பி கலந்தாள்..ஒன்றை வள்ளியிடம் கொடுத்து விட்டு இன்னொரு கப்பை எடுத்துட்டு வந்து ஃசோபாவில் அமர்ந்து காஃபியை சிப் பை சிப்பாக ரசித்து குடித்தாள்..மனதில் திரும்ப திரும்ப 'விச்சு' என்ற பெயர் வந்தது..ரொம்ப ஷார்ட்டா இருந்த பெயர்ங்கறதுனால மனசுல ஒட்டிக்கிச்சோ னு யோசிச்சு பிறகு தலையை சிலுப்பி நினைவை விரட்டினாள்.."இன்னிக்கு மோப் போடவாக்கா?" 'வேண்டாம்,நான்வெஜ் எடுத்திருக்கு ,நாளைக்கு போட்டுக்கலாம்"னு சொன்னதும் வீட்டை கூட்டிவிட்டுட்டு, மாடியில் வாஷிங் மெஷின்ல போட்ட துணிய உலர்த்திட்டு கெளம்புனா வள்ளி..

.மாலை 5 மணிக்கு ராம்கிட்டேயிருந்து மெசேஜ்' "ஃகாபி வித் விஸ்வநாத்',

 சட்னு புரியல..இந்தப் பேருல  அவருக்கு பஃப்ரெண்ட்ஸ் கூட இல்லையே..அப்புறம் ஸ்ட்ரைக் ஆச்சி..

 வீட்டிற்குள் மலர்ந்த மககத்துடன் ராம் வர, சீதா கேள்வியுடன் பார்த்தாள்.." அந்தப் பையன் நேரா ஆஃபிஸ் வந்துடாப்ல!. 

"விச்சு?.

"அட..ஞாபகப் படுத்த வேலையில்லாம‌போச்சி..ஜஸ்ட், 5 மினிட்ஸ்னு கேட்டாப்ல..சரினு வர சொன்னேன்..ஸ்மார்ட் பாய். இன்ட்ரொட்யூஸ் பண்ணிட்டு, கேஸ்யுவலா ஸ்வாதிய பாக்கனும்னாப்ல..6.30 வீட்டுக்கு வர சொல்லியிருக்கேன்..ஸ்வாதி வந்திடுவாப்லல்ல.?.

 "ஏங்க, இப்படி தடக் புடக்னு அரேன்ஜ் பண்றீங்க..?"

 "இங்கியும் ஒரு காஃபி போதும்னு சொல்லிட்டாப்ல..பையன் மட்டும்தானே, வரட்டும்..

  ஏனோ, மனசு பரபரன்னு இருந்தது.சீதாவுக்கு..ஸ்வாதிக்கு கால் பண்ணுனா பிஸி டோன் வந்தது..பொழுதுக்கும் என்னதான் அரட்டையடிப்பாங்களோனு டென்ஷனா ஆனா சீதா..முகம் பார்த்து ராம் சொன்னான் "கேஸ்யுவலா இரும்மா,ஸ்வாதிக்கு மெசேஜ் போட்டுட்டேன்..ஷி வில் பி இன் டைம்." தோளில்தட்டி ஆசுவாசப்படுத்தினான்.. "சரி, நான் காஃபி கொடுத்துட்டு விளக்கேத்துறேன்..

"வேனாம்மா! எத்தனை காஃபி? ,நீ போட்டுக்கோ..ஐ வில் ஸ்கிப்..

"சரி.".விளக்கேற்ற, மனதில் நிறைய பிரார்த்தனைகள் வந்தது.."ஓ! இது தாய்மையின் பதட்டமா..'சிரித்து கொண்டாள் சீதா.

டான்னு 6.30க்கு மாப்பிள்ளை...ச்சி ச்சீ..பல்லை கடித்துக்கொண்டாள்..விச்சு வந்துட்டாப்ல..சந்தன நிற குர்தாவில் அழகாய்தான் தெரிந்தான்..ஸ்வாதி ' ஜெண்ட்ஸ் ச்சுடி னு கிண்டல்ல பண்ணுவா...அலைபாய்ந்த மனதை அடக்கினாள்..'

குட்ஈவ்னிங் ஆன்ட்டி'.. தலை ஆட்டி சொல்ல,"வாப்பா,நைஸ் ஈவ்னிங்.."

சோஃபாவில் அமர, கொஞ்சமாய் நறுக்னு இன்ட்ரொட்யூஸ்‌ பண்ணிகிட்டாப்ல..

அம்மா,அப்பா எங்க இருக்காங்க..?..

ரெண்டு பேருமே தவறிட்டாங்க,..பாட்டிதான் என்ன வளர்த்தாங்க. சித்தப்பாதான் கார்டியன்..சொந்த ஊர், திருவையாறு பக்கத்துல தில்லைஸ்தானம்..எல்லோரும் அங்கதான் இருக்காங்க..ஜஸ்ட் 5 மன்த் அகோ, ஐ காட் மை பிளேஸ்மெண்ட் இன் சென்னை..'.இப்போ எங்க ஊர் பையன்கூட ஷேர் பண்ணி ஒரு ரூம்ல இருக்கேன்..'

 தில்லைஸ்தானம'.ராம்,சீதா இருவரும் பார்த்துக்கொண்டனர்.சற்று உணர்ச்சி வசப்பட்ட சீதாவை கண்களாலேயே அடக்கினான் ராம்..ஸ்கூட்டி பார்க்கிங் சத்தம் கேட்டது..வண்டி சாவியை சுற்றிக்கொண்டே வந்த ஸ்வாதி புதிதாய் இருந்த வாலிபனை பார்த்ததும், சற்று கண்களில் ஆச்சரியம் காமித்து பின் சின்ன புன்னகை புரிந்தாள்..மீட் மை டாட்டர்' ஸ்வாதி..ஷீ இஸ் இன் ஃபைனல் இயர் M.Sc.'

 இருவரும்' பரஸ்பரம் ,ஹாய் ' சொல்லிக் கொண்டார்கள்..'உட்கார் ஸ்வாதி"..ராம்சொல்ல ,

 "ஃப்ரெஷ் ஆகிட்டு வரேம்பா' னு நகர்வதற்கு முன் ஆழமாய் அவனை பார்த்தாள் ".ம்ம்.ஸ்மார்ட்',மனசுக்குள் சொல்லிக்கொண்டு ரூமுக்கு போனாள்..

சீதாவும் எழுந்து காஃபி போட்டு வந்தாள்..

   பையன்  டிரேயிலிருந்து எடுத்த காஃபி மூக்கருகே சென்றவுடனே " எங்க ஊர் காஃபி வாசம்.ம்ம்..''

"டேஸ்ட்டும் அப்படிதான் இருக்கும்..இவளும் உங்க ஊர்காரங்கதான்,திருவையாறு.."

"ஓ' ..அதான்.'.சிரித்துக் கொண்டான்  விஸ்வநாத்.

ரசித்து நிதானமாக காஃபி குடித்தது பார்க்க ஆசையாயிருந்தது.நம்மூர்னா அப்படிதான் போல,சீதா மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். காபியை ரூமில் ஸ்வாதிக்கு தர ,"யாருமா அது? பாத்த மாதிரியேயில்ல ..னு அம்மாவிடம் கேட்க,"அப்பா ஃப்ரெண்டு பையன்போல.".னு சொல்லி அவள் முகத்தை நோட்டமிட்டாள்.."ம்ம்ம் னு ஹம் பண்ணிட்டே போனவளிடம் ஒன்னும் கண்டுபிடிக்க முடியல..

ஃப்ரெஷ் ஆகி சுவாதி வெளியேவர, "இரண்டு பேரும் பேசிட்டு இருங்க ,இதோ வரேன்", அப்படின்னு சொல்லிட்டு ராம் கிச்சனுக்குள்ள வந்தாப்ல.."அச்சச்சோ !ஏங்க தனியா விட்டுட்டு வந்தீங்க?, அப்படின்னு சீதா கேட்க ,"பேசட்டும் ,அதனால என்ன?..ம்ம்..மீண்டும் நெட்டி தள்ளி ஹாலுக்கு அணுப்பினாள் சீதா..

ஃசோபாவிலிருந்து எழுந்த விஸ்வநாத்,'நான் கெளம்புறேன் அங்கிள் ..வரேன் ஆன்ட்டி..பை'னு ஸ்வாதியிடம் சொல்லிட்டு கிளம்ப ,வழியனுப்ப மூவரும் வாசலுக்குப் போனார்கள்  .."சித்தப்பாபேசுவாங்க அங்கிள், நீங்க பேசிக்குங்க' நாகரீகமாய் தகவல்  சொல்லி பைக்கில் கிளம்பினான்..

 "ம்ம்ம்.. வாட் டு யூ திங்க் அபவுட் ஹிம் ஸ்வாதி..

"நத்திங்' தோள் குலுக்கிட்டு ரூமுக்கு போனாள் ..பின்னாடியே சீதா போய் காஃபிகப்ப எடுத்துட்டு திரும்ப.."சில பேருக்கு குர்தா நல்லாதான் இருக்கு இல்ல..ஆனா விஸ்வநாத் ரொம்ப பெரிய பேராயிருக்கு.."

"விச்சுனுதான் கூப்புடுவாங்களாம்."

"ச்ச ச்ச ரொம்ப ஓல்டு நேம்..விஷ்வா ஓ.கே..ஷார்ட் & ஸ்வீட்..சொல்லிட்டு நாக்கை கடித்துக் கொண்டு' எப்படி கூப்ட்டா எனக்கென்ன'னு திரும்பி கொண்டாள்..

    "நீ என்ன நெனக்கிற சீதா? ராம் ரூமில் தனியா கேட்டான்.."ஜாதகம் பாக்க வேண்டாமா?

"அது, அவங்க வேனும்னா பார்க்கட்டும். நமக்கு என்ன ஜாதகம் பார்த்தா கல்யாணம் நடந்துச்சி..நாம ஹேப்பியா இல்ல?..

அவன் நெஞ்சில் சாய்ந்தாள் சீதா "உங்கள மாதிரியே நல்ல மாப்பிள்ளையா சுவாதிக்கு கிடைக்கணும்னுதான் ஆசப்படுறேன்..

  பையன் ,பிடிச்சிருக்குனு சிம்பாலிக்கா சொல்லிட்டாப்ல..உன் பொண்ணு எப்படி ரியாக்ட் பன்றா?..

"அத ஏன் கேக்குறீங்க

அவ 'விஷ்வா 'ன்னு செல்லமா பெயரே வச்சுட்டா..."ரெண்டு பேரும் சிரிச்சிக்கிட்டாங்க..

 இரண்டு நாளில் விச்சு சித்தப்பா ஃபோனில் பேசினார்.."ஜாதகம் பொருந்தியிருக்கு..வர்ர சண்டே ஈவ்னிங் 6 மணிக்கு மேல அம்மா,மனைவிய கூட்டிக்கிட்டு,நான் வரேன்..விச்சுவும் அவன் ஃப்ரெண்டோட ஜாயின் பண்ணிப்பாப்ல..ரொம்ப ஃபார்மாலிட்டீஸ் வேண்டாம்..சிம்பிளா வெச்சிக்கிலாம்..பொண்ணுக்கு விருப்பமிருந்தா சேலை கட்டட்டும்,இல்ல சுடிதாரே போதும்..நேர்ல பாக்கலாம்னு" சொல்ல...ஏதோ வீட்டுக்கு கல்யாண களை வந்த ஃபீலிங்..

 ஸ்வாதியிடம் மெல்ல விஷயத்தை சொல்ல "கேடிங்கப்பா  நீங்க ரெண்டு பேரும் ..நான் சுடிதார் தான் போடுவேன்"மௌனமாய் சிரிச்சிக்கிட்டே சம்மதம் தந்தாள்.

  M.A (Marriage Adsrmbler)சண்டே காலையில் வீட்டுக்கு வந்துட்டாப்ல" "சாரி சார், இன்னிக்கு காஞ்சிபுரத்துல ஒரு மேரேஜ் ஃபிக்ஸ் பண்ண போறேன். அதனால ஈவ்னிங் ப்ரைடல் மீட்க்கு என்னால வர முடியாது .அவங்க கிட்ட பேசிட்டேன் அவங்க பெருசா ஒன்னும் எதிர்பார்க்கல .நீங்க பேசி பாருங்க சார்  பரஸ்பரம் பிடிச்சிருந்தா ,அப்புறம் பிக்ஸ் பண்ணிக்கலாம்..

  சீதா' செண்ட்டிமண்ட் பாக்ஸ்லேரூந்து பணம் கொண்டு வந்து கொடுத்தாள். அவர் சென்றதும் கையிலிருந்த மீதி பணத்தை ராம் கிட்ட கொடுத்து ஸ்வீட் காரம்  மட்டும் வாங்கிட்டு வந்துடுங்க என்று சொன்னாள்..

எல்லாம் ரெடியாக ஸ்வாதி ஃப்ரெண்டு   ரேஷ்மியும் வந்து சேர்ந்தாள் .

அப்புறம் அவளுக்கு துணைக்கு ஆள் வேண்டாமா! 5.50க்கே சிம்பிளான பட்டுசேலை கொஞ்சமாய் நகை, போனி டெயிலில் இரண்டு சரம் மல்லியென அழகாய் ஜொலித்தாள் ஸ்வாதி..ஆச்சர்யமாய் பார்த்த ராமிடம்..'சுடிதார் போதும்னுதான் சொனனேன்,இவுங்கதான் கேக்கலன்னு சீதாவையும்,ரேஷ்மியையும் கைகாமிக்க, இல்லையென்று இருவருமே சிரித்ததும், "போட்டுவிட்டுட்ட பாத்தியா" னு ஸ்வாதி  சினுங்க, சிரித்துக்கொண்டான் ராம்..சரியாக 6 மணிக்கு வாசலில் கார் சத்தம் கேட்க ராமும் சீதாவும் வாசலுக்கு விரைந்தார்கள்..

முதல் காரில் சித்தப்பா வுடன் விச்சுவும் ப்ஃரெண்டும் வர,பின்னாடி காரிலிருந்து பையன் பாட்டியும் கையில் தாம்பூல தட்டுடன் சித்தியும் இறங்கினார்கள்.

   வாங்க! வாங்க! ராம் அழைக்க திகைத்து நின்றாள் சீதா..சிரித்த முகத்துடன் விச்சு பாட்டிமுன் வந்து சீதாவுக்கு முகத்தை வழித்து நெட்டி முறிக்க,பட்டென்று வாசலிலேயே அவர் காலில் விழுந்தாள் சீதா... எந்திரி சீதா!..வீட்டுக்குள்ள கூப்புடமாட்டியா?..னு கேட்கவும் வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டே வாங்கம்மா வாண்ணே,வாங்க அண்ணி என்று அழைத்தாள்.உள்ளே சென்று அமர்ந்ததும் ராம்  மற்றும் ரேஷ்மி எல்லோருக்கும் தண்ணீர் தர எல்லோரும் சகஜ நிலமைக்கு வந்தார்கள்.. 

விச்சு பாட்டி சொன்னாங்க ராம்கிட்ட,

 "நீங்க உட்காருங்க மாப்பிள்ளை..என் பொண்ண இத்தன வருஷமா ராணிமாதிரி பாத்திருக்கீங்க..உக்காருங்க.. ".மகன பாத்து, "அவள அடுப்படிக்கு உதவியா போசொல்லு'னு சொல்ல சீதா அண்ணி எழுந்து போனா.."நீங்க தனியா எப்படின்னு "சீதா எழ அமர்த்தினான் அண்ணன்காரன்..எல்லாரும்தான் ஒன்னுக்குள்ள ஒன்னாயிட்டமே! போயி பொண்ண முதல்ல கூட்டிட்டு வா, அப்புறம் மீதிய பேசலாம்.. 

உள்ளிருந்து வந்த ஸ்வாதி அனைவருக்கும் பொதுவாய் வணக்கம் சொல்ல அனைவர் முகத்திலும் சந்தோஷம்..விச்சு பாட்டி அவளை இழுத்து தம்பக்கத்தில் இருத்தி கண்ணத்தில் முத்தமிட்டாள்..சீதா,அப்படியே உன்ன உரிச்சிக்கிட்டு இருக்கா என் பேத்தினு  சொல்ல திருதிருன்னு முழித்தாள் ஸ்வாதி .. விஷ்வாவை பார்க்க ,அவனும் "விஷயத்த ஓப்பனா பேசுனாதானே அத்தைக்கும், ஸ்வாதிக்கும் புரியும்னு எடுத்துக் கொடுக்க..

ஆரம்பித்தார் விச்சு சித்தப்பா.,.' "ஸ்வாதி! உங்கம்மா வேற யாருமில்ல, என் சொந்த தங்கச்சி..காலேஜ் முடிச்ச கடைசி நாள்,

யாருகிட்டயும் சொல்லாம  கைல இருந்த டிபன் பாக்ஸ், கட்டுன துணியோட உங்கப்பா கூட போய்  கல்யாணம் கட்டிகிட்டாப்ல..என் அண்ணன் ப்ரெண்டுதான் மாப்பிள்ளைன்னாலும், அவங்களை,"வீட்டு படியேறக் கூடாது"னு அண்ணன் சொல்லிட்டாப்ல..அம்மாதான் மனசொடஞ்சி போயிடுச்சி..சோத்து டப்பாவத் தவிர ஒன்னுமே கொடுக்கலியே ஒத்த பொண்ணுக்குனு அப்பப்ப பொலம்புவாப்ல.அப்பா இல்லாத வீடுன்றதுனால அண்ணன் பேச்சுக்கு மறுபேச்சு பேச ஆளில்ல..ஆனா எதிர்பாராத பைக் ஆக்ஸிடென்ட்ல அண்ணணும் அண்ணியும் இறந்து போவ,அப்போ பொடியனா ஸ்கூலுக்கு போயிருந்ததால விச்சு விதிகிட்டேயிருந்து தப்பிச்சிக்கிட்டான்..உங்களையும் எங்கெங்கியோ தேடியும் கண்டுபிடிக்க முடியல..இப்போ மாப்பிள, பொண்ணு போட்டோவ அனுப்புனப்பதான் ஜாடைய வெச்சி அம்மா கண்டுபிடிச்சிடுச்சி..மாப்பிள்ளைக்கிட்ட நாங்க பேசிட்டாலும் உனக்கு இது சர்ப்ரைஸா இருக்கட்டும்னு சொல்லிட்டாரு.. 

சீதா ராம பாத்து நொடிச்சா' " என்ன சர்ப்ரைஸ், மன்னாங்கட்டி!"னு சொல்ல எல்லோரும் 'கொல்'னு சிரிச்சாங்க..

ஸ்வாதிக்கு இப்போதான் புரிந்தது ' அம்மா அந்த டிபன்பாக்ஸ  அவ்வளவு செண்டிமென்ட்டா ஏன் பாத்தாப்லனு..!அவளுக்கு அம்மா வீட்டு சீதனம் அது மட்டும்தானே'... ஆசையாக சீதாவின் தோளை கட்டிக்கொண்டாள்,ஸ்வாதி.."இப்போ சொந்த அத்தானையே கட்டிக்கப் போறா என் பொண்ணு' சீதா சொன்னாள்..

  "நானொன்னும் அத்தான்னு கூப்பிட மாட்டேன், விச்சுன்னும் கூப்பிடமாட்டேன் .,

விஷ்வானுதான் கூப்பிடுவேன்னு , சொல்ல எல்லோருமே கை தட்டி ஆமோதித்தார்கள்...

 ----சுபம்----

தங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கின்றேன்..படம் வரைந்த மத்யமர் "கோவிந்தராஜ் லெஷ்மிநாராயண்' அவர்களுக்கும் நன்றி

🙏🙏🙏


தஞ்சை பியூட்டிஷியன் உமாதேவி

No comments:

Post a Comment