பட்டாணி புலாவ்
பிரியாணிக்கும் புலாவ்வுக்கும் வித்தியாசம் என்ன என்று பார்த்தீர்களானால், புலாவ் ஃப்ரைட் ரைஸ் போல மசாலா அதிகம் சேர்க்காமல் இஞ்சி, பூண்டு, தயிர் போன்றவை சேர்க்காமல் செய்யப்படும்.
பிரியாணி சைவமாகட்டும் அசைவமாகட்டும் மசாலா அதே தான்.
🍱 தேவையான பொருட்கள்:
2 கப் தேங்காய் பால்
2 கப் (கழுவி 1ஃ2 மணி நேரம் ஊர வைத்தது) பாஸ்மதி அரிசி
1 கப் அரைத்த தக்காளி
1 (நறுக்கியது) வெங்காயம்
1ஃ2 கப் கொத்தமல்லி
2 டேபிள் ஸ்பூன் நெய்
1 டீஸ்பூன் ஏலக்காய்
1 துண்டு பட்டை
1 பிரியாணி இலை
தேவைக்கேற்ப உப்பு
🍴 செய்முறை:
பச்சை பட்டாணியை வேக வைக்கவும். பாஸ்மதி அரிசியைக் கழுவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
நெய்யில் பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றை வறுக்கவும்.
பிறகு அதில் அரிசியை சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும். அரைத்த தக்காளியை சேர்க்கவும். தேங்காய் பாலைச் சேர்க்கவும். பச்சை பட்டாணி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிடவும். மூடி வைத்து குறைந்த தீயில் புலாவ், உலர்ந்த நிலை வரும் வரை சமைக்கவும்.
பொன் நிறத்தில் வெங்காயத்தை வதக்கவும்.
வெங்காயத்தையும், நறுக்கிய கொத்தமல்லியையும் மேலே தூவி சூடாக பரிமாறவும்.
No comments:
Post a Comment