Sunday, March 20, 2022

முட‌க்கத்தான் கீரை சட்னி

 முட‌க்கத்தான் கீரை சட்னி 

 முட‌க்கத்தான் கீரை எலும்புகளுக்கு மிகவும் உகந்தது. எலும்புகளுக்கு சக்தி அளிக்கும் இந்த முட‌க்கத்தான் கீரையில் சட்னி செய்து பரிமாறினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.

🍱 தேவையானவை: 

முட‌க்கத்தான் கீரை - 1 கட்டு, நறுக்கிய வெங்காயம் - 1 கப், பச்சை மிளகாய் - 1, எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப, மஞ்சள் தூள் - 1ஃ4 ஸ்பூன், மிளகாய் தூள் - 1 ஸ்பூன், தனியா தூள் - 1ஃ2 ஸ்பூன், எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் 

🍴 செய்முறை: 

வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும்.

முட‌க்கத்தான் கீரை சுத்தம் செய்து தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அரைத்துவைத்த விழுதுகளை ஒன்றாக கலந்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். 

இந்த கலவை வதங்கியபிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கி கெட்டிப்பட்டதும் எலுமிச்சை சாறு ஊற்றி இறக்கவும்.



No comments:

Post a Comment