புளி உற்றிய அப்பளக் குழம்பு செய்வது எப்படி?
அப்பளத்தில் பெரும்பாலும் கூட்டு தான் செய்வார்கள். ஆனால் இப்படி வித்தியாசமாக புளி ஊற்றி அதுவும் வத்தக்குழம்பு ருசியில் செய்து சாப்பிட்டு பாருங்கள்..
அவ்வளவு சுவையாக இருக்கும். காய்கறி விலை ஏறிக்கொண்டே போகும் இந்த நேரத்தில் இந்த குழம்பு உங்களுக்கு கை கொடுக்கும்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 2 tbsp
கடுகு - 1 tsp
வெந்தயம் - 1/2 tsp
பூண்டு - 5 பற்கள்
கறிவேப்பிலை - சிறிதளவு
சீரகம் - 1/2 tsp
வெங்காயம் - 3
தக்காளி - 2
மிளகாய் தூள் - 2 tbsp
மஞ்சள் - 1 tsp
உப்பு - தே.அ
புளி - ஒரு எலுமிச்சை அளவு
செய்முறை :
புளியை ஊற வைத்து தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அப்பளம் பொரித்து வைத்துக் கொள்ளுங்கள். கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு , வெந்தயம், சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக பூண்டு சேர்த்து வதக்குங்கள். பின் கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்குங்கள்.
வதங்கியதும் மஞ்சள், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்குங்கள். பச்சை வாசனை போனதும் புளித்தண்ணீர் ஊற்றுங்கள். 10 நிமிடம் கொதிக்க வையுங்கள்.
தண்ணீர் வற்றியதும் அப்பளத்தை மூன்று துண்டாக உடைத்து போடுங்கள். பின் லாவகமாக பிரட்டுங்கள். அப்பளம் உடையக் கூடாது. அடுப்பை அணைத்து விடுங்கள்.
No comments:
Post a Comment