Sunday, March 13, 2022

ரவா சீடை

 🆎👨‍🍳3️⃣✍️

ரவா சீடை !!

குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க விரும்பினால் அவர்களுக்கு ரவா சீடை செய்து கொடுக்கலாம். இப்போது சுவையான ரவா சீடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

🆎தேவையான பொருட்கள்:-

ரவை - கால் கப்
பச்சரிசி - 2 கப்
ஜவ்வரிசி - அரை கப்
பச்சை மிளகாய் - 4
புளித்த தயிர் - 1 கப்
பெருங்காயம் - 1 சிட்டிகை
எள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

🆎செய்முறை :-

👉 அரிசியை ஊற வைத்து, நிழலில் உலர்த்தி சற்று ஈரத்துடன் இருக்கும் போதே மெஷினில் கொடுத்து அரைக்க வேண்டும்.

👉 இந்த மாவை வெறும் கடாயில் குறைந்த தீயில் வறுக்க வேண்டும். மாவை இறக்கி ஆற விட்டு நன்கு சலிக்க வேண்டும்.

👉 ஜவ்வரிசி, ரவையுடன் தயிர் சேர்த்து, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 5 முதல் 6 மணி நேரம் ஊற வைத்து அரைக்க வேண்டும். பின்பு சலித்த மாவுடன் அரைத்த மாவை சேர்க்க வேண்டும். பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

👉 பெருங்காயம், பச்சை மிளகாய் விழுது, உப்பு, எள் ஆகியவற்றை சேர்த்துப் பிசைந்து உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டும். 

👉 இப்போது சுவையான ரவா சீடை ரெடி.

No comments:

Post a Comment