👉செந்தமிழ் நாடு குழுவின் இன்றைய சமையல் டிப்ஸ் !!
👉 மழை மற்றும் குளிர் காலங்களில் தயிர் உறையாது. உறையூற்றும் போது பாலைச் சற்று சூடாக்கி ஊற்றி ஒரு பாத்திரத்தையும் கவிழ்த்து மூடிவிட்டால் விரைவில் உறைந்துவிடும்.
👉 டீ போடும்போது, டீத்தூளுடன் சர்க்கரையை சேர்த்து கொதிக்க விடாதீர்கள் டீ-யின் சுவை குறைந்துவிடும்.
👉 கீரை மசியல் செய்ய கீரையை கடையும் போது அதனுடன் கால் டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கடைய கீரை தனிசுவையுடன் இருக்கும்.
👉 இரண்டு மிளகு, அரை டீஸ்பூன் தனியா தூளை தேநீர் கொதித்து வரும்போது தூவி இறக்கி வடிகட்டி சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும். களைப்பு நீங்கும்.
👉 உடல் எடை குறைந்தவர்கள் வாழைப்பழம் தினமும் இரவில் சாப்பிட்டு வந்தால் எடை கூடும்.
👉 துவரம் பருப்பு துவையல் தயார் செய்யும்போது, சிறிது கொள்ளினையும் வறுத்து சேர்த்து அரைத்தால் சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும். உடலுக்கு நல்லது.
👉 பஜ்ஜி மாவில் நாலைந்து பூண்டு பற்களை அரைத்தும், ஒரு டீஸ்பூன் சீரகத்தைப் பொடித்து போட்டு பஜ்ஜி செய்தால், பஜ்ஜி நல்ல சுவையுடனும் இருக்கும். கடலை மாவினால் வரும் வாயு தொல்லைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
👉 ஓவனில் இருந்து பாத்திரத்தை வெறும் கைகளால் எடுக்கக்கூடாது. க்ளவுஸ் அல்லது பிடித் துணியை பிடித்து தான் எடுக்க வேண்டும். ஓவனில் அலைகள் அதிகமாக இருக்கும். கை சிறிது தவறினாலும் காயம் ஏற்படலாம்.
👉 அடிக்கடி உபயோகப்படுத்தும் எவர்சில்வர் டீ வடிகட்டி அடைத்துக் கொண்டு இருந்தால், அதனை சில நிமிடங்கள் நெருப்பில் காட்டிய பிறகு கழுவி விட்டால் அடைப்பு நீங்கி பளிச்சென்று இருக்கும்.
👉 காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து இதை செய்தால் உடல் எடை குறையும்.
No comments:
Post a Comment