🆎👨🍳4️⃣✍️
சமையல் டிப்ஸ் !!
👉 பச்சை மிளகாய் அதிகமாக இருந்தால் காம்பு நீக்கி உப்பு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளலாம். அதில் அரைமூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்து தேவையான போது உபயோகப்படுத்தலாம்.
👉 வடைக்கு அரைக்கும் போது மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால் ஒரு தேக்கரண்டி நெய் விட்டால் மாவு இறுகிவிடும்.
👉 கேரட் அல்வா செய்யும் போது கேரட்டைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு பின்பு குளிர்ந்த தண்ணீரில் சிறிது நேரம் வைத்து தோலை சீவினால் மிக சுலபமாக தோலை நீக்கி விடலாம்.
👉 கத்தரிக்காய் கூட்டு, பொரியல் செய்யும் போது கொஞ்சம் கடலை மாவை தூவிப் பாருங்கள். கூட்டு, பொரியல் சுவையாக இருக்கும்.
👉 பீன்ஸ், கேரட், முள்ளங்கி, பச்சைமிளகாய் எல்லாம் வதக்கி அரைத்துக் கொண்டு பிறகு தேவையான அளவு உப்பும், தேங்காயும் சேர்த்து சட்னி அரைத்தால் உடலுக்கு ஊட்டச்சத்து கொடுக்கும் சட்னியாக இருக்கும்.
👉 சாம்பார், கீரை, புளிப்பு கூட்டு போன்றவற்றைக் கொதித்து இறக்கும் சமயம் துளி வெந்தயப் பொடி தூவி இறக்கினால் நல்ல வாசனையாக இருக்கும். உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.
👉 இஞ்சி, பச்சைமிளகாய், தேங்காய் சேர்த்து அரைத்து அதோடு பரங்கிக்காயை வேக வைத்து மசித்துக் கலந்து கொள்ளவும். இக்கலவையை தயிரில் கலந்து உப்பு சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். அருமையான பரங்கிப் பச்சடி தயார்.
👉 நீர் மோரில் தக்காளிப் பழத்தைக் கசக்கிப் போட்டு கூடவே கறிவேப்பிலை, மல்லி இலை, பச்சை மிளகாய், சிட்டிகை பெருங்காயத்தூள் கலந்து சாப்பிட்டால் ருசியும் மணமும் சூப்பராக இருக்கும்.
👉 மரவள்ளிக் கிழங்கை அப்படியே வேக வைத்துச் சாப்பிடுவதை விட அதில் கொஞ்சம் தேங்காய் துருவலும், சர்க்கரையும் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
👉 பாயசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment