Sunday, March 6, 2022

ஷிணாமுகி ஆஞ்சநேயர் கோவில்

 இன்றைய கோபுர தரிசனம்...

அருள்மிகு தக்ஷிணாமுகி ஆஞ்சநேயர் கோவில் , ரத்தன்பூர் , சத்தீஸ்கர் மாநிலம்

சத்தீஸ்கர் மாநிலத்தின் ரத்தன்பூர் என்ற இடத்தில், பிரசித்தி பெற்ற, "தக்ஷிணாமுகி' ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

வழக்கமாக ஆணாக வழிபடும் ஆஞ்சநேயர், இந்த கோவிலில் பெண்ணாக வழிபடப்படுகிறார்.

ஒரு தோளில் ராமபிரானையும், மற்றொரு தோளில் சீதா தேவியையும் சுமந்து நிற்கும் இந்த ஆஞ்சநேயர், பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக, இப்பகுதியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்த கோவிலை, அப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் கட்டியதாகவும், அவர் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர், கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவரை பெண்ணாக சிலை வடித்து வழிபடுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்த பகுதியை பிரித்திவ் தேவ்ஜி என்ற அரசன் ஆண்டு வந்தான், அவன் தோல் வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தான். அவன் ஆஞ்சநேயரை மனதார வேண்டினான், அப்போது அவன் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர் ஒரு இடத்தை கூறி , அந்த இடத்தில் தனது சிலை இருப்பதாகவும், அதை எடுத்து கோவில் கட்டி வழிபடுமாறும் கூறினார். அந்த இடத்தில் சிலையை கண்டெடுத்த அரசன் அது ஆஞ்சநேயர் பெண் வடிவத்தில் ஶ்ரீராமர் மற்றும் சீதாவை தூக்கிச் செல்வது போல் இருப்பதை பார்த்து அதிசயித்தான். அப்போது மீண்டும் ஆஞ்சநேயர் அவன் முன் தோன்றி ஒரு முறை ஶ்ரீராமர் தன்னிடம், என்னையும் சீதா தேவியையும் தாய் குழந்தைகளை காப்பது போல் காக்கிறாயே என்று சொன்னார், அதனால் நான் தாயாக நினைத்து ஶ்ரீராமர் சீதா தேவியை காப்பது போல் நானே வடிவமைத்த சிலை இது. இங்கு வந்து என்னை வழிபடுபவர்களுக்கு நான் சகல வியாதிகளையும் குணப்படுத்துவேன் என்று அருளினார். அதேபோல் சில நாட்களில் பிரிதிவ் தேவ்ஜி யின் வியாதியும் குணமானது.

இது ஆன்மீக பூமி,

சித்தர்களும்,மகான்களும், முனிவர்களும்,யோகிகளும், மகரிஷிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஸ்ரேஷ்டர்களும், நமது இறைவனும், நமது பரமாத்மாவும், வாழ்ந்த, வாழ்ந்து நடமாடிக் கொண்டிருக்கும் மண்.

ௐ ஶ்ரீ ராமஜெயம், 

ராம நாமமே சொன்னால் அங்கே வருவார் ஹனுமார், க்ஷேமங்கள் யாவையும் தருவார், ஶ்ரீ ராம பக்த ஹனுமார்.



No comments:

Post a Comment