Saturday, March 12, 2022

இளங்காடு ஸ்ரீவைகுண்டவாசப்‌ பெருமாள்‌ கோயில்‌

 🌹🌺 " “ சுமார்‌ 3,000 ஆண்டுகளாகத்‌  தொடர்ந்து திருவாராதனம்‌ நடைபெற்று வரும் ஸ்ரீவைகுண்டவாசப்‌ பெருமாள்‌ கோயில்‌ - விளக்கும் எளிய கதை 🌹🌺

----------------------------------------------------------

🌺🌹“திருவண்ணாமலை மாவட்டம்‌, வந்தவாசியிலிருந்து 5 மைல்‌ தூரத்தில்‌ 'இளங்காடு' என்னும்‌ ஓர்‌ அழகிய சிற்றூர்‌ உள்ளது. அங்கு பெரும்பகுதி மக்கள்‌ விவசாயம்‌ செய்து வாழ்ந்து வருகின்றனர்‌. 

🌺இவ்வூரில்‌ பழம்‌ பெருமை வாய்ந்த ஸ்ரீ பூமிநீளாதேவி சமேத ஸ்ரீ வைகுண்டவாசப்‌ பெருமாள்‌ கோயில்‌ உள்ளது.

🌺இக்கோயில்‌ சோழர்‌ காலத்திலும்‌, பல்லவர்‌ காலத்திலும்‌ மிகப்‌ புகழுடன்‌ விளங்கியதாகத்‌ தெரியவருகிறது.

🌺சுமார்‌ 3,000 ஆண்டுகளாகத்‌ தொடர்ந்து திருவாராதனம்‌ நடைபெற்று வருவதாக கர்ண பரம்பரைத்‌ தகவல்‌ தெரிவிக்கிறது.

🌺இந்தக்‌ கோயிலில்‌ வீற்றிருக்கும்‌ பெருமாள்‌ ஸ்ரீ  பூமிநீளாதேவி சமேதராய்‌ ஏழரை அடி உயரத்தில்‌ மிகவும்‌ அபூர்வமான திருமுகமண்டலத்துடன்‌ சேவை சாதிக்கிறார்‌. திருமழிசை ஆழ்வார்‌ இந்‌தப்‌ பெருமாளை மங்களாசாசனம்‌ செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

🌺திருமழிசை ஆழ்வார்‌ சைவ மதத்தைத்‌ தழுவியிருந்தபோது,இந்தக்‌ கோயிலின்‌ அருகில்‌.அமைந்திருந்த சிவன்‌ கோயிலுக்கு வருகை தருவதுண்டு.

🌺அப்பொழுது, இந்தப்‌ பெருமாளையும்‌ மங்களாசாசனம்‌ செய்துள்ளார்‌.

 இப்பகுதியை ஆண்ட அரசர்‌, ஸ்ரீவைகுண்டவாசப்‌ பெருமாள்‌ கோயில்‌ தர்மகதம்‌, முதல்‌ மரியாதை முதலிய பொறுப்புகளை

இவரிடம்‌ ஒப்படைத்துள்ளார்‌. அன்றுமுதல்‌ இன்‌றுவரை அந்த வம்சாவளியினர்‌ தொடர்ந்து நிர்வாகம்‌ செய்து வருகின்றனர்‌.

🌺ஒருகாலத்தில்‌ இங்கு பெரிய மகான்கள்‌ வாழ்ந்‌திருந்தனர்‌. எப்போதும்‌ வேத கோஷங்களுடனும்‌ யாக யக்ஞம்  செய்தும்‌ வந்திருக்கின்றனர்!பிரசித்திபெற்ற திருத்தலமாக இருந்திருக்கிறது.

🌺சமீபத்தில்‌ கண்டெடுக்கப்பட்ட கல்வெட்‌டில்‌ இவ்வூரின்‌ பூர்வீகப்‌ பெயர்‌ *வெங்குணம்‌

கோட்டத்து பொன்னூர்‌ நாட்டு இளங்காடாம்‌ அழகிய சோழநல்லூர்‌' எனக்‌ குறிப்பிடப்பட்டுள்ளது.

🌺வைகுண்டவாசப்‌ பெருமாளை ஒருமுறையாவது பக்தர்கள்‌ சேவித்துவிட்டு வந்தால்‌, தாங்‌கள்‌ நினைத்திருக்கும்‌ அனைத்து காரியங்களும்‌. சித்தியாகும்‌ என்பது நம்பிக்கை.

🌺இதைக்‌ கண்ணுறும்‌ பக்தர்கள்‌ இந்தப்‌ பெருமாளின்‌ அருளைப் பெறலாம்‌.🌹🌺






No comments:

Post a Comment