🌹🙏திருப்பதி முதல் திருமலை வரை...ஒரு விரிவான 🚐பயணத்தொகுப்பு
By சுஜாதா &வெங்கடேசன்
பகுதி 7 கோவிந்த ராஜர் சன்னதி
ஒரு சந்நிதியை மட்டும் பார்த்துட்டு வெளிவரமுடியாதபடி கயிறு கட்டி ஒரு அரேஞ்ச்மெண்ட். எக்ஸிபிஷனில் ஒவ்வொரு ஸ்டாலாக வரிசையாப் பார்த்துண்டு வர்றதைப்போல நாலு சந்நிதிகளைப் பார்த்துட்டுத்தான் வெளியே வரமுடியும்.
கோவிந்தராஜர், கிடந்த கோலம். பாம்புப் படுக்கை! காலடியில் அரக்கர்கள் மதுவும் கைடபரும்.(மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே.... நினைவிருக்கோ?)
அவரைக் சேவிச்சபிறகு அடுத்த சன்னதியில் நம்ம பார்த்தஸாரதியும் அவர் கூட இருக்கும் ருக்மிணி சத்யபாமாவும்..! (வேறெங்கேயும் இப்படி பார்த்த நினைவில்லை எனக்கு!) கல்யாணவெங்கடேஸ்வர் ஒரு சந்நிதியில் இருக்கார். ஆண்டாள் சந்நிதியில் பிரஸாதமா அக்ஷதை கிடைச்சது. அப்புறம் நம்ம ஆஞ்சநேயர் பெரியதிருவடின்னு சகலரையும் சேவிச்சுக்கிட்டே கயித்தை விட்டு வெளியே வர்றோம்
சந்நிதிகளில் பொதுவான விஷயம்ன்னா ஒன்னே ஒன்னுதான்..... 'தக்ஷிணை போடு. தக்ஷிணை போடு'ன்னு எல்லா மொழிகளிலும் சொல்லிக்கிட்டே இருக்கா.... என்ன ஆஸ்வாசம்ன்னா... எவ்வளவுன்றதையும் அவாளே சொல்லிடறதால் நமக்குப் பிரச்சனை இல்லை. பத்து ரூபா, பதி ரூபாய்லு, ஹத்து ருப்யா, தஸ் ருப்யா....
திருமலை கோவில் வருமுன்னேயே இங்கே கீழ்த்திருப்பதியில் சின்ன அளவில் கோவிந்தராஜர் கோவில் வந்துருக்கு. 1500 வருசங்களுக்கு முன்னே! அதனால் இவர் ஸ்ரீநிவாஸனுக்கு அண்ணன்!
இவரை சேவிச்சு, இவர் அனுமதி வாங்கிக்கிட்டுத்தான் மலையேறணும்ன்னு ஒரு சம்ப்ரதாயம் இருக்கு.
அண்ணன் என்ற ஹோதாவில் இருப்பதால், மேலே மலையில் தம்பிக்குக் கிடைக்கும் எல்லா காணிக்கைகளையும் தினசரி மாலை கீழே கொண்டுவந்து இவரிடம் கணக்கு காமிச்சுட்டுத்தான்
கஜானாவுக்கு அனுப்பணும் என்பது வாடிக்கை. இவர் அந்தக் கால கணக்குப்பிள்ளை.. கணக்கு சரியா இல்லைன்னா அவ்ளோதான்.
காலப்போக்கில் இந்த சம்ப்ரதாயமும் மாறிப்போச்சு. வாடிக்கை மறந்ததும் ஏனோ? அப்போ அவ்வளவாக் கூட்டம் இல்லை. இப்ப மக்கள் வெள்ளம் பெருகிப்போய் தினசரி வசூலே கோடிகளைத் தாண்டும்போது அவ்ளோ காசையும் மூட்டைக் கட்டிக்கொண்டுவர்றது கஷ்டமில்லையோ.... அதனாலே....
அங்கேயே எண்ணி முடிச்சுக் கணக்குகளை மட்டும் இங்கே தினசரி கொண்டு வந்து காட்டிடறாங்க.
இதுக்கு முன்னாடி வந்தப்ப கூட்ட நெரில்ல சரியா சேவிக்காததையும் சேர்த்து புக்காத்து ஊர்
(சிதம்பரம்) பெருமாளை சேவிச்சுக்கறேன்.
கதையை கேட்டு தசாவதாரம் சினிமா நினைவுக்கு வரது.
கல்லை மட்டும் கண்டால்னு வாய் முணுமுணுக்கறது.
திருப்பதி தெரியாத உண்மைகள்
1)பெருமாளுக்காக மறைக்கப்பட்ட கிராமம் : ஆம், பெருமாளுக்கு சார்த்தப்படும் பூ, அபிஷேகப் பால், நெய், மோர் , தயிர் , துளசி இலைகள் இவை எல்லாமே ஒரு கிராமத்திலிருந்து பிரதியேகமாகக் கொண்டு வரப்படுகிறது. அந்த கிராமமே பெருமாளுக்காக மட்டுமே வேலை பார்க்கிறது. இது திருப்பதியிலிருந்து 22 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. அங்கு இதுவரை யாரும் சென்றதில்லை. அனுமதித்ததில்லை. கோவில் அர்சகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
2)பலருக்கும் திருப்பதியின் பெருமாள் சிலை சன்னதியின் நடுவில் இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால் சிலை சன்னதியின் வலது கை மூலையில் அமைந்துள்ளது.
3)பெருமாளின் உண்மையான முடி : பெருமாளின் உருவத்தில் பதிக்கப்பட்டிருக்கும் முடி உண்மையானது என சொல்லப்படுகிறது. அதாவது பெருமாள் பூமிக்கு வந்தபோது நிகழ்ந்த போர்க்களத்தில் அவருடைய முடியின் சிலவற்றை இழந்துள்ளார். இதை அறிந்த காந்தர்வ பேரரசி நீலா தேவி இதை கவனித்துவிட்டு தன்னுடைய கூந்தலை அறுத்து பெருமாளின் சிலை முன்பு வைத்துவிட்டு அதை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டியுள்ளார். அதை ஏற்றுக்கொண்டு அவர் தலையில் சூடிக்கொண்டுள்ளார். அதனால்தான் பெருமாளை தரிசிக்கும் ஒவ்வொருவரும் தங்கள் முடியை தானமாக பெருமாளுக்குக் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.
No comments:
Post a Comment