Thursday, March 17, 2022

எண்ணப்பறவை_58

எண்ணப்பறவை_58

'என்னடா ஆச்சு இன்டர்வ்யூ?'

'நல்லா பண்ணியிருக்கேன் ஏகேண்ணா.  ஐஜியோட ரெக்கமெண்டேஷனும் இருக்கரதால ஒர்க் அவுட் ஆயிடும்னு நெனைக்கிறேன்.'

'நாங்க எவ்வளவோ சொல்லியும்  கேட்கல.  இப்ப ஐஜி சொன்னவுடனே மனசு மாறிடுச்சாக்கும்.  எனிவே ஐ அம் வெரி ஹாப்பி.'

'அப்படி இல்லை ஏகேண்ணா.  கொஞ்ச நாளாவே மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது.  அமுதாவோட அப்பாகிட்ட சரின்னு சொல்லிட்டு வேண்டாம்னு மறுக்கரதுக்கு.  டு bபீ ஆனஸ்ட்,  என்னவோ அவ என்ன ரொம்ப அட்ராக்ட் பண்ணிட்டா.  எப்படின்னு சொல்லத் தெரியல.  ப்ராபப்ளி, அவளோடு போல்ட்நெஸா இருக்கலாம்.'

'ம்ம்ம்... நடத்து நடத்து.  கனவுக் கன்னிய மிஸ் பண்றோமேன்னு துடிச்சு போயிட்டியாக்கும்.'

'அப்படியெல்லாம் இல்லண்ணா.  அவ அன்னிக்கு பாஸ்புக் விஷயத்துல செஞ்ச குறும்பு ரொம்ப பிடிச்சிருந்தது.  அவ ஆத்துக்கு அன்னிக்கு போனபோது காட்டின ரிஸப்டிவிடி, என் கிட்ட தைரியமா பேசினது, அம்மா கிட்டேயும் அதே தைரியத்தோட பேசினது இதெல்லாம் அவள நான் மிஸ் பண்ணக் கூடாதுன்னு உருத்திண்டேதான் இருந்தது.  அந்த ஐஜி அவளப் பத்தி பெருமையா பேசினதை கூட ரொம்ப ரசிச்சேன்.  நீங்கள்லாம் வேற சொல்லிண்டிருந்தேள்.  எல்லாமே காரணமா இருந்தது.  அதான் உண்மை.'

'பவானி கூட அந்த அமுதாவ பத்தி ரொம்ப புகழ்ந்துண்டே இருப்பா, பார்த்ததிலேந்து.  குமுதா ராமனுக்கும் அமுதா உனக்கும் தான் கனப் பொருத்தமா இருக்கும்னு அடிக்கடி என் கிட்ட  சொல்லிண்டிருப்பா.'

'எல்லாமே கனவுல நடக்கிற மாதிரி இருக்குண்ணா.  பேங்கில பார்த்தது, அவாத்துக்கு போனது, அம்மாக்கு அவள பிடிச்சது, ஏன் இப்ப ஐஜியோட பேசிட்டு வந்த வரைக்கும் எல்லாமே ...'

'ஊப்பர்வாலா உங்க ரெண்டு பேரையும் சேர்த்து பார்க்க ஆசைப்பட்டிருக்கார்.  அதான் கொஞ்சம் வேக வேகமா காய நவத்திண்டிருக்கார்.'

'அதெல்லாம் கிடக்கட்டும் அரவிந்த். டஃபேல கடைசியா என்னதான் சொன்னா?'

'சம்பளம் எவ்வளவு எதிர்பார்கறேன்னு கேட்டா.  சொன்னேன்.  அமூல் ஆர்டரையும் காமிச்சேன்.  இப்ப சத்திக்கு அக்கௌண்ட்ஸ் ஆஃபீஸர் டெஸிக்னேஷன் தான் தரமுடியும்னு சொன்னா.  சரின்னு சொல்லிட்டேன்.   ஸிக்ஸ் மந்த்ஸ் ப்ரொபேஷனாம்.  ஓரளவு எல்லாத்தையும் சொல்லிட்டா.  ஆனா எம்டி மூலம் இன்டர்வ்யூ நடக்கறதால சம்பளத்த அவர்தான் டிஸைட் பண்ணுவாராம்.  நாளைக்கு மூணு மணிக்கு வர சொல்லியிருக்கா.  பார்க்கலாம்.'

'அப்ப அமூல் கம்பெனிக்கு என்ன சொல்லப்போற?'

'அதுக்குதான் இன்னும் அஞ்சு நாள் இருக்கே.  நாளைக்கு தெரிஞ்சுடும் எப்படியும்.  பார்த்துக்கலாம்.'

'சொல்ல மறந்துட்டேனே.  கிழம் என்ன கூப்பிட்டுது.  நீ ராஜினாமா செஞ்சதுக்கு என்ன திட்டித்து.  உன் வேலையையும் நைஸா என் தலைல கட்டிடுத்து.'

அனந்த கிருஷ்ணன் கிழம் என்று சொன்னது உட்லண்ட்ஸ் ஹோட்டலின் ஜெனரல் மேனேஜரை.

'என்னால உங்களுக்கு கஷ்டமா?'

'அதனால என்ன?  பரவாயில்லடா.  நீ நல்ல வேலைக்கு போனா அங்க என்ன நைஸா இழுத்துக்க மாட்டியா என்ன?'

'உங்களுக்கு நல்ல டேலண்ட் இருக்குண்ணா.  நீங்க தான் முயற்சி எடுக்க மாட்டேங்கறேள்.'

'கொஞ்சம் பையனுக்கு ரெண்டு மூணு வயசாகட்டும்.  அப்புறம் எங்க வேல கெடச்சாலும் போயிடலாம்.  இந்த ஹோட்டல் வேல ஓரளவு செட் ஆயிடுத்து.  அதான் ஓடற வரைக்கும் ஓடட்டும்னு விட்டுட்டேன்.  உன் கிட்ட சொல்றதுக்கென்ன,  எனக்கும் ஒரு உறுத்திண்டே தான் இருக்கு.  பவானி ஆத்து ஸ்டேட்டஸுக்கு ஈடு கொடுக்க முடியலையேன்னு.  ஏதோ நல்ல இன் லாஸ் கெடச்சதால பெரிசா தெரியல.  உங்க மன்னிக்குதான் அதையும் இதையும் வாங்கி கொடுக்க முடியலையேன்னு அடிக்கடி வருத்தம் வரும்.'

'கவலப் படாதீங்கோண்ணா.  நன்னா வருவீங்க நீங்க.'

'சரி சரி.  வேற ஏதோ டாபிக் மாறுதே.  நாளைக்கு உனக்கு டஃபே வேல கன்ஃபர்ம் ஆன உடனே முதல்ல அந்த அமுதாவ போய் பாரு.  ஏற்கனவே அந்த புள்ள கண்ணீரும் கம்பலையுமா இருக்கும்.  கர்ச்சீஃப எடுத்துண்டு போடா மறக்காம.  தொடச்சு விடணும்.'

'போங்கோண்ணா.  இந்த விளையாட்டுத் தனம் உங்களுக்கு எப்பத்தான் போகுமோ.'

'வாழ்க்கைல நிறைய பேர பாக்கறோம்.   ஆனா சில பேர் கிட்டதான் மனசு ஒட்டிக்கறது.  எனக்கென்னவோ இங்க நீ வேலைக்கு சேந்ததிலேந்தே உன்ன ரொம்ப பிடிச்சு போச்சு.  நீ நன்னா வந்து பிரமாதமா லைஃப லீட் பண்ணனும்.  பண்ணுவ.'

'ஐ ஆம் bப்ளெஸ்ட் ஏகேண்ணா.'

தொடரும்...

(இன்னும் இரு அத்யாயங்களில் கதை நிறைவு பெறும்.... அப்பாடா)

No comments:

Post a Comment