Thursday, March 17, 2022

எண்ணப்பறவை_57

எண்ணப்பறவை_57

'ஐயா, வந்துட்டாங்க'

'ம்ம் .. உள்ள அனுப்பு.'

'வாங்க வாங்க.   ப்ளீஸ் பீ ஸீட்டெட் அண்ட் பீ ரிலாக்ஸ்ட்.  என்ன சாப்ட்ரீங்க?  ஹாட் ஆர் கோல்ட்?.'

நெளிகிறான் அரவிந்த்.  பதில் இல்லை.  எனிதிங் என்பதை உணர்த்தும் வகையில் ஒரு சைகை.  அதைத் தொடர்ந்து 'நல்ல கூலா மேங்கோ ஜூஸ் வாங்கிட்டு வா' உத்தரவு.

'சாரி அரவிந்த்.  உங்கள ஆஃபீஸ் டைத்துல டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.  கொஞ்சம் அவசரம் காட்டலாமேன்னுதான் வரச்சொன்னேன்.'

'பரவாயில்ல சார்.  ஐ அம் டிலைட்டட் டு மீட் யூ.  இவ்வளவு பெரிய அதிகாரிகிட்டேந்து எனக்கு அழைப்பு வரும்னு நான் துளி கூட நெனைக்கல.'

சிரித்துக் கொண்டே, 'யூ நோ ஒன் திங்.  இப்படி ஒரு பெரிய அதிகாரியா நான் வருவேன்னே நான் நெனைக்கல.  வாழ்க்கைல எது வேணா எப்ப வேணா மாற்றம் கிடைக்கும்.  நாமதான் நல்ல வாய்ப்பை வரும்போது தவறாம பயன்படுத்திக்கணும்.  அதுவும் குறிப்பா நல்ல லைஃப் பார்ட்னரை தேர்ந்தெடுக்கறதுல.  நான் சொல்றது சரிதானே.'

இப்படி சொல்லிவிட்டு அவர் காட்டிய புன்முறுவல் அவர் எதற்காக தன்னை அழைத்திருக்கிறார் என்பது அரவிந்துக்கு புரிந்தது.  இருப்பினும் அவராக வெளிப்படையாக பேசும் வரை காத்திருக்க நினைத்தான்.

'அரவிந்த், நீங்க என்ன படிச்சிருக்கீங்க?'

'எம்.காம்.  ICWA இன்டர் முடிச்சிட்டு ஃபைனல் எழுதப்போறேன் சார்.'

'க்ரேட்.  நான் உங்கள எதுக்காக வரவழச்சேன் தெரியுமா?'

'தெரியும்.  நீங்களே ஆரம்பிங்க.  நான் பதில் சொல்றேன்.'

'யூ ஆர் ஸோ bபோல்ட் அண்ட் இண்டெலிஜென்ட்.  யூ இம்ப்ரெஸ் மீ ஸோ மச்.  அமுதா மேடம் ரொம்ப கொடுத்து வெச்சவங்க.'

'சார்.  நேராகவே விஷயத்துக்கு வரேன்.  எனக்கு அவங்கள பிடிச்சிருக்கு.  ஆனா எனக்கு புது வேலை குஜராத்துல கெடச்சிருக்கு.  அவங்க வேலைய விடறதுல தயக்கம் காட்டறாங்க.  எனக்கு என் உத்யோகத்துல கெடைக்கற நல்ல சந்தர்பத்தை பயன்படுத்திக்கணும்னு நெனைக்கிறேன் சார்.  வேற ஒண்ணும் இல்லை.'

'கரெக்ட் நீங்க சொல்றது.  ஆனா வேற சந்தர்பங்கள் வராதா என்ன?  அதுவும் இங்கேயே நல்ல சம்பளத்துல.  ஏன் நாளைக்கே கூட வரலாமே இல்லையா?'

'சார், நீங்க என்ன சமாதானப் படுத்த முயற்சிக்கிறீங்கன்னு நெனைக்கிறேன்.'

'இல்ல அரவிந்த்.  எங்க எல்லாருக்கும் அமுதாவோட ஒர்க் பிடிக்கும்.  வெரி ஸ்மார்ட் அண்ட் இண்டெலிஜெண்ட் லைக் யூ.  இன் ஃபேக்ட், நீங்க ரெண்டு பேருமே மேட் ஃபார் ஈச் அதர் மாதிரி தெரியுது.  அவங்க வேலைய விடறத நாங்க யாருமே விரும்ப மாட்டோம்.  ரொம்ப சீக்கிரம் இங்க உள்ள அத்தனை போலிஸ் ஆஃபீஸுகளுக்கும் ஒரு பெஸ்ட் கோஆர்டினேடரா இருக்காங்க.  ஒரு ஸெல்ஃபிஷா கூட நான் உங்க கிட்ட கேட்கறதா வெச்சுக்கங்க.  கல்யாணத்த பண்ணிக்கங்க.  அவங்க வேலை பார்க்கட்டும்.  உங்களுக்கும் நல்ல வேலை மெட்ராஸுலேயே கிடைக்காமலா போகப்போறது.  நல்லா யோசிங்க.  ஏற்கனவே சொன்ன மாதிரி நல்ல பார்ட்னர் கிடைக்கப்போற சமயத்துல அத லூஸ் பண்ணலாமா சொல்லுங்க.'

'இல்லை சார்.  நான் உறுதியா இருக்கேன்.  அவங்க உத்யோகத்த விட்டுட்டு என்னோட வரதுதான் எனக்கு சரின்னு படுது.'

'சரி, நாளைக்கே ஒரு நல்ல உத்யோகமா நல்ல சம்பளத்தோட நல்ல பதவியோட உங்களுக்கு நான் ஏற்பாடு செஞ்சு கொடுத்தா உங்க பிரச்சனை தீர்ந்துடுமா.  விளையாட்டா சொல்லல இத.  ஸீரியஸாவே சொல்றேன்.'

என்ன சொல்வதென்று புரியவில்லை அரவிந்துக்கு.  எதற்கும் தற்சமயம் இருக்கட்டும் என்று 'பார்க்கலாம்' என்றான்.

'தட்ஸ் குட்' என்று சொல்லி விட்டு டஃபே கம்பெனியின் விவரங்களை கூறுகிறார்.

'என் மீது இவ்வளவு அக்கறை எடுத்துகிட்டதற்கு நன்றி சார்.'

'அப்படி இல்ல அரவிந்த்.  நல்ல இளைஞர்கள் நல்லா படிச்சு நல்ல உத்யோகம் பார்த்து நல்லா வாழ்க்கைய அமச்சுக்கணுங்கற ஒரு சின்ன ஆசைதான்.  அமுதாவை உங்களுக்கு தெரிந்தத விட எங்களுக்கெல்லாம் கூட தெரிய வாய்ப்பு கெடச்சிருக்கு இல்லையா?  இரண்டு வருஷமா அவங்கள பார்த்துகிட்டு வரோம்.  ரொம்ப நல்ல பொண்ணு.  இந்த காலத்துல கணவன் மனைவி ரெண்டு பேரும் வேலை செய்யறது நல்லது.  சீக்கிரமா நம்ம குடும்பத்த பொருளாதாரத்துல முன்னேத்திக்கலாம்.'

'புரியுது சார்.  தெரியாம இல்ல.  எங்க குடும்பத்துல நடந்த ஒரு அசம்பாவித சம்பவத்துக்கு அப்புறம் மெட்றாஸுல இருக்க பிடிக்கல.  அதான் புது உத்யோகம், புது இடம்னு கெடச்சதால பிடிச்சிருந்த்து.'

'நானும் கேள்விப்பட்டேன்.  வருத்தமா எனக்கே இருந்தது.  அமுதா மேடம் உங்களையும் உங்க அம்மாவையும் அந்த சோகத்துலேந்து வெளியே கொண்டு வந்துடுவாங்கன்னு நம்பிக்கை எனக்கு இருக்கு.  புது இடத்துல தான் அது நடக்கணுங்கறது இல்ல.  இங்கேயே நடக்கும்.  நானும் பார்க்கத்தானே போறேன்.  உங்கள சந்திச்சதுல ரொம்ப மகிழ்ச்சி.  நாளைக்கு அந்த லக்ஷ்மிபதியை கண்டிப்பா போய் பாருங்க.  யாருடைய ரெகமெண்டேஷன்லேயோ நாம போறோமேன்னு நெனைக்காதீங்க.  இப்ப இருக்கற உங்க சூழ்நிலைக்கு நான் கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்னு நெனச்சுதான் இத செய்யறேன்.  நாளைக்கு உங்க சொந்த முயற்சியில நல்ல வேலை கெடச்சா நான் ஒண்ணும் குறுக்கே நிக்க மாட்டேன்.  தாராளமா மாறிக்கலாம் நீங்க.  எனக்கென்னவோ இந்த டஃபே உத்யோகத்தால தடைபட்ட உங்க திருமண பேச்சு வார்த்தைக்கு ஒரு தீர்வு கெடைக்கும்னு நம்பறேன்.'

'ரொம்ப தேங்க்ஸ் சார்.  நாளைக்கு கண்டிப்பா போறேன் சார் அங்க.'

'ஏன் நாளைக்கு.  இன்னிக்கே போங்க.'

'இல்ல சார்.  என் ஸர்டிஃபிகேட்ஸ் எல்லாம் வீட்டில இருக்கு.  நாளைக்கு போறேன்.  ஷ்யூர்.'

'அப்புறம் அரவிந்த்.  நான் உங்கள வரவழச்சது அமுதாவுக்கு தெரியாது.  டஃபே உத்யோகம் கெடச்சவுடனே அவங்களுக்கு நீங்களே சொல்லுங்க.  என் சிபாரிசுல கெடச்சதா கூட சொல்ல வேண்டாம்.'

'இல்ல சார்.  எதுக்கு சார் மறைக்கணும் தேவையில்லாம?  எங்க மேல இவ்வளவு அக்கறை எடுத்துக்கறீங்க.  அவங்க கிட்ட சொல்லலைனா அது ரொம்ப தப்பு.'

'அப்புறம்... எனக்கு உங்க உட் பீ என்ன பேர் வெச்சுருக்காங்க தெரியுமா?  கட்ட பொம்மனாம் நான்.  இது எனக்கு தெரியாதுன்னு நெனப்பு அந்த அம்மாவுக்கு.  இதெல்லாம் கல்யாணத்துக்கப்பறம் கேட்பீங்கள்ல?'

பெரிதாக சிரித்து விட்டு, 'அதுக்கு எதுக்கு சார் கல்யாணத்துக்கு அப்பறம்?  இப்பவே கேட்கறேன்.'

'சும்மா தமாஷ் பண்ணினேன் தம்பி.  ஆஃபீஸ்ல எவ்வளவோ அழுத்தத்துல வேல பார்க்கறாங்க.  இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷம் கூட இல்லைனா எப்படி?'

சிரிக்கிறார்கள்.

'ஐ ஒன்ஸ் அகெய்ன் தேங்க் யூ சார்.'

'தேங்க்ஸோட நிக்க கூடாது.  வடை பாயஸத்தோட சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடணும்.  எங்க வீட்டிலேந்து நாலு டிக்கெட் வருவோம் உங்க கல்யாணத்துக்கு.'

'யூ ஆர் க்ரேட் சார்.  அங்க நாளைக்கு போயிட்டு உங்களுக்கு நேர்ல வந்து தகவல் சொல்றேன்.'

'ரெண்டு நாள் நான் ஊர்ல இருக்க மாட்டேன்.  வியாழக் கிழம சந்திக்கலாம்.  ஆல் தி பெஸ்ட்.'

தொடரும்...

No comments:

Post a Comment