🌹🙏திருப்பதி முதல் திருமலை வரை...ஒரு விரிவான 🚐பயணத்தொகுப்பு
By சுஜாதா &வெங்கடேசன்
பகுதி 5 கபில தீர்த்தம்
இங்கிருக்கும் சிவபெருமானின் லிங்க திருமேனி சுயம்பு வடிவம் ..கபில முனிவரின் பெயர் கொண்டு கபிலேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.கார்த்திகை மாதத்தின் போது மூன்று லோகங்களில் இருக்கும் புனித தீர்த்தம் இந்த கபில தீர்த்தத்தில் கலப்பதாக ஐதீகமாம் .
இந்த கார்த்திகை மாதத்தில் இந்த கபில தீர்த்தத்தில் நீராடினால் நம்மள ட சகல பாவங்களும் நீங்கி முக்தி பேறு கிடைக்கும்ங்கறது பக்தர்களோட நம்பிக்கை.
இக்காலத்தில் இங்க எள் அளவில் இருக்கும் தங்கம் தானம் செஞ்சா, அது மேரு மலை அளவில் இருக்கும் தங்கத்தை தானமளித்ததற்கு சமமாம்.
கொஞ்சம் அரிசி தானம் செஞ்சாலும் அவர்களுக்கு சந்திர லோக பிராப்தி கிடைக்குமாம். பசு மாடு தானம் பண்ணா சுவர்க்கலோகம், வைகுண்டம், கைலாசம் செல்லும் பாக்கியம் கிடைப்பதாகவும, கன்னிகாதானம், மந்திர உபதேசம், பூமி தானம் போன்றவற்றை இத்தலத்தில் செய்பவர்களுக்கு பிரம்ம லோகம் கிடைப்பதாகவும் ஐதீகமாம்.
இதெல்லாம் முடியலேன்னா கூட கார்த்திகை மாச பௌர்ணமி அன்னிக்கி மதிய வேளையில் “அயந்தி ஸர்வ தீர்த்தனி மத்யஹ்னே காபிலம் சரஹ” ங்கற மந்திரத்தை துதித்து, கபில தீர்த்தத்தில் நீராடுவதால் இங்கே கோயில் கொண்டிருக்கும் சிவபெருமான்,பெருமாள் மற்றும் கபில முனிவர் ஆகியோர்களின் அருளாசிகள் பெற்று, வாழ்வில் அனைத்து நலங்களும் கிடைக்க பெறுவர்களாம்...
இவர் சொல்லி முடிக்கவும் நாங்க உள்ள நுழைஞ்ச அனுமார் சன்னதிக்கு எதிரே ஒரு மாடு கன்னுகுட்டி கட்டி இருக்கு. அதை அவா அவா சக்திக்கு ஏத்த மாதிரி விலைக்கு(?) வாங்கி (500-க்கு கூட) அவாளுக்கே தானம் பண்ணி புண்ணியம் சம்பாதிச்சக்கலாமாம்.
இவர் செஞ்ச புண்ணியம் போதும்னு உள்ள அழச்சிண்டு போனார்..
ஆழ்வார் சன்னதில ஆழ்வார் தீர்த்தம்னு எழுதி இருக்கு..
கொஞ்சம் தள்ளி லஷ்மி நாராயண பெருமாள் சேவை சாதிக்கறார். மலை மேல பெருமாளை சேவிக்கறதுக்குள்ள தரிசனம்கொடுத்தியேப்பானு ஸேவிக்கறேன்.
சைவ வைஷ்ணவா அவாஅவா தெய்வத்தை நெனச்சிண்டு தீர்த்தத்துல நீராடலாம்னு ஒத்துமையான கோயில. பிடிச்சு இருக்கு.
. அருவி மெலிசா விழுந்தாலும் ரொம்ப அழகா இருக்கு. கபிலேஸ்வரர் அம்பாளை தரிசனம் பண்ணிட்டு வெளியே வரோம்.
அடுத்து இஸ்கான் போறோம். வழக்கமான ரிச் லுக்ல கிருஷ்ணர்... பொம்மைகளோ்ட பாகவத கதைகள். செத்துப்போனப்பறம் என்ன நரகத்துல நடக்கும்ன. பயமுறுத்தல் சிற்பங்கள். ... வடக்கத்தி ஸ்டைல் கிருஷ்ணர் புல்லாங்குழல் ஊதறார்.
இவர் கூகுள் படிச்சுட்டு பேசறார்…...
இந்த ‘இஸ்கான் கிருஷ்ண பஹவான் கோயில்’ திருமலையை நோக்கி செல்லும் பாதையில் வெண்மையும் தங்கநிறமும் கொண்ட புதுமையான வடிவமைப்புடன் மிளிர்கிறது.
இதன் சுவர்களில் நரசிம்மஸ்வாமி, கிருஷ்ண பஹவான், கிருஷ்ண லீலா மற்றும் வராக ஸ்வாமி ஆகிய சித்தரிப்புகளை பார்க்கலாம்.
கிருஷ்ணரது லீலைகளை சித்தரிக்கும் வண்ண ஓவியங்கள் இந்த கோயிலின் ஜன்னல் கண்ணாடிகளில் தீட்டப்பட்டுள்ளன.
கிறித்துவ தேவாலய பாணியில் இவை காட்சியளிக்கின்றன. கோயிலின் உட்கூரையை தஞ்சாவூர் பாணி ஓவியங்களும் அலங்கரிக்கின்றன. கருவறையில் கிருஷ்ணர் கோபியர் சூழ காட்சியளிக்கின்றார்.
அதுமட்டுமல்லாமல் இந்த கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அழகிய நந்தவனப்பகுதியானது கிருஷ்ணலீலா சிற்பங்கள், மலர்ச்செடிகள், தடாகங்கள், நீரூற்றுகள் ஆகியவற்றைக் கொண்டதாக பக்தர்களை வசீகரிக்கிறது.
கீழே பிரசாத ஸ்டால்ல குலோப் ஜாமூன் வடை புளியோதரை வாங்கி சாப்பிட்டு ஒரு ரவுண்ட் வந்துட்டு போட்டோ எடுத்துண்டு ஆட்டோல ஏற எங்களை கோவிந்த ராஜர் கோயில்ல விட்டுட்டு பணம் வாங்கிண்டு போயிடறான்….
அங்கயும் கூட்டம் இல்லாட்டியும் தரிசனம் கோயில் பூஜை முடிஞ்சு ஏழு மணிக்குதான்ங்கறா….
குறிப்புகள்
6. அஞ்சன மலை:
அனுமனின் தாயின் பெயர் அஞ்சனை. தனக்கு குழந்தை வரம் வேண்டும் என ஆதிவராகரை நினைத்து தவமிருந்தார். அதன் காரணமாக ஆஞ்சநேயரைப் பெற்றெடுத்தாள். இதன் காரணமாக அவரது பெயராலேயே ‘அஞ்சன மலை’ என்று அழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment