🌹🙏திருப்பதி முதல் திருமலை வரை...ஒரு விரிவான 🚐பயணத்தொகுப்பு
By சுஜாதா &வெங்கடேசன்
பகுதி 4 திருப்பதி இராமரில் திருமலை இராமர்
கோதண்ட ராமர் கோபுரத்தை பார்த்த உடன் திருமலை மேல் ஶ்ரீவாரி சன்னதியில்
தன் தலையைச் சற்றே சாய்த்தபடி அழகுக் கோலம் காட்டும் ராமர் நினைவிற்கு வரார்.
திருப்பதி - திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான். இவருடைய சந்நிதானத்திலேயே காட்சி தருகிறார் ராமபிரான். (ஆனால், எத்தனை பக்தர்களால் இந்த ராமரை தரிசித்திருக்க முடியும்? வெங்கடாஜலபதிப் பெருமாளை தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் போகும்போது, ‘ஜரகண்டி’ அவசரத்தில் பெருமாளையே திருப்தியாக தரிசிக்க முடிவதில்லை, அப்படியிருக்க அந்த கர்ப்பக் கிரகத்திற்குள்ளேயே இருக்கும் ராமரையும், கிருஷ்ணரையும் எப்படி தரிசிக்க முடியும் என்பது நியாயமான ஏக்கம்தான்.) பிற தலங்களில் நாம் பார்ப்பதுபோல இங்கே ராமர் நிமிர்ந்து நிற்கவில்லை.
எதற்காக இந்த சாய்ந்த திருக்கோலம்?னு படிச்ச ஞாபகம்வரது. .
சீதையைக் கவர்ந்து சென்றவன் ராவணன்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்தியாகிவிட்டது.
அனுமனும் இலங்கைக்குச் சென்று அங்கே சீதை சிறைபட்டிருக்கும் உண்மையை உறுதி செய்தான். தன் தவறை ராவணன் உணர்ந்ததாகத் தெரியவில்லை. சீதையைத் திருப்பி அனுப்பும் உத்தேசம் இல்லாதவ னாகவே அவன் இருந்தான்.
போர் ஒன்றுதான் அவனை அடிபணியவைக்கும் ஒரே வழி.
அந்த சமயத்தில்தான் ராமனுக்கு ஒரு தகவல் வந்தது. அதாவது, ராவணனின் தம்பியும் அவனுக்கு நேர் எதிரான குணமும் கொண்ட விபீஷணன் ராமனிடம் சரணடைய விருப்பம் தெரிவித்திருந்தான்.
அசுர மன்னனான ராவணனின் தம்பி எப்படி நற்குணம் கொண்டவனாக இருக்க முடியும்? அவனுடைய சரணாகதியை ஏற்கக்கூடாது என்பது லட்சுமண னின் வாதம்.
ஆனால், ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ என்றபடி, நல்லவனாவதும் தீயவனாவதும் பிறப்பில் இல்லை, வளர்வதில் இருக்கி றது என்ற வாழ்க்கைத் தத்துவத்தை உணர்ந்தவன் ராமன்.
அதனால் அவன் விபீஷணனை தன்னோடு ஒருவனாக ஏற்க விரும்பினான்.
அவனுடைய இந்த விருப்பம் நியாயமானது என்றும், அதில் எந்தத் தயக்கமும் வேண்டாம் என்றும் அனுமன் அபிப்ராயப்பட்டான்.
விபீஷணன் பூரண குணத்தவன், நாகரீகம் தெரிந்தவன். அதர்மத்துக்கு அஞ்சுபவன். அண்ணனே ஆனாலும், அநீதியைத் தட்டிக் கேட்பவன் என்றெல்லாம் அனுமனுக்கு விபீஷணனைப் பற்றித் தெரிந்திருந்தது.
அதனாலேயே, ராமனிடம் அவனைப் பற்றிய நல்லெண்ணத்தை வளர்க்கும் வகையில் அவனுடைய தூய குணங்களை விவரித்தான். அப்படி அனுமன் விளக்கும்போதுதான், அதைத் தலைசாய்த்து ராமன் கேட்டான்.
நல்ல விஷயங்களை நல்லவன் ஒருவன் சொல்லும்போது அதற்கு உரிய மதிப்பு கொடுக்கும் வகையில், தலை சாய்த்து கேட்கும் பண்பு மிகுந்தவன் ராமன். அதனால்தான் அப்படி ஒரு திருக்கோலம் காட்டுகிறான் இத்தலத்தில்.
இந்த பா(B)வம், இந்த சம்பவத்தைதான் விளக்குகிறது என்று, பெரிய திருமலைநம்பி என்ற மகான், தன் சீடனான ராமானுஜருக்கு எடுத்துரைத்திருக்கிறாராம். அந்த ராமர் இருக்கட்டும்.
இப்ப இந்த கோதண்ட ராமருக்குள்ளே அவரைப் பார்ப்போம்.
கோயில் உள்ள நுழைஞ்சா இது திருப்பதியான்னு ஆச்சரியப்படற மாதிரி ஒரு ஈ காக்கா இல்லை.ஆனா திருப்பதி வழக்கப்படி வாசல்ல ஸ்கேன் ,செக்யூரிட்டினு நின்னுண்டு இருக்கா.
உள்ள பட்டரும் நாங்களும் மட்டும்.
ராமரோட அழகை பார்த்துண்டே திரு மலைல தலை சாய்ந்த ராமரை அந்த கூட்டத்துல பார்க்க முடியுமோ என்னவோ.? இங்க நாங்க மட்டும்தான் இருக்கோம். தலை நிமிர்ந்து இருந்தா உன் காதுல விழாதா என்ன? என்னோட வேண்டுதலையும் கேட்டுக்கொன்னு சொல்றேன். ப்ரதட்சணமா வந்தா அனுமார் சன்னதி.
வெளியில வந்தா கோயிலுக்கு எதிரேயும் ஒரு அனுமார் சன்னதி..கன்னத்தில போட்டுண்டு கபில தீர்த்தம் போகறோம்.
இது அலிபிரி பக்கத்துலதான் இருக்கு.
இவர் இதோட கதையை சொல்றார். திருப்பதி மலையடிவாரத்தில் (அலிபிரி) உள்ள தீர்த்தம் கபிலதீர்த்தம். இதற்கு ஆழ்வார் தீர்த்தம்னும் பெயர் உண்டாம்.
மாதவன்ங்கற அந்தணன் பெண்பித்தனாய் அலைஞ்சு நோய்வாய்ப்பட்டான். திருமலைக்கு சென்றால் தீர்வு கிடைக்கும் என்று எண்ணி, இங்கு வந்தானாம். கபில தீர்த்தத்தில் நீராடி பிண்டதானம் செய்தானாம். . நோய் தீர்ந்து சுகம் பெற்று, திருமலைக்கு ஏறி பெருமாளைத் தரிசித்து மோட்சம் அடைந்தானாம். அதே போல . கபிலமுனிவரும் இங்கு வந்து சிவனருள் பெற்றதால், இப்பெயர் பெற்றதுன்னு சொல்றார்.
தீர்த்தக்கரையில் காமாட்சி சமேத கபிலேஸ்வரர் கோயில் இருக்கு. . கொரானாவால இப்போது இத்தீர்த்தத்தில நீராட அனுமதி இல்லைங்கறார். ஆனாலும் பிரமாண்ட மலைக்கு நடுவுல அருவி விழறத பார்த்துண்டே இருக்கலாம்.
குறிப்புகள்..
5. விருஷப மலை :
விருஷபன் (ரிஷபாசுரன்) என்ற அரக்கன் நரசிம்மரை நினைத்து கடும் தவமிருந்தார். தவத்தில் மகிழ்ந்து நரசிம்ம அவதாரமாகவே தோன்றி காட்சி அளித்தார். அப்போது நான் உங்களுடன் சண்டையிட வேண்டும் என ரிஷபாசுரன் வரமாக கேட்டார்.
அங்கு ரிஷபாசுரன் நரசிம்மருடன் சண்டையிட்டு மோட்சம் பெற்றார் என்பதால் இந்த மலைக்கு ‘விருஷப மலை’ என்று பெயர். தற்போது ரிஷபாத்ரி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
வ்ருஷபாத்ரி:
இடரும் பிறவித் தொடரும் – சுடரும்
திருவாழி கைக்கொண்ட தெய்வத்தைப் பற்றீர்
பெருவாழ்வு பெற்றீர் பெரிது.
No comments:
Post a Comment