சுமித்ரா
ஆன்மீக பயணம்
மஹா சிவராத்திரி
சிவராத்திரி அன்னிக்கு சிவ தரிசனம் ரொம்ப புண்ணியம் னு சொல்வா. அதனால என் சித்தப்பா பெண் காசில அங்கே சங்கர மடத்தில் ஒரு ஃப்ளாட் ல இருந்ததால் எங்களை ஒரு மஹா சிவராத்திரி பூஜைக்கு invite பண்ணிணா.
6 வருஷம் முன்னாடி சிரார்த்தம் மாளய பக்ஷம் எல்லாம் காசியில தான் விஸ்தாரமா , சாம வேதமானதால கேதார வாத்தியார் மூலமா மனசு த்ருப்தியா பண்ணுவோம். அதனால் சரின்னு உடனே சொல்லிட்டோம்.
என் தங்கை ஆத்துக்காரர் அங்க மஹா சிவராத்திரி க்கு வேத பாராயணம் ஏற்பாடுகள் அவர் தான் incharge . நல்ல voice அந்த காசி விஸ்வநாதர் கோவிலில் எல்லாரோட நல்ல பழக்கத்தால எங்களை அவசியம் வர வேண்டும் னு கேட்டடுண்டா. எங்களுக்கும் வாழ் நாளில் ஒரு தடவை மஹா சிவராத்திரி காசியில நேர பார்க்கணும்னு ஆசை.
So 2 நாள் முன்னாடி காசிக்கு 2 nd a/ c ல போய் இறங்கி ஆச்சு.முதல் நாள் கேதாரீஸ்வரர் கோவிலில் ஸ்நானம் பண்ணி எல்லா இடங்களிலும் ஸ்வாமி தரிசனம் சாயங்காலம் கங்கா ஆரத்தி பார்த்தாச்சு.
ஆத்தில எல்லாரும் சிவ ராத்திரி அன்னிக்கு பட்டினி. வெறும் பால் பழங்கள் தான். நான் டயாபிடிக் னால சப்பாத்தி மட்டும் சாப்பிட்டு சாயங்காலம் 6 மணிக்கு விஸ்வநாதர் கோவிலுக்கு போயாச்சு.
கூட்டம்ஆயிரக்கணக்கில்.நாங்க வேதப்ராமணாளோட தனி வழி. முதல் 2 கால பூஜைகள் தனியா விரிச்சி இருந்த கம்பளியில உட்கார்ந்து வாத்யார் கோஷ்டிகளோட ருத்ர ஜபகத்தோட திவ்ய தரிசனம். அபிஷேக ஆராதனை போது வாத்யார் களை தனியா க்யூல விட்டுட்டா. எங்களை போலிஸ் நிறுத்தி ஆண்கள் தனி க்யூ பெண்கள்தனி க்யுனு சொல்லி எங்காத்துக்காரர் என் தங்கை ஆத்துக்காரர் ஒரு க்யூல கிட்டக்க போயாச்சு.
அந்த போர் கூட்டத்தில் என் தங்கை திடீர்னு திரும்பினா அவ முண்டியடிச்சு எப்படியோ அவாளோட சேர்ந்துட்டா.
நான் தனியா எப்படி உள்ள போவது தெரியாம கூட்டத்தில சிக்கிண்டு பாஷையோ சுத்தமா பேசவும் தெரியாது புரியவும் இல்லை. கைலயோ பர்ஸ் தண்ணி கூட இல்லை. கூட்டத்தில் இடிச்சு என்னை எங்கேயோ தள்ளறா .ஒரே அழுகை அலற ஆரம்பிச்சேன். போலீஸ் ஆள் ஒருத்தர் கிட்ட" மேரா ஹஸ்பெண்ட் உதர் ஹை ஹிந்தி நஹி, ப்ளிஸ் மே அந்தர் ஜாரஹே ப்ளீஸ்னு அழ ஆரம்பிச்சேன்.
போலிஸ் காரர் சிவ ரூபம் தான். என்னை கயிறு இடுக்கு வழியா அலக்கா அவன் பக்கம் உள்ளே தரதரனு இழுத்து நான் இவரையும் என் தங்கை யையும் கண்டு பிடிச்சு போலிஸ் கிட்ட உதர் ஹைனு கைகாமிச்சுசீனு ஜெயான்னு சத்தமா அழுதேன். அவா ஓடி வந்து என்னை அவா கூட காசி விஸ்வநாதர் கிட்ட உட்கார்த்தி வச்சா மயக்கம் கிர்ன்னு .
உடனே அங்கிருந்த அந்த பாண்டா (நம்ம வாத்தியார் சொல்வோம்)ல ஒருத்தர் கமண்டல தீர்த்தத்தை மேல அடிச்சு கொஞ்ச தீர்த்தத்தை வாயில விட்டவுடன் போன உயிர் திரும்பி வந்தது.
இதுல beauty என்னன்னா அதுக்கப்புறம் காசி விஸ்வநாதர் கிட்ட உட்கார்ந்து பூஜை அபிஷேகம் பார்த்தோம்.
ராத்திரி 12 மணிக்கு ருத்ர தாண்டவ பூஜை அபிஷேகம். அப்பப்பா சினிமா ல பரதநாட்டிய டான்ஸ் ருத்ர தாண்டவம் பாத்திருக்கேன். நேர பார்த்தா யம்மா அவா தாம்பாளத்தில் நெருப்பு ஒரு கைல - இன்னொரு கைல உடுக்கை செம speed dance. சில பாண்டாஸ் தலை விரிச்சி ஆகாச பூமாதேவி குதிச்சு நர்த்தனம் . சிலர் அடுக்கு விளக்கை சுத்தி சுத்தி பேயாட்டம். ஒரு பாண்டா 2 கைல பிரம்மாண்ட மணி வைச்சு மணி பறந்து பறந்து டான்ஸ். வலது கை உடுக்கை இடது கை மேளம் அடிக்க 12 பேர் real ருத்ர தாண்டவ டான்ஸ் வச்ச கண் வாங்காமல் வாய் பிளந்து நாழி ஆக ஆக பயங்கர speed dance. மனசு நிஜமாவே கைலாச பார்வதி பரமேஸ்வரர் ருத்ர தாண்டவ நடனம் போல மெய்சிலிர்த்து இது தான் வாழ் நாளில் ஒரு பெரிய வரப்பிரசாதமா நினைச்சோம்.
நள்ளிரவு பூஜை பார்த்து 3 மணி கால பூஜை உடம்பு ஒத்துழைக்கலை. 3.30 மணிக்கு திரும்ப சங்கர மடம் வீடு வந்து கீழே மடத்து சந்தரமௌளீஸ்வரர் அபிஷேகம் பார்த்து காலம்பற கங்கா ஸ்நானம் பண்ணி த்ருப்தியா சிவ தரிசனம் கிடைச்சு ராத்திரி train ஏறி சென்னை வந்தோம். காணக்கிடைக்காத அற்புதமான அனுபவம்.
ஓம் நமசிவாய.
No comments:
Post a Comment