🌹🙏திருப்பதி முதல் திருமலை வரை...ஒரு விரிவான 🚐பயணத்தொகுப்பு
By சுஜாதா &வெங்கடேசன்
பகுதி 10 நாராயண வனமும் அப்ளாய குண்டாவும்
சீனிவாசனும், அலமேலு மங்கையாகிய பத்மாவதியும் தங்கினதால ரெண்டு பேரையும் சேர்த்து சீனிவாசமங்காபுரம் ஆனதாம். . புராதன காலத்தில் சித்புருஷர்கள் தவம் செய்த இடமானதால் சித்தர் கூடம் ன்னும் இத்தலத்திற்கு இன்னொரு பெயருண்டாம் .
மாசியில் பிரம்மோற்ஸவம் 9 நாள் நடக்கிறது. புரட்டாசியில் பவித்ரோத்ஸவமும், வைகுண்ட ஏகாதசியும் சிறப்பானவை. சனிக்கிழமைகளில் பெருமாள் தேவியரோடு மாடவீதியில் உலா..வரார்.
அப்ப திருக்கல்யாணம் நடந்த நாராயண வனம்ன்னு சொல்றாளே அது பக்கத்துலயா ன்னு கேக்கறேன்
நாகலாபுரம் - நாராயணவனம் " புத்தூர் கிட்ட இருக்கு. இங்கேர்ந்து ஆட்டோல போக முடியாது. அங்க நாராயணவனத்தில் மத்யானம் . தினமுமே திருக்கண்ணமதுடன் தான் சாப்பாடு. . நமக்குத் தான் சாப்பிட முடியாது.ங்கறார்..
எப்பவோ போன அனுபவத்தை சொல்றார். நாராயணவனத்தில் ஶ்ரீ கல்யாண ஶ்ரீநிவாசப் பெருமாள், பத்மாவதி தாயார் தரிசனம்.பெரிய பழமையான கோவில். இந்த தலத்தில் பெருமாள் கல்யாணத் திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
கையில் கங்கணம், காப்புக் கயிறு, கையில் சூரிக்கத்தி. காட்டு வழியில் வேட்டையாடி வந்து பத்மாவதி தாயாரை இங்கு கல்யாணம் செய்து கொண்டதாக சொல்வார்கள். அதற்கு சாட்சியாக பத்மாவதி தாயாரின் சந்நதியில் கல்யாணத்திற்கு மஞ்சள் அரைத்ததாகச் சொல்லப்படும் அழகிய பெரிய ஆட்டுக்கல் இன்றும் இருக்கிறது. நின்று நிதானமாக தரிசனம் செய்யலாம். திருப்பதி பெருமாளை அருகில் சென்று பார்க்கமுடிய வில்லை என வருத்தப் படுபவர்கள் அருமையாக பெருமாளையும், தாயாரையும் சேவிக்கலாம்.
ஆனா வானர வீரர்கள் நம் மீது குதிப்பதற்கு தயாராக கோபுரத்தின் மீது இருப்பார்கள். நாம் கொடி மரத்துக் கிட்டே சேவிக்கும் போது தொப்புனு மேலே குதிப்பார்கள். "ராம், ராம் " என சொன்னால் போதும். மற்றபடி ஒன்றும் செய்ய மாட்டார்கள்.
இந்த தரிசனம் முடிந்து, அருகில் உள்ள சுரைக்காய் ஸ்வாமியின்ஜீவசமாதியையும்பார்க்கலாம்ங்கறார்.
சுரைக்காய் ஸ்வாமிகள் கையில் சுரைக்காயோடு திரிஞ்சிண்டு மக்களோட வியாதியை குணப்படுத்தி 1902 ல் இங்க ஜீவ சமாதி ஆனாராம்.
தியான மண்டபத்துல ஒக்காந்துண்டா குறிப்பாக அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் உடம்புல ஒரு அதிர்வு வருமாம்.
சமாதித் திருக்கோயிலில் அவரே ஏற்றிவைத்த துனி (Dhuni) இன்றளவும் கனன்று கொண்டிருக்காம்.
அடுத்து அப்பளாய குண்டா பத்தி சொல்றார்.
(Appalaya gunta)
இது திருப்பதியில் இருந்து சென்னை வரச்சே புத்தூர் பக்கம் 12 Km.
இவர் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள்.
திருப்பதி பெருமாளின் ரெப்ளிகா. அதே உயரம் அதே தேஜஸ். இது உருவான காலம் 1232 AD.
கார்வெட்டி நகர ராஜா ங்கற ராஜா இந்த கோவிலை நிர்மாணம் செய்து கட்டியிருக்கார். . பிறகு ஸ்ரீ குமார வெங்கட திருமலை ராஜா இந்த கோவிலை புதிப்பித்து கட்டினாராம்.
இந்த கோவில் அபூர்வமானது. ரொம்ப ரொம்ப சிறப்பு பெற்றது. பெருமாள் இங்கே வலது கையில் "அபய ஹஸ்த்த முத்திரை" யோடு நின்று கொண்டிருக்கிறார். இப்படி வலது கையில் அபயஹஸ்த்தம் இருக்கும் பெருமாள் ரொம்ப அரிதாம. .
அப்படி வலது கையில் "அபயஹஸ்த்த முத்திரை" யோடு இருப்பதால் இவர் உடம்பு, மனசு, வியாபாரம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சினையாக இருந்தாலும் வேண்டுபவர்களுக்கு வேண்டியவாறு உடனே வழங்கக்கூடியவர். அதிலும் மனசு சம்பந்தப்பட்ட வியாதி (Mental Depression) இருந்து அதற்காக பிரார்த்தனை செய்து கொண்டால் கண்டிப்பாக நிவர்த்தி ஆகும்.
இது வாயு பகவான் வழிப்பட்ட ஸ்தலம். பத்மாவதி தாயாரின் திருமணத்திற்கு முப்பத்து முக்கோடி தேவர்களும் "நாராயண வனத்திற்கு" வந்தபோது சித்தேஸ்வர மகாமுனி இங்கே "அப்பளாயகுண்டா"வில் தவம் செய்து கொண்டிருந்தாராம். . அவர் பெருமாளையும் தாயாரையும் திருமணம் முடிந்து பார்க்க விரும்பியதால் இங்கே பத்மாவதி தாயாரோடு பிரசன்ன வெங்கடேசப் பெருமாளாக எழுந்தருளி மகாமுனிக்கு காட்சி தருகிறார்.
இங்கேயுள்ள பத்மாவதி தாயாரும் ஆண்டாளும் அவ்வளவு அழகு. ஆஞ்சநேயர் சன்னதியும் இருக்கு. மிக மிக அழகான சுத்தமான புஷ்க்கரம் இருக்கு.
இங்கும் போன் எடுத்து போக அனுமதியில்லை. எனவே ஒரு போட்டோகூட எடுக்க இயலாது.
திருப்பதி போகும்போதோ இல்லை வரும்போதோ கண்டிப்பா பார்க்கவேண்டிய பெருமாள். இங்கே இந்த கோவில் இருப்பது அதிகம் பேருக்கு தெரியாததால் கூட்டமும் அதிகம் இல்லை.
குறிப்புகள்
ராஜகோபுரம் ஏழு:
ஏழு மலைகளை நினைவில் கொண்டு தான் ஏழு கலச ராஜகோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது.
திருவேங்கடவன் சன்னிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ராஜ கோபுரத்திற்கு ஏழு உலகங்களுடனும் தொடர்பு கொள்வதுபோல ஏழு கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மகிமைகள் ஏழு:
சீனிவாச மகிமை, தல மகிமை, தீர்த்த மகிமை, பக்தர்கள் மகிமை, கோவிந்த நாமத்தின் மகிமை, பகுளாதேவியின் மகிமை, பத்மாவதியின் மகிமை
No comments:
Post a Comment