Friday, November 5, 2021

பாதுகாப்பாக இருங்கள்

 Shanmuga Sundaram 

அவர்களின் பதிவு

30.10.2021

என் வங்கி கணக்கில் திடீரென ரூ 2516 செலுத்த பட்டிருந்தது.  இன்று காலை ஒருவர் என்னை தொடர்பு கொண்டு என் கணக்கில் பணம் தவறாக செலுத்திவிட்டதாகவும் , அவர் அனுப்பும் link க்கு பணம் பரிமாற்றம் செய்யும்படி கூறினார்.  நான் அவரை என் வீட்டிற்கு வந்து பணத்தை பெற்று கொள்ளும்படி கூறிய போது தான் Ranchi நகரத்தில் இருப்பதாக சொன்னார்.   தொலைபேசி தொடர்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது.  காவல் துறை நண்பர்கள் மூலம் விசாரித்த போது அலைபேசி சிம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு விலாசம் கொடுத்து பெறப்பட்டது என தெரிந்தது.  பேசியவர் சரளமாக தமிழில் பேசியதால் சந்தேகம் ஏற்பட்டது.  அரை மணி நேரத்தில் காவல் துறை நண்பர் எனக்கு வந்த அழைப்பு திருவான்மியூர் வால்மீகி நகரில் இருந்து வந்தது என உறுதி செய்தார். மீண்டும் மாலை 4 மணிக்கு அதே அழைப்பு.  பணம் கண்டிப்பாக வேண்டும் என்றார்.  குரலில் இப்போது கொஞ்சம் கோபம் இருந்தது.  அவரை சில நிமிடங்கள் பேச வைத்தபின், நிதானமாக " வால்மீகி நகரில்தானே இருக்கிறீர்கள் விலாசம் கொடுங்கள் நான் வந்து பணம் தருகிறேன் என்று கூறி முடிக்குமுன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.  பிறகு அழைத்தால் switched off என பதில்.  பாதுகாப்பாக இருங்கள் நண்பர்களே.

No comments:

Post a Comment