தேங்காய் லட்டு எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய்- 1 கப்
கன்டென்ஸ்டு மில்க்- 400 கிராம்
ஏலக்காய் தூள்- 1/2தேக்கரண்டி
முந்திரி பருப்பு
கன்டென்ஸ்டு மில்க்- 400 கிராம்
ஏலக்காய் தூள்- 1/2தேக்கரண்டி
முந்திரி பருப்பு
செய்முறை:
*லட்டு செய்வதற்கு முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நான்கு தேக்கரண்டி தேங்காய் சேர்த்து வறுக்கவும்.
*வறுத்த தேங்காயை தனியாக வைக்கவும்.
*இப்போது ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் துருவிய தேங்காய் மற்றும் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கலந்து விடவும்.
*இதனோடு ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து விடவும்.
*தேங்காய் கெட்டியாகும் வரை கிளறி விடுங்கள்.
*கெட்டியான பின் அடுப்பை அணைத்து, ஆற விடவும்.
*கையில் நெய் தடவி கலவையில் இருந்து சிறு சிறு உருண்டைகளை பிடிக்கவும்.
*இந்த உருண்டைகளை வறுத்த தேங்காய் துருவல் மீது பிரட்டி எடுத்து ஒரு முந்திரி பருப்பு வைக்கவும்.
*அவ்வளவு தான்… சுவையான தேங்காய் லட்டு
No comments:
Post a Comment