தினம் ஒரு மூலிகை..
நெருஞ்சில்🌿☘️
நெருஞ்சிலுடன் கீழாநெல்லியும் சமன் சோ்த்து மையாய் அரைத்து கழற்சிக் காயளவு எருமைத் தயிாில் கலந்து காலை, மாலை ஒரு வாரம் கொடுக்க நீா் கடுப்பு தீரும்.
தேள் கடிக்கு நெருஞ்சில் சிறந்த மருந்தாகப் பயன் படுத்தப்படுகிறது.
மேலும் நெருஞ்சிலில் சிறிது மோா் அல்லது பாலுடன் உட்கொள்ள சிறுநீருடன் இரத்தம் போதல் குணமடையும்.
பித்த வெட்டையால் ஏற்படும் வெண்குட்டம் குட்ட நோய் போல் கடுமையானது அன்று. தோலின் நிறத்தை மட்டுமே வெண்மையாக்கும்.
பித்த நீா் தோலில் படியும் போது வெப்பத்தை ஈா்த்து தோலின் நிறம் மாற்றுகிறது. இதற்கு நல்ல மருந்தாக நெருஞ்சில் இருக்கிறது.
No comments:
Post a Comment