Saturday, November 6, 2021

திருபுட்குழி விஜயராகவ பெருமாள் கோவில்

 💥இன்றைய ஆலய தரிசனம் திருபுட்குழி விஜயராகவ பெருமாள் கோவில்.

🌞ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!

ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!!

💥அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பர் கழியுமா லென்னுள்ளம் மென்னும் புலங்கெழு பொருநீர் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக் கென்னும் குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.

💥 திருமங்கையாழ்வார்.

💥வீராகவன் தன் தந்தையை போல் கருதும் கழுகு வேந்தன் ஜடாயுவுக்கு ஈமகிரியைகள் செய்த திருத்தலம்.

💥பித்ருக்கள் தோஷம் நீக்கும் ஸ்தலம்

💥வறுத்தபயறை முளைக்க வைக்கும் மரகதவல்லித்தாயார் புத்திர பாக்கியம் அருளும் ஸ்தலம்

💥அசையும் உறுப்புக்கள் கொண்ட கல்குதிரை சிற்பக்கலையில் ஒர் அதிசயமாக உள்ள ஸ்தலம்.

💥கழுகு வேந்தன் ஜடாயுவை  மூலவர் விஜயராகவப் பெருமாள் தன் தொடையின் மீது இருத்தி அருள் பாலிக்கும் திருத்தலம்.

💥108 திவ்ய தேசங்களில் திருபுட்குழி 57 வது திவ்ய தேசம்

💥ஸ்வாமி ராமானுஜர் வேதபாடம் பயின்ற ஸ்தலம் 

💥திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த திருத்தலம். 

💥ஸ்வாமி வேதாந்த தேசிகர்  விஜயராகவப் பெருமாளை பரமார்த்த ஸ்துதி என்னும் பாடலால் பிரார்த்தனை செய்த ஸ்தலம்.

💥இவ்வளவு சிறப்பு பெற்ற திருபுட்குழி விஜயராகவப் பெருமாள் கோவில் பெருமைகளையும், சிறப்புகளையும் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.

💥சென்னை வேலூர் வழியில் 80 கீமி தூரத்தில், அல்லது காஞ்சீபுரத்தில் இருந்து வேலூருக்குச் செல்லும் பாதையில் சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருப்பூட்குழி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் ஆலயம். 

💥 பாலுசெட்டி சத்திரத்தில் இருந்து 1/2 கிமீ தூரத்தில் கோவில் உள்ளது.

💥மூலவர்–விஜயராகவப் பெருமாள்
தாயார்–மரகதவல்லிதாயார்
தல விருட்சம்–பாதிரிதீர்த்தம்–ஜடாயு தீர்த்தம்
💥பழமை–500-1000 வருடங்களுக்கு முன்
💥மூலவர் விமானம் - விஜயவீரகோட்டி விமானம் 
💥ஊர்–திருப்புட்குழி
மாவட்டம்–காஞ்சிபுரம்
மாநிலம்–தமிழ்நாடு

💥திரு+ புள்+ குழி = திருப்புட்குழி. 

💥“புள்” என்பது ஜடாயுப் பறவையைக் குறிக்கும்

💥"திரு" என்றால் "மரியாதை" ; "புள்" என்றால் "பறவை " [ஜடாயு] ; "குழி" என்றால்  "ஈமக்கிரியை செய்தல்" . 

💥 ராமர் ஜடாயுவிற்கு இத்தலத்தில் ஈமக்கிரியை செய்ததால் இத்தலம் "திருப்புட்குழி" ஆனது.

💥நான்கு தோள்களுடன் கிழக்குநோக்கி வீற்றிருக்கும் திருக்கோலத்தில் உள்ள ஶ்ரீமன் நாராயணன் விஜயராகவப் பெருமாள் என அழைக்கப்படுகிறார்

💥ஆலயத்தில் உள்ள விஜயராகவப் பெருமானை புராணங்களில் சமயப் பூங்கவன் என்றும் அழைக்கின்றார்கள்.

💥சீதாராமனின் பத்தினியான சீதா தேவியை இலங்கை வேந்தன் இராவணன் சிறைப் பிடித்துக் கொண்டு ஆகாய மாா்க்கமாக விரைந்து சென்றான். 

💥இதனைக் கழுகரசனான ஜடாயு பாா்த்துவிட்டான். இராவணனைத் தடுத்து எதிா்த்துப் போரிட்ட ஜடாயுவின் இறக்கைகளை வஞ்சகமாக வெட்டி வீழ்த்தி விட்டுச் சென்றான் இராவணன். 

வலியின் தலை தோற்றிலன்; மாற்ற அருந் தெய்வ வாளால்
நலியும் தலை என்றது அன்றியும், வாழ்க்கை நாளும்
மெலியும் கடை சென்றுளது; ஆகலின், விண்ணின் வேந்தன்
குலிசம் எறியச் சிறை அற்றது ஓர் குன்றின், வீழ்ந்தான். 

💥கவிச்சக்கரவர்த்தி கம்பர்

💥இராவணனால் வெட்டப்பட்ட கழுகு வேந்தன் ஜடாயு மரணத்தருவாயில் இருந்தது. 

💥தன் தேவி சீதையைத் தேடித்,தென் திசை நோக்கி வந்தாா் இராமபிரான் வழியில் குற்றுயிரும் குலை உயிருமாக வெட்டப்பட்டுக் கிடந்த ஜடாயுவைக் கண்டாா் சக்ரவா்த்தித் திருமகன். 

💥இராம இலக்குவர் ஜடாயுவை கண்டு அழுதனர். பின்னர் கரங்களை சிரம் மேல் கூப்பி அவனைத் தொழுதனர்.

💥நடந்த விபரங்களை கோதண்டராமனிடம் தொிவித்த ஜடாயு ,மரணத்தை எதிர் நோக்கி இருக்கும் தனக்கு ,ராமனே ஈமகிரியைகள் செய்ய வேண்டும் என்றும், ஶ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி தந்து அருளவேண்டும் என்றும் வேண்டிய படியே,தன் உயிரை விட்டது

💥பிறகு தன் தந்தை தசரதருக்கு ஈமக்கடன்களைச் செய்ய முடியாமல் போன ராம லக்ஷ்மணர், தன் தந்தையைப் போன்ற ஜடாயுவுக்கு ஈமக்கடன்களைச் செய்ய தொடங்கினர் . 

💥விறகுகள் கொண்டு வந்து தீ மூட்டி ஜடாயுவைக் வலது பக்கம் வைத்து கிடத்தி, தீ மூட்டி ரகுராமன் லக்ஷ்மணர் உதவிபுரிய எரியூட்டி, ஜடாயுவுக்கு ஈமகிரியைகள் செய்தார் ஜடாயு மோக்ஷப்பேறு அடைந்தார்.

ஏந்தினன் இரு கைதன்னால்; ஏற்றினன் ஈமம்தன்மேல்;
சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன்; தலையின் சாரல்
காந்து எரி கஞல மூட்டி, கடன்முறை கடவாவண்ணம்
நேர்ந்தனன் - நிரம்பும் நல் நூல் மந்திர நெறியின் வல்லான். 

💥கவிச்சக்கரவர்த்தி கம்பர்

💥அப்போது அந்த சிதையில் இருந்து வெளிவந்த வெட்பத்தையும் அதன் வாசனையையும் தாங்க முடியாமலும் போன ஸ்ரீ தேவியானவள் ராமரின் வலது புறத்தில் இருந்து இடதுபுறத்துக்கு சென்று நின்று கொண்டாள்.

💥 திருபுட்குழி திவ்ய தேசத்தில் வலப்புறம் இருந்த ஶ்ரீ தேவித்தாயார்  இடப்புறமும், இடப்புறம் இருந்த பூமி தேவித்தாயார் வலப்புறமும் மாறி அருள்பாலிப்பதாக புராணங்கள் கூறுகின்றன.

💥 ஏன் எனில் பூமிக்கு வெப்பத்தை தாங்க கூடிய சக்தி உண்டு.

💥ஆகவேதான் உலகிலேயே இந்த ஒரு ஆலயத்தில்தான் ராமரின் இடதுபுறத்தில் ஸ்ரீ சீதா தேவியும், வலப் புறத்தில் பூமா தேவியும் காணப்படுகிறார்கள்.

💥இங்குள்ள விஜயராகவாப் பெருமானின் பக்கத்தில் நின்று கொண்டு உள்ள சீதை மற்றும் பூதேவியின் உருவம் திருவுருவம் மிக விசேஷமானது

 💥திருபுட்குழியில் தாயார் மரகதவல்லியின் சன்னதி பெருமாளுக்கு இடதுபுறமும், ஆண்டாள் சன்னதி பெருமாளுக்கு வலது புறமும் அமைந்துள்ளது குறிபிடத்தக்கது.

💥ஜடாயுவின் வேண்டுகோளின்படி உயிா் நீத்த ஜடாயுவுக்கு மோட்சப் பேறு அளித்த இராமபிரான் தன் அம்பினால் உண்டாக்கப்பட்ட தீர்த்தத்தில் தனது திருக்கரங்களினாலேயே ஜடாயுவுக்கு அந்திமக் கடன்களைச் செய்தார்.

💥எனவே இஙகு உள்ள புஷ்கரணி ஜடாயு புஷ்கரணி எனப்படுகிறது.

💥இத்தலமே விஜயராகவனாக, ரகு குலதிலகம் ஶ்ரீராமன் அருள்பாலிக்கும் திருப்புட்குழி திருத்தலமாகும். 

💥இந்த ஆலயம் உள்ள இடத்தில்தான் ஸ்வாமி ராமானுஜரின் குருவான யாதவப் பிரகாசர்  வாழ்ந்துள்ளதாகவும்,  ராமானுஜர் இங்குதான் வேதப் பாடம் பயின்றதாகவும் ஆலயக் குறிப்பு உள்ளது.

💥இராமானுஜர் படித்த மண்டபம் இன்றும் உள்ளது. இராமானுஜர் கல்வி கற்றதை விளக்கும் சிற்பமும் இக்கோவிலில் உள்ளது.

💥ஸ்வாமி ராமானுஜர் ஆலயத்தின் எதிரில் ஜடாயு  தீர்தத்தில் நீராடிவிட்டு   விட்டு  பகவானை பூஜித்து  வந்ததாக வரலாற்றுச் செய்தி உள்ளது. 

💥கோவிலின் சிறபம்சம் :

💥மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவுடன் அருள் பாலிக்கிறார். பெருமாள் திருவீதி செல்லும் போதெல்லாம் ஜடாயுவுக்கும் தனி மரியாதை  தருகிறார் திருபுட்குழி விஜயராகவ பெருமாள் .

💥ஜடாயுவுக்கு ஈமகிரியைகள் செய்த தலம் ஆதலால் அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் பலிபீடமும் கொடி மரமும் கோவிலுக்கு வெளியில் உள்ளன.

💥இங்கு கோவிலுக்கு எதிர்ப்புறத்தில் ஜடாயுவுக்கு சன்னதியுள்ளது.

1. 💥ஸ்தலப் பெருமைகள் :

💥முன்னோருக்கு தர்பணம் கொடுக்கும் மிகச்சிறந்த தலங்களில் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோயில் முக்கியமான திருத்தலம் ஆகும்.

💥ராமபிரானே இத்தலத்தில் ஈமகிரியைகள் செய்துள்ளதால் முன்னோர்கு தர்பணம் செய்பவர்கள் மகாளய அமாவாசையன்று  இத்தலத்தில் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

💥தமது மூதையினருக்கு யார் சரியான முறையில் இறுதிக் கடன்களையும், திதிகளையும் செய்யவில்லையோ அவர்கள் இங்கு வந்து பகவானையோ வேண்டி வணங்கினால் அவற்றினால் ஏற்பட்ட பாவங்கள் விலகும் .

2. 💥ஸ்தலப் பெருமைகள் :

💥இங்குள்ள தாயாருக்கு "வறுத்தபயறை முளைக்க வைக்கும் மரகதவல்லித்தாயார் " என்ற சிறப்பு பெயருண்டு. 

💥காரணம் என்ன ?

💥 மரகதவல்லி தாயாரை வணங்கினால் பலன் உறுதி என்பதால், இவ்வாறு சொல்வர்.  திருந்தாதவர்களும் இவள் பார்வைபட்டால் திருந்தி விடுவார்களாம்.  

💥குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் பல தலங்களுக்கும் சென்று வந்திருக்கலாம்.

💥அவர்கள் கடைசியாக முயற்சி செய்ய வேண்டிய தலம், காஞ்சிபுரம் அருகிலுள்ள திருப்புட்குழி மரகதவல்லி தாயார் சமேத விஜயராகவப்பெருமாள் கோயில்.

வறுத்த பயிரே முளைக்கும் என்றால், மகப்பேறும் உறுதியாகும் என்பது இங்கு வரும் பக்தர்கள்களின் திடமான நம்பிக்கை.  

💥அது மட்டுமல்ல......குழ்ந்தை பாக்கியம் வேண்டும் அன்னையர்கள், இங்குள்ள ஜடாயு தீர்த்ததில் நீராடி மடப்பள்ளியில் வறுத்து, நனைந்த பயறை தங்கள் மடியில் கட்டிக்கொண்டு விரதம் இருந்து இரவில் உறங்க வேண்டும்.  

💥மறுநாள் காலையில் மீண்டும் குளித்துவிட்டு பயறை தாயார் சன்னதி முன் கொட்ட வேண்டும். 

அந்த பயறு முளைந்திருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது  நம்பிக்கை.

💥 தாயாருக்கு திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை நிறைவேற்றுகின்றனர்.

💥எனவே இக்கோயிலை அமாவாசை கோவில் என்றும் புத்திர பாக்ய கோவில் என்றும் அழைக்கின்றனர்.

💥கல் குதிரை

💥இத்தலத்தில் அசையும் உறுப்புக்கள்  கொண்ட கல்குதிரை வாகனம் இருக்கிறது. இது மூன்று தனிதனி பகுதிகளை உடையது. சிற்பக்கலையில் ஒர் அதிசயம். 

💥அதிசயம் என்ன என்றால் கல்லினால் செய்யப்பட்டு உள்ள அதன் இரண்டு கால்களும் நிஜகுதிரையைப் போல ஆடும். இப்படி கல்லில் ஆடும் சிலையை உலகில் வேறு எங்குமே காண முடியாதது.

💥உண்மையான குதிரை போன்றே தோற்றம் அளிக்கும். இதை செய்த சிற்பி இது மாதிரி இனி யாருக்கும் செய்து கொடுப்பதில்லை என்ற உறுதியோடு  இருந்து உயிரை விட்டாராம்.

💥இவரது உறுதிக்கும் பக்திக்கும் பாராட்டு தெரிவித்து பெருமாள் அவர் பெயர் கொண்ட வீதிக்கு திருவிழாவின் 8ம் நாளன்று எழுந்தருளுகிறார். 

💥இதர அம்சங்கள் ;

 💥பெருமாள் திரு வீதியில் புறப்படும் போதெல்லாம் ஜடாயுவுக்கு தனி மரியாதை உண்டு.

💥திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யபெற்றது.

வைணவ ஆச்சாரியர் வேதாந்த தேசிகர்  இத் தல பெருமாளை பரமார்த்த ஸ்துதி என்னும் பாடலால் போற்றியுள்ளார்.

💥திருவிழாக்கள் : 

ஆவணியில் பவித்ரோற்சவம் தை அமாவாசை தெப்ப உற்சவம், மாசி  பிரம்மோற்சவம்,நவராத்திரி, திருகார்திகை.

💥கோவில் திறந்து இருக்கும் நேரம் : காலை 07-12 மாலையில் 04.00 -7 மணி வரையில்

தொலைபேசி எண்:  044 - 272 46501

💥போன் நம்பர் மாறுதலுக்கு உட்பட்டது

                 🌀ஶ்ரீராமஜெயம்

🍒 சுபமஸ்து 🙏 தீர்காயுஷ்யமஸ்து. 
💥 ஶ்ரீமன் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே.
💥 ஶ்ரீமதே நாராயணயாய நம:   
✳️ ஶ்ரீமதே ராமானுஜாய நம:💥
🙏 ராமானுஜ தாஸன்   சம்பத்குமாரன். 

💥பாக்யம். 💠     🌞     💥


No comments:

Post a Comment