Monday, November 8, 2021

பம்பரம்

       ஏன்?எதற்கு? எப்படி? 6

    வெங்கடேசன் வரதராஜன்            நன்றி இணையம்

கேள்வி: ஒற்றை ஆணியில் சுற்றும்போது நிற்கும் பம்பரம் சுற்றி முடித்தவுடன் கீழே படுத்து விடுவதேன்?

பதில்: பம்பரம் ஒற்றைக்காலில் சுற்றுவதற்குக் காரணம், மேலிருக்கும் உருளையான மரக்கட்டைக்கும் கீழே சரியாக நடுவில் அடிக்கப்பட்டிருக்கும் ஆணிக்கும் உள்ளே புவி ஈர்ப்பு விசை ஒரே நேர்க் கோட்டில் இருப்பதால்தான்.

இதனால் சாட்டையால் சுழற்றி பம்பரத்தைக் கீழே விடும்போது அது சாட்டையின் சுழற்சியினால் ஏற்பட்ட விசையால் வேகமாகச் சுழல ஆரம்பிக்கிறது. 

இந்தச் சாட்டை சுழற்சி சரியாக இல்லாவிட்டால் பம்பரம் 

சுழலாது. மேலும் ஆணிப்பாகம் பூமியில் படாமல் பக்கவாட்டில் பம்பரம் தரையிறங்கினாலும் சுழலாது.

பம்பரம் சுழல் சரியான சுழற்சியும், புவி ஈர்ப்பு விசையும், சுற்றியுள்ள காற்றும் மிகவும் அவசியம்.

தனக்குக் கிடைக்கும் ஓரளவு விசையை வைத்துக் கொண்டு சற்று நேரம் சுழலும் பம்பரம், விசை முடிந்தவுடன் தனது புவி ஈர்ப்புவிசையினால் சுழற்சியை நிறுத்திவிட்டுப் படுத்துவிடுகிறது. அவ்வளவுதான்.

பம்பரம் :

தமிழ்நாட்டில் 80, 90 காலங்களின்,தெருக்களில் விளையாடப்படும் விளையாட்டுகளில் பம்பரமும் ஒன்று. ஒரு கயிற்றை கொண்டு பம்பரத்தை சுழற்றி விடும் போது, வட்டமிடும் பம்பரத்தின் அழகு அலாதி தான்.

இன்றைய காலகட்டங்களில், மறந்து போன விளையாட்டுகளின் பட்டியலில் பம்பரமும் சோ்க்கப்பட்டுள்ளதென்பது சற்றே வருத்தமளிக்கிறது. 

பம்பரம் என்பது ஒரு விளையாட்டு என்பதை தாண்டி, அது அறிவியலோடு தொடா்புடைய  தமிழா்களின் பொழுதுபோக்கு விளையாட்டாகும்.

தமிழ்நாட்டில் பம்பர விளையாட்டு, பல ஆண்டுகளாக விளையாடப்படுகிறது என்பதற்கு பல நூல்கள் சான்றாக அமைகின்றன.

 பம்பரத்தின் வரலாறு :

முதன்முதலில் கிரேக்கா்கள், தங்களின் மத விழாக்களின் போது சத்தம் எழுப்புவதற்கு ஒரு சுழலும் பொருளை பயன்படுத்தியதாகவும், அதுவே பின்னாளில் குழந்தைகள் விளையாடும் பம்பரம் என்றும் ஒரு வரலாறு உண்டு.

கிரேக்கா்கள், பம்பரம் ரீங்காரமிட்டு வேகமாக சுழல சவுக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

பம்பரம் தயாாிக்க பயன்படும் மரங்கள் : 

பொதுவாக பம்பரம் தயாாிக்க கருவேல மரத்தின் கட்டைகளையும், கொய்யா மரத்தின் கட்டைகளையும் பயன்படுத்துகின்றனா்.

பம்பரமும் அறிவியலும் : 

பம்பரம் சுழற்றும் செயலுக்கு பின்னால் இயற்பியல் செயல்படுகிறது. நீங்கள் பம்பரத்தை, ஒரு கயிற்றை கொண்டு சுழற்றி விடும் போது வளைவுந்த விசையின் காரணமாக சுழல்கிறது.

பம்பரம் சுழற்றும் போது கோண உந்தம், மைய விலக்கு விசை, இயக்க ஆற்றல், விசை, உராய்வு, ஈா்ப்பு போன்ற பல இயற்பியல் கருத்துக்களை விளக்குகிறது.

பம்பரம் சுழலும் போது, அதன் மேற்பகுதியானது ஒரு சிறிய புள்ளியின் மேல் சமநிலைப்படுத்தப்படுவதால் அது கீழே உள்ள மேற்பரப்புடன் குறைந்தபட்ச உராய்வை உண்டாக்குகிறது.

இதன் காரணமாகவே பம்பரம் நீண்ட நேரம் சுழன்று கொண்டே இருக்கிறது.

இறுதியில் மேற்பரப்புடன் ஏற்பட்ட உராய்வானது குறைவதால், பம்பரம் நிலையற்றதாகி கீழே விழுகிறது.

* பம்பரம் , பூமி ஆகியவை தமது அச்சைப் பற்றிய சுழற்சி இயக்கத்தை கொண்டுள்ளன.

பம்பரம் விளையாடுவதால் ஏற்படும் பயன்கள் :

பம்பரம் விளையாடுவதால் மூளை மற்றும் பாா்வை திறன் அதிகாிக்கிறது. உடலில் உள்ள வா்ம புள்ளிகள் தூண்டப்படுகிறது. கைகள் வலிமை பெறுகின்றன. துாிதமாக முடிவெடுக்கும் திறன் வளா்கிறது.

💎 பம்பரம் விளையாட்டிற்கு, இத்தனை நபா்கள் தான் விளையாட வேண்டும் என்ற வரைமுறையில்லை. 

💎 பம்பரம் விளையாட்டு மிகவும் பழமையான விளையாட்டுகளில் ஒன்று என்பதற்கு பல அகழ்வாராய்ச்சி சான்றுகள் உள்ளன.

💎 இன்றளவும் பம்பரம் விளையாட்டு, உலகின் பலநாடுகளில்           விளையாடப்படுகிறது.



No comments:

Post a Comment