காது இரைச்சல், காது மந்தம் குணமாக...
தூதுவேளை இலைகளை நன்கு சுத்தம் செய்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்து கொள்ள வேண்டும்.
நல்லெண்ணெய் - 50 மில்லி
தூதுவேளை இலை சாறு - 50 சொட்டு
50 மில்லி நல்லெண்ணெய்க்கு 50 சொட்டு தூதுவேளை இலை சாறு தான் எடுக்க வேண்டும்.
நல்லெண்ணையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் தூதுவளை இலை சாறு சேர்த்து சிறுதீயில் கொதிக்க வைத்து
சல சலப்பு சத்தம் அடங்கியதும்
இறக்கி வடிகட்டி பாட்டிலில் பத்திரப்படுத்தவும். எண்ணெயில் தண்ணீர் சுண்டியதும் இறக்கி விட வேண்டும். நீண்ட நேரம் அடுப்பில் வைத்திருக்க கூடாது.
மருந்து பயன்படுத்தும் முறை:
இரவு படுக்கப் போகும் முன்னர் எந்த காதில் பிரச்சனை உள்ளதோ அந்த காதில்
மூன்று சொட்டுகள் தூதுவளைத் தைலத்தை விட்டு ஒரு பஞ்சு வைத்துக் கொண்டு இரவில் தூங்கி விடலாம். காலையில் எழுந்ததும் காதை சுத்தப் படுத்தி கொள்ள வேண்டும். .
தினமும் இரவில் எண்ணெய் விட்டு காலையில் காதை அவசியம் சுத்தப்படுத்த வேண்டும்.
இப்படி தொடர்ந்து செய்து வர இருபது நாட்களுக்குள் காது இரைச்சல் குணமாகும்.
காது மந்தமாக இருப்பவர்களுக்கு காது கேட்க ஆரம்பித்து விடும். அற்புதமான மருந்து இது.
குணமாகும் வரை தொடர்ந்து இந்தத் தைலத்தைப் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment