Monday, November 8, 2021

நெல்லிக்காய் துவையல்

 நெல்லிக்காய் துவையல்

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 6, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு.  

செய்முறை: பெரிய நெல்லிக்காயை கொட்டை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் தாளித்து துவையலில் சேர்த்துப் பயன்படுத்தவும்



No comments:

Post a Comment