கேரட் தக்காளி சட்னி
தேவையான பொருட்கள்
கேரட் - 2
தக்காளி - 1
காய்ந்த மிளகாய் - 3 முதல் 4 வரை
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
தக்காளி - 1
காய்ந்த மிளகாய் - 3 முதல் 4 வரை
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
செய்முறை விளக்கம்
முதலில் கேரட்டை நன்கு கழுவி தோல் சீவி நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தக்காளியையும் நடுத்தர அளவிற்கு வெட்டிக் கொள்ளவும்.
பின் கடாயில் எண்ணை விட்டு சூடானதும் அதில் கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றைப் போட்டு சிவக்கும் வரை வறுக்கவும்.அதன் பின் அதில் மிளகாயைப் போட்டு சற்று வறுத்து அத்துடன் இஞ்சி, தக்காளித்துண்டுகள் சேர்த்து சில நிமிடம் வதக்கவும்.
பின்னர் அத்துடன் கேரட் துண்டுகளையும் சேர்த்து மீண்டும் சில நிமிடம் வதக்கவும்.அதன் பின் கீழே இறக்கி வைத்து தேங்காய்த்துருவலைச் சேர்க்கவும்.சூடு குறைந்தவுடன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.
பின்னர் அதில் கடுகு, கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்.இப்போது ஆரோக்கியமான கேரட் தக்காளி சட்னி தயார்.
🧜♀️சுபயாழ்னி🧜♀️
No comments:
Post a Comment