கொள்ளு ரசம்
கொள்ளு ரசம் நமக்கு தேவையற்ற கொலஸ்டிரால் நீக்க பெரிதும் உதவுகிறது!
தினமும் இந்த ரசம் செய்வது எளிது.
செய்முறை:
நான்கு ஸ்பூன் கொள்ளு
மிளகு இரண்டு ஸ்பூன்
சீரகம் இரண்டு ஸ்பூன்
கருவேப்பிலை
பூண்டு பற்கள் 10
மிளகாய் வற்றல் 2
கொத்துமல்லி விதை 2 ஸ்பூன்
மிளகு இரண்டு ஸ்பூன்
சீரகம் இரண்டு ஸ்பூன்
கருவேப்பிலை
பூண்டு பற்கள் 10
மிளகாய் வற்றல் 2
கொத்துமல்லி விதை 2 ஸ்பூன்
பூண்டை தவிர அனைத்து பொருட்களையும் சட்டியில் வறுத்து கொள்ளவும். முதலில் கொள்ளு போட்டு பாதி வறுத்தவுடன் மீதி சேர்க்கவும்.
மிக்ஸியில் அரை தக்காளி பூண்டு சேர்த்து வறுத்த பொருட்களை சிறிது பிறுபிறுப்பாக அரைக்கவும்.
எலுமிச்சை அளவு புளி கரைத்து கொதிக்கும் போது மஞ்சள், உப்பு, இரண்டு தக்காளி, பெருங்காயம் சேர்த்து ஐந்து நிமிடம் கொதித்த பின் அரைத்தவற்றை போட்டு மேலும் 10 நிமிடம் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
ஒரு ஸ்பூன் நெய்யில் கடுகு, சீரகம் தாளித்து கொத்தமல்லி தழை போட்டால் சூடான கொள்ளுரசம் தயார்.
இதற்கு பருப்பு தேவையில்லை.
இன்னொன்று, கொள்ளை வேகவைத்து அந்தத் தண்ணியையும் சேர்த்துக்கலாம். இது நெஞ்சுசளியை நீக்கும் உடல் பலம்பெறும்!
GL
No comments:
Post a Comment