Monday, November 8, 2021

வல்லூறு

  ஏன்?எதற்கு? எப்படி? 7

    வெங்கடேசன் வரதராஜன்              நன்றி இணையம்

கேள்வி: வல்லூறுக்கு இரண்டு ஆயுள்காலம் உள்ளதாமே? இது உண்மையா?

பதில்: உண்மைதான்! ஆனால் சிலவகை வல்லூறுகளுக்கு மட்டுமே இந்த அபூர்வ சக்தி உள்ளது. ஆனால் இதற்காக அந்த வல்லூறு மிக அதிகமான துன்பத்தைச் சந்திக்க நேரிடும்.

50 வயது கடந்த வல்லூறு, மலை உச்சிகளுக்குச் சென்று தனது அலகை பாறையில் மோதி, மோதி உடைத்துக் கொள்ளுமாம். இந்தச் சமயத்தில் அதனால் உணவு உண்ணவும் நீர் அருந்தவும் இயலாது. இப்படிப் பல நாள்கள் பட்டினி கிடக்க நேரிடும். மேலும் தனது சிறகுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்த்துக் கொள்ளுமாம்.

இப்படிப் பல நாள்கள் கடந்த பின்பு (அதுவரை அந்த வல்லூறு உயிரோடு தாக்குப்பிடித்தால் மட்டுமே) புதிய அலகு முளைத்து வளருமாம். சிறகுகளும் புதிதாகத் தோன்றுமாம். இப்படிப் புதுப் பிறப்பு எடுக்கும் வல்லூறு தனது இரண்டாவது ஆயுட்காலத்தைத் தொடங்கி இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு வாழுமாம். ஆனால் இதற்காக அது படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல!


வல்லூறு


இதன் அழைப்பு ப்பீ..- வ்வீ.. என ஒலிக்கும். முதல் சுரம் ஓங்கியும் இரண்டாவது நீளமாகவும் இருக்கும். பறக்கும் போது கூர்மையாக அதே நேரம் சுருக்கமாக கிக்-கீ .... கிக்-கீ என ஒலி எழுப்பும்.



இந்தியாவில் இதன் இனப்பெருக்கக் காலம் மார்ச் முதல் ஜூன் வரையிலும். இதன் கூடு காக்கைகளின் கூட்டைப் போல புற்களால் வரிவரியாக வட்ட வடிவில் நெய்யப்பட்டிருக்கும். ஆண், பெண் இரு பறவைகளுமே கூட்டுக்கானச் சுள்ளிகளைத் தேடி எடுத்துக் கால்களில் இடுக்கிச் செல்லும். காக்கைகளைப் போலவே உலோகக் கம்பிகளையும் பயன்படுத்தும். பொதுவாக ஒரு முறைக்கு 3-4 முட்டைகள் வரை இடும். ஒருவேளை முட்டைகள் அகற்றப்பட்டால் வேறு முட்டைகளை இடும் எனத் தெரிகிறது. ஒரு ஆய்வாளர் சிலநேரங்களில் இவை 7 முட்டைகள் வரையிலும் கூட இடும் என்கிறார். முட்டைகள் வெளிர் நீலத்தில், அகன்ற பாகத்தில் சாம்பல் புள்ளிகளைக் கொண்டும், குறுகிய பாகத்தில் கருப்பாகவும் இருக்கும். 18 முதல் 21 நாட்கள் வரையிலும் அடை காக்கும்.

வல்லூறுகள் காடுகள், விளைநிலங்கள் மற்றும் நகர்புறப் பகுதிகளை வாழ்விடங்களாகக் கொண்டவை. தனியாகவோ அல்லது ஜோடியாகவோ தென்படும். வல்லூறுகள் பறப்பதைப் பார்த்தாலே சிறுபறவைகள் பதறிச் சிதறும். அணில்களும் அச்சமுற்று ஓடி மறையும். எலிகள், அணில்கள், சிறுபறவைகள், ஓணான்கள், பல்லிகள், பூச்சிகள் இவற்றோடு சில நேரங்களில் சிறு பாம்புகளையும்  இரையாக உட் கொள்ளும் வல்லூறுகள். 

வல்லூறுகளிடமிருந்து தப்பிக்க சின்னப் பறவைகள்இலை தழைகளுக்குள் பதுங்கிக் கொள்ளும். சிறு நீல நிற மீன்கொத்திகள் தண்ணீருக்குள் பாய்ந்து தம்மை மறைத்துக் கொள்ளும். காட்டுச் சிலம்பன்கள் (Jungle Babbler or Seven sisters) கூட்டமாக ஒன்று சேர்ந்து வல்லூறுவைத் துரத்துவதுண்டு.

பருந்து வளர்ப்பவர்களுக்கு (குறிப்பாக  இந்தியாவிலும் பாக்கிஸ்தானிலும்) வல்லூறுகள் மிகப் பிடித்தமான பறவை. ஏனெனில் இவை பழக்குவதற்கு எளிதானவை. இவற்றை விட விலை உயர்ந்த பருந்துகளுக்கு வல்லூறுகளை அனுப்பி இரைகளைக் கொண்டு வரச் செய்கிறார்கள். வல்லூறுகள் இலாவகமாக பெரிய பறவைகளையும் கவ்விக் கொண்டு வரும் திறமை பெற்றவை. கெளதாரிகள், காக்கைகள் மட்டுமின்றி மயில் குஞ்சுகளையும் பற்றித் தூக்கி வந்து விடும் ஆற்றல் பெற்றவை.



No comments:

Post a Comment