மாசாணியம்மன் கோயில், ஆனைமலை.
போனவருடம் டிசம்பர் மாதம் கோயம்பத்தூர் சென்ற போது ஆனைமலை மாசாணியம்மனை சென்று தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. கோவையில் இருந்து அறுபது கிலோ மீட்டர் தூரத்தில் பொள்ளாச்சிக்கு அருகே இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த அம்மன் "மாசாணி தேவி" என்று வட இந்தியர்களால் அழைக்கப்படுகிறார்.
ஆனைமலைக் குன்றின் அடிவாரத்தில் ஆழியாறு சங்கமிக்கும் இடத்தில் இக் கோயில் உள்ளது. இக் கோயிலின் பின்புலமாக ஆனைமலைக் குன்றின் பசுமையினைக் காணலாம்.
இக் கோயிலின் பிரதான தெய்வமாக மாசாணி அம்மன் சன்னதி உள்ளது. இங்குள்ள மாசாணி அம்மன் சிலை படுத்த வாக்கில் உள்ளது. அம்மனின் தலை முதல் பாதம் வரை 15 அடி நீளம் ஆகும். தெற்கே தலைவைத்துப் படுத்திருக்கும் அவருடைய திருக்கரங்களில் திரிசூலம், உடுக்கை, கபாலம், சர்ப்பம் ஆகியவை காணப்படுகின்றன. தலையில் ஜுவாலா மகுடத்துடன் மேலே நோக்கியபடி காணப்படுகிறார்
மாசாணியம்மனைச் சுற்றி வலம் வந்தால் தீராத வியாதிகளும் தீரும் என்கிற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது.
இராமர் தாடகை என்ற அரக்கியைக் கொல்வதற்கு முன்பு மாசாணி தேவியிடம் பிரார்த்தனை செய்ய ஆனைமலைக்கு வந்ததாக புராணம் சொல்கிறது.
இக்கோயிலில் மிகச்சிறப்பு பெற்ற விழாவாக பூக்குண்டம் இறங்கும் விழா எனப்படும் தீமிதித்திருவிழா வருடா வருடம் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment