ஏழு முக்தி தரும் ஷேத்திரங்களில் அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரித்வாரவதீ சைவ ஸப்ஸத்தா மோக்ஷதாயகா ......என்று ,கொண்டாடப்படும் ஊர் மதுரா நகரமாகும்.
பெரியாழ்வார், தனது திருமொழியில்
வைகுந்தம் துவரை அயோத்தி
இடம் உடை வதரி இடவகை உடைய
எம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிரத் தரணி விண்டு இடியத்
தலைப்ற்றிக் கரைமரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக்
கண்டமென்னும் கடிநகரே.
ஆண்டாள் தன்னுடைய நாச்சியார் திருமொழியில்,
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழி நான்
அன்று மதுரை மன்னனைப் பற்றி கூறுகிறார்.
நம்மாழ்வார் தன்னுடைய திருவாய்மொழியில்
மண்ணின் பாரம் நீக்குவதற்கு வடமதுரையில் கண்ணன் வந்து பிறந்தான், கண்ணன் அல்லால் மற்றொரு தெய்வம் இல்லை என்று உணருவீர், அவனைச் சரண் அடைந்து உய்ம்மின் என்று, கூறு கிறார்.
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரை பிறந்தான் திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்ந்து உய்ம்மினோ எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்றில்லையே மதன ஆதார பூமி அன்று, கடைவதற்கு ஆதாரமாக இருந்த பூமி, அதாவது ப்ருது மகராஜன் இந்த இடத்தில் புமாதேவியிடம் இருந்து மக்கள் வாழ்வதற்கு வேண்டிய சிறந்த பொருட்களையெல்லாம் கடைந்து எடுத்தபடியால் இந்த இடம் மதுரா என்று பெயர் பெற்றதாம்.
மதுராவில் வசித்தாலும், கண்ணன் இங்கு பிறந்தான் என்று நினைத்தாலும், வசுதேவரின் காலில் இருந்த விலங்குகள் உடைந்தால் போல் நம் பாவங்கள் விலகி போகுமாம்.
No comments:
Post a Comment