Friday, November 5, 2021

தீபாவளி கொண்டாடாத, அனந்தாழ்வான்

 தீபாவளித் திருநாள் !!!--பதிவு 3

      ⚡️💥🎆🎇🌠🎆🎇

உலகம் முழுக்க வாழும் இந்துக்கள் இன்று விமரிசையாக தீபாவளி கொண்டாடினாலும், மாண்டியம் ஐயங்கார் என அழைக்கப்படும் தமிழை தாய் மொழியாக கொண்ட ஒரு பிரிவினர் இதை துக்க தினமாக கடைபிடிக்கின்றனர்.. நரகாசுரனுக்காக அல்ல, தன்னை தானே மைசூர் புலி என அழைத்து கொண்ட மதவெறி பிடித்த மிருகம் திப்பு சுல்தான் என்பவனால்...

சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் தன் உத்தரவை மீறி தீபாவளி கொண்டாடியதற்காக 800 க்கு மேற்பட்ட மாண்டியம் ஐயங்கார் மக்கள் வசித்து வந்த தற்போதைய கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் திருநாராயனபுரம் எனும் ஊரை சுற்றி வளைத்து ஆண் பெண் குழந்தைகள் என அனைவரையும் வெட்டி வீசி ஒரே இரவில் ஒரு ஊரையே சுடுகாடு ஆக்கிய தினம் இன்று.. 

தீபாவளி கொண்டாடாத, அனந்தாழ்வான் வம்சத்து, மண்டயம் அய்யங்கார்கள் !!..

விஜய நகரப் பேரரசு காலத்தில் மாமன்னர் கிருஷ்ண தேவராயாிடம் நில தானங்கள் பெற்று நன்றாக வாழ்ந்த மண்டயம் அய்யங்கார்களுக்கு ஏற்பட்ட  அவல நிலை

தீபாவளி கொண்டாடாத, அனந்தாழ்வான் வம்சத்து, மண்டயம் அய்யங்கார்கள் !!

        🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


மண்டயம் அய்யங்கார்கள் வரலாறு:

      🌏🌏🌎🌐🌏🧭🌏🌎

ஸ்ரீ அனந்தாழ்வான் ராமாநுஜரின் அத்யந்த சீடர்களுள் ஒருவர்.கர்நாடக மாநிலம் 'சிறுபுத்தூரில்'(மைசூர்/ ஸ்ரீரங்க பட்டினம்--பாண்டவபுரா சாலையில் உள்ள 'ஹாலே கிரங்கூரு') அவதரித்த அனந்தாழ்வான் ராமாநுஜர் நியமனப்படி திருமலை சென்று,அங்கு ஏரி வெட்டி, நந்தவனம் அமைத்து, அலங்காரப் பிரியர் திருவேங்கடவருக்கு, புஷ்பக்கைங்கர்யம் செய்து வந்தார்.திருவேங்கடவரே அவரை த்தம் ஆசார்யராக ஏற்றுக்கொண்டு

'தனியன்' சமர்ப்பித்தார்.அனந்தாண் பிள்ளை,தம் ஊரிலிருந்து 30 கைங்கர்ய பரர்களை அழைத்துச் சென்று திருப்பதி க்கு அருகில் உள்ள 'இளமண்டயம்/பாலமண்டயம்' என்னும் ஊரில் குடியேற்றினார்.அவர்கள் அனைவரும் திருவேங்கடவருக்கு கைங்கர்யம் செய்து வந்தனர். 

அனந்தாழ்வானுக்குப் பின்னர் அவர் வம்சத்தில் வந்தவர்கள் திருமலை-திருப்பதி மட்டுமல்லாமல், தங்கள் பூர்விகமான மேல்கோட்டை/ஸ்ரீரங்கப் பட்டினம் கோயில்களில் கைங்கர்யம் செய்து வந்தனர்.16-ஆம் நூற்றாண்டில்,

மாமன்னா் கிருஷ்ண தேவராயர்,மேல்கோட்டை, மற்றும் அருகிலுள்ள கிருஷ்ண ராயபுரம், மற்றும் பல ஊர்களையும் அனந்தாழ்வான் வம்சத்தார்களுக்குத் தானமாக அளித்தார்.அனந்தாழ்வானின் 12 ஆவது பரம்பரையில் வந்த கோவிந்தராஜ ஸ்வாமி என்பவர், தலைமையில் பலரும் வந்து கிருஷ்ண ராயபுரம்/மேல்கோட்டை பகுதிகளில் குடியேறினர்.இளமண்டயத்திலிருந்து வந்து குடியேறியதால், கிருஷ்ணராய புரத்தின் பெயரே "மண்டயம்" ஆக மாறி விட்டது.அதுவே மருவி இப்போது "மாண்டியா" என்று அழைக்கப்படுகிறது.

அங்கு குடியேறியவர்களும்,அவர்கள் வம்சத்தாரும் "மண்டயம் அய்யங்கார்கள்" என்று அழைக்கப்படுகின்றனர்.

இவர்களில் பலர் மைசூரை ஆண்ட 'உடையார்' மன்னர்களின் ராஜ்யத்தில் அமைச்சர்களாகவும்,உயர் அதிகாரி களாகவும் பணியாற்றினர்.

ஹைதர் அலி/திப்பு சுல்தான்  கொடுமைகள்:

✊👊🤜🤛🤞👊✊🤜🤛🤞

18 ஆம் நூற்றாண்டில் நடந்த இஸ்லாமிய படையெடுப்புகளில்,'ஹைதர் அலி',

மைசூரை ஆண்ட மன்னர்களையும்,

அவர்கள் ராஜ்ய நிர்வாகத்தில் இருந்த மண்டயம் அய்யங்கார்களையும் கொடுமைப் படுத்தினான்.இவர்களில் பலரும்,கொடுமைகளிலிருந்து விடுபட ஊரை விட்டுச் சென்று விட்டனர்.மேல் கோட்டைப் பகுதியில்,கோயில் தொடர் பான கைங்கர்யங்கள் செய்து வந்தோர் அங்கேயே இருந்தனர்.ஹைதர் அலியை விரட்டியடிக்க,திருமலை அய்யங்கார், நாராயண அய்யங்கார் ஆகியோர் உடையார்களின் தூதுவர்களாக, கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரி களுடன் மறைமுகத் தொடர்பில் இருந்தனர். இதையறிந்த ஹைதர் அலி அவர்களைச் சிறையில் அடைத்து, கொடுமைப் படுத்தினான்.ஹைதர் அலிக்குப் பின்னால் வந்த,'திப்பு சுல்தான்' மேலும் பல கொடுமைகளை இழைத்தான்.திப்புவின் அமைச்சரவை யில் இருந்த சாமைய அய்யங்கார் என்பவர்,மைசூர் ராணி லஷ்மா அம்மணி தேவி சார்பாக,சென்னையிலிருந்த, ஆங்கிலேயர்களின் படைத்தளபதியுடன் மறைமுகத் தொடர்பில் இருந்தார். இதை அறிந்த திப்பு அவரையும்,அவர் சார்ந்த மண்டயம் அய்யங்கார்கள் அனைவரை யும் கொல்லத் தீர்மானித்தான்..(அந்த ஆங்கிலேயத் தளபதி ஜார்ஜ் ஹாரிஸ் என்பவன் தான்,நான்காவது ஆங்கிலேய-மைசூர்ப் போரில்,திப்பு சுல்தானைத் தோற்கடித்தான்).

மண்டயம்,மாபதகக் கொலை(Mandyam Massacre) !!

       🤯😩🥶🥵😱😰😭🤯🥶

1783 ஆம் ஆண்டு,ஐப்பசி மாதம் 'நரக சதுர்த்தசி-தீபாவளி'யன்று மேல்கோட்டை பிரதேசத்தின் மீது, கோரமான தாக்குதல் நடத்தினான் திப்பு சுல்தான்.அந்தத் தாக்குதலில் அங்கு வாழ்ந்து வந்த சுமார் 800 க்கும் மேற்பட்ட,மண்டயம் அய்யங்கார்களையும்/குடும்பத்தாரையும் (பாரத்வாஜகோத்ரத்தைச் சேர்ந்தவர்கள்) கொன்று குவித்தான்.

இந்தக் கோரத் தாக்குதல், ஸ்ரீரங்கப்பட்டினம் நரசிம்மர் கோயிலில் தீபாவளி வழிபாட்டுக்காகக் கூடியிருந்த மண்டயம் அய்யங்கார்கள் மீது நடத்தப் பட்டது என்றும் சிலர் சொல்கிறார்கள்.

கொல்லப்பட்டோரின் உடல்களை அந்தக் கோயில் வளாகத்தில் இருந்த புளிய மரத்தில் கட்டித் தொங்க விட்டானாம் ! அந்தப் புளியமரம் இன்னும் இருக்கிறது என்கிறார்கள்.

அந்தத் துக்க சம்பவத்தால், இன்றும் பாரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்த மண்டயம் அய்யங்கார் குடும்பத்தார் (அவர்கள் எங்கு வாழ்ந்தாலும்) "தீபாவளி" கொண்டாடுவதில்லை.இந்த நாளைத் துக்க நாளாக அனுஷ்டிக்கிறார்கள்.

No comments:

Post a Comment