#கனியுமோகாதல்
கனியுமோகாதல்_4
தொடர்கதை: கனியுமோ காதல்
அத்யாயம்: 4
ஜட்ஜ் கற்பக விநாயகம் பத்தே காலுக்கே வந்து உட்கார்ந்து விட்டார். மைதிலி ஆறாவது கோர்டில் நுழையும் போது மணி பத்தரைக்கு மேல்.
திரும்பிய இடமெல்லாம் ஒரே கருப்பு கோட்டுக்கள் மயம். உள்ளே நுழையும் போது பவ்யமாக ஒரு ஏர் இந்தியா மஹராஜ் குனியல். ஜட்ஜ் பார்க்கிறார்ங்கறது முக்கியமில்ல. ஆனா குனியல் முக்கியம்.
'1164/78 .. மல்லிகா வெர்ஸஸ் ஆரோக்யம்...'
பெஞ்சு க்ளர்கின் கணீர் குரல். மல்லிகாவின் அட்வகேட் ஆஜர்.
'10/6'
டேட்டை கேட்டுக் கொண்டு பின் புறமாக ரெண்டு அடி வைத்து விடை பெறுகிறார் அந்த அட்வகேட்.
'அப்பாடி, பதினேழாவது ஐடம்தான் ஓடியிருக்கு. இன்னும் பத்து பதினைந்து நிமிஷம் ஆகலாம் இருபத்தெட்டுக்கு'.
மனதிற்குள் ஒரு திருப்தி. கண்களை சுழற்றுகிறாள் NCR சார் வந்திருக்கிறா என்று. தென்பட்டது ரெங்கராஜன் மட்டும்.
'என் ஸ்ரீ கிட்ட உன் பாச்சா பலிக்காது ரெங்கா. என்ன பாடு படப் போற பார் இன்னிக்கு.'
மனதுக்குள் ரெங்கராஜனை வறுத்ததில் ஒரு அல்ப சந்தோஷம் மைதிலிக்கு.
லிஸ்டிங்க்ல ஐடம் இருபத்தேழு முடிந்து இருபத்தெட்டு.
'1133/76.. சக்ரபாணி வெர்ஸ்ஸ் புவனேஸ்வரி.'
ஜட்ஜிடம் வணக்கம் தெரிவித்து பாஸ் ஓவர் கேட்டாள். 'அந்த பக்க அட்வகேட்?' என்று ஜட்ஜ் க்ளர்க் தக்ஷிணாமூர்த்தியிடம் கேட்க ரெங்கராஜன் கையை உயர்த்தினான்.
கேஸ் கட்டை தன் பக்கம் வைத்துக் கொண்டார் ஜட்ஜ்
கற்பக விநாயகம்.
'இனி குருநாதர் கொடுத்த ஏழு கேஸ்களுக்கு டேட் வாங்க நான்கு கோர்டுகளுக்கு படையெடுக்க வேண்டும்.
'நீங்கதான் க்ராஸ் பண்றீங்களா?'
ஆறாவது கோர்டின் வாசலுக்கு வந்தவளை ரெங்கராஜன் கேட்டான்.
'ஸ்ரீதர் வருவார். இன்னிக்கு சார் வரல. அந்த பக்கம் நீங்க தானே?'
'இல்ல. சார் வரேன்னு சொல்லியிருக்கார் பன்னெண்டு மணிக்கு.'
'ஓ. எனக்கு கேஸ்களுக்கு கொஞ்சம் டேட்ஸ் வாங்கணும். அர்ஜெண்டா போறேன். சாரி, ரொம்ப டைம் எடுத்துக்க முடியல உங்க கிட்ட.'
இரண்டு கேஸ்களுக்கு தானாகவே டேட்டுகள் கிடைத்து விட்டன இவள் போவதற்குள். மற்ற ஐந்துக்கும் வாங்கி விட்டு ஆறாவது கோர்ட்டில் உள்ள பெஞ்சில் அவள் அமரும்போது பதினொன்று ஐம்பது.
அப்போது ஸீனியர் அட்வகேட் ராகவாச்சாரி நுழைகிறார். அவர் உள்ளே நுழையும் போதே ஜட்ஜுக்கு இணையான வந்தனங்கள் எல்லோரிடத்திலிருந்தும் அவருக்கு.
வட்ட மேஜையை சுற்றியுள்ள நாற்காலிகள் ஒன்றில் அமைதியாக உட்காருகிறார்.
'ரெங்கா, பன்னண்டரைக்கெல்லாம் கூப்பிட்டுடுவாளோன்னோ?'
'கூப்டுடுவா சார். ஜட்ஜே மேலாம்படியாத்தான் கேஸ் கட்ட வெச்சிருக்கார்.'
'பாயிண்ட்ஸ் களுக்கெல்லாம் ஃப்ளேப் (flap) வெச்சிருக்கியாடா?'
'பிக்ஷு வரானா?'
'இல்ல சார். அவர் ஜூனியர்தானாம்.'
'ஏண்டா, அவன் தான வரதா சொன்ன ரெண்டு நாள் முன்னாடி. அவன் வரலைனா, நீயே பார்த்துண்டிருக்கலாமே? எதுக்கு என்ன அலக்கழிச்ச?'
அவரையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் மைதிலி.
அப்போது வேத்து விருவிருக்க ஸ்ரீதர் வருகிறான்.
'ரொம்ப தேங்க்ஸ் மை. பாஸ் ஓவர் பண்ணிட்டு நீ கிளம்பியிருக்க வேண்டியதுதானே?'
'என்னோட ஸ்ரீ எப்படி ஆர்க்யூ பண்ணப் போறான்னு பார்க்க ஒரு க்யூரியாஸிடி. அதுவும் ஒரு ஜாம்பவானோட. அதான் உக்காந்துட்டேன். இன்னிக்கு சிங்கத்தோட மோதப் போற நீ. சிங்கம் சிதறி ஓடப் போறது பார் நீ வேணா?'
'இதெல்லாம் ஓவர் மை. தெம்பு கொடுக்க வேண்டியது தான். அதுக்காக இப்படியா?'
அது இருக்கட்டும். நீ சாப்டியா ஸ்ரீ?'
'இல்லை. முடிச்சிட்டு ரெண்டு பேரும் போய் ஹோட்டல்ல சாப்பிடலாம்.'
'நம்ம சார் ரூமுல ஃப்ளாஸ்குல டீ வாங்கி வெச்சிருக்கேன். எடுத்துண்டு வரேன் இரு. தெம்பா சண்ட போடலாம் NCR சாரோட. அதுவரைக்கும் நான் சொன்னேனே பல்கிவாலா புக். இந்தா. கொஞ்சம் மேஞ்சிண்டிரு.'
ஆறாவது கோர்ட்டின் வாயிலுக்கு வந்து மைதிலி கொடுத்த டீயை பருகி சற்று ரிலாக்ஸ் செய்து கொள்கிறான்.
'டீ குடிச்சிட்டு உள்ள வா. நான் உள்ள போறேன்.'
ஸ்ரீதரை விட மைதிலிக்கு டென்ஷனும் க்யூரியாஸிடியும் நொடிக்கு நொடி ஏறியது.
பனிரெண்டு அம்பது. ஜட்ஜின் உத்தரவில் கேஸ் நம்பரை க்ளர்க் உரக்க கூப்பிட்டார்.
'1133/76 .. சக்ரபாணி வெர்ஸஸ் புவனேஸ்வரி.'
புவனேஸ்வரி தரப்பிற்கு ஸ்ரீதர். சக்ரபாணி தரப்பிற்கு பிரபல ஸீனியர் வக்கீல் NC ராகவாச்சாரி.
கிட்டத்தட்ட ஒரு மணிக்கு மேலான வாத பிரதிவாதங்கள். தூள் கிளப்பிக் கொண்டிருந்தான் ஸ்ரீதர்.
பல கட்டங்களில் NCR சார், தனக்கு இன்னொரு வாய்ப்பு வேண்டும் என்றே கூறிக் கொண்டிருந்தார். ஜட்ஜ் கற்பக விநாயகத்தின் ஆச்சர்யம் அவ்வப்போது அவர் உதிர்த்த புன்னகை காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது.
'ஃபனல் ஆர்க்யூமென்ட அடுத்த மாசம் வெச்சுக்கலாம். நோ ஃபர்தர் ஹியரிங். கேஸ் போஸ்டட் டு ட்டென் ஸிக்ஸ்'
ஜட்ஜ் சொன்னவுடன் பவ்யமாக விடை பெற்றார்கள் இருவரும் ஃபார்மாலிடி வந்தனத்தை ஜட்ஜிடம் தெரிவித்து விட்டு.
'சூப்பர் ஸ்ரீ. பிச்சு உதறிட்டியே.'
பின்னால் வந்த NCR ஸ்ரீதர் முதுகைத் தட்டினார்.
'வெல்டன் மை பாய். ஐ லைக் த வே யூ ப்ரெஸன்டட் தி கேஸ்.'
'ஐ அம் ப்ளெஸ்ட் சார். உங்கள மாதிரி இருக்கிர சீனியர் அட்வகேட்ஸ்கள் தான் எனக்கு இன்ஸ்பைரேஷன் சார்.'
சிரித்தார். 'நல்ல டேலண்ட் உனக்கு. நன்னா வருவ ப்ரொஃபஷன்ல. பை தி பை உன் பேர் என்ன?'
'ஸ்ரீதர்'.
'ஓ. அதைத்தான் இந்த பொண்ணு சுருக்கி ஸ்ரீ ன்னு சொன்னாளா? காட் ப்ளெஸ் யூ போத்.'
'தேங்க்ஸ் சார்.'
'பட் ரிமெம்பர். கேஸ் இஸ் நாட் ஃபினிஷ்ட். அடுத்த ஹியரிங்ல பாத்துக்கறேன் உன்ன.'
'ப்ளெஷர் இஸ் மைன் சார்.'
'பிக்ஷுவ கேட்டதா சொல்லு. முடிஞ்சா நானே ஃபோன் பண்றேன்.'
விடை பெற்றுக் கொண்டு கோர்ட்டுக்கு வெளியே வந்து ஹோட்டல் ஒன்றில் அமர்ந்தார்கள்.
'ஏய் ஸ்ரீ. லெட் அஸ் ஆர்டர் ஜாமூன் ஃபர்ஸ்ட். ஐ ஆம் ஸோ த்ரில்ட் டுடே.'
குலோப் ஜாமூன் வந்தவுடன் ஸ்பூனால் அதை குத்தோ குத்தென்று பிளந்து ஜீராவில் கரைத்துக் கொண்டிருந்தாள்.
'என்ன பண்ணிண்டிருக்க மை? பாவம் அந்த குலோப்ஜாமூன்.'
'பின்ன என்ன ஸ்ரீ. நீ வரதுக்கு முன்னாடி அந்த NCR கிழம் என்ன சொல்லிண்டிருந்தது தெரியுமா ரெங்கராஜன் கிட்ட?பிக்ஷு வரலைன்னா என்ன ஏன் அலக்கழிச்சே. நீயே நடத்தியிருக்கலாமேன்னு சொன்னுது. ஜூனியர்னா அவ்வளவு எளக்காரம் அந்த சிங்கத்துக்கு. அதான் இந்த குலோப் ஜாமூன அந்த கிழமா நெனச்சு த்வம்ஸம் பண்ணிண்டிருந்தேன்.'
'மை, நீ இந்த ரேஞ்சுக்கு போனே, கீழ்பாக்கம் தான்.'
இளமைக்கே உண்டான பெருமிதம் அவளிடம்.
பார்க்கிங்கை நோக்கி அவனும் இருபத்தொன்றை நோக்கி அவளும்.
தொடரும்...
No comments:
Post a Comment