Thursday, March 17, 2022

சின்ன வெங்காயம்

 பாட்டி வைத்தியம் - சின்ன வெங்காயம்!

மருத்துவ குணம் நிறைந்தது சின்ன வெங்காயம்தான்!

👉 ஜலதோஷம் வந்தா ஒரு சின்ன வெங்காயத்தை மென்று தின்று, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறைவதோட தும்மலும் நின்று விடும். கூடவே... நீர்க்கடுப்பு, நீர்எரிச்சல் இதெல்லாமும் குணமாகும். 

👉 நெஞ்சு படபடப்பு வந்தாலும், சின்ன வெங்காயத்தை தின்று வெந்நீர் குடிக்க, உடம்பு சமநிலைக்கு வந்துடும். 

👉 இதய நோயாளிகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது... முதலுதவி சிகிச்சையாக இதைச் செய்யலாம். 

👉 பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.

👉 மூல நோயால் அவதிப்படுபவர்கள் சாப்பாட்டில் அதிகமாக சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்வது நல்லது. நீர்மோரில் சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் பலன் கிடைக்கும். வெளிமூலம் உள்ளவர்கள், சின்ன வெங்காயத்தை வதக்கி, பிரச்னை உள்ள இடத்துல வைக்க பலன் கிடைக்கும் 

👉 வெள்ளை வெங்காயத்தை அவ்வப்பொழுது நல்லெண்ணய் விட்டு வதக்கிச் சாப்பிட்டாலும் மூல உபத்திரவம் குறையும்

👉 பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல்னு அவதிப்படுபவர்களுக்கும் சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும். 

👉 தேள் கொட்டின இடத்தில் வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. 

👉 தலை பகுதியில சொட்டை விழுந்து முடி முளைக்காம இருந்தாலும் சின்ன வெங்காயத்தை தேய்த்து வந்தால் காலப்போக்கில் முடி முளைக்கும்.  மீசைப் பகுதியில் இப்படி சொட்டை இருந்தாலும், இதே வைத்தியத்தை செய்யலாம்! 

🙏🙏🙏🙏🙏🙏🙏

பயனுள்ள ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கும், நிபுணர்களுடன் நேரலை கலந்துரையாடல்களுக்கும் Healthy Tips குழுவில் இணைந்திருங்கள்.

நீங்கள் நமது Healthy Tips குழுவில் இன்னும் இணையவில்லை என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு வழியாக உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.

Link:

https://chat.whatsapp.com/KlqHuavwVgN7O3keXT5U3U

Direct Contact: https://wa.me/+919442011097

வாழ்க வளமுடன்!



No comments:

Post a Comment