👉பிரண்டை வற்றல்
பிரண்டை வற்றல் செய்து நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பழகிக் கொண்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும். ஞாபக சக்தி பெருகும், மூளை நரம்புகளும் பலப்படும். இப்போது பிரண்டையைப் பயன்படுத்தி பிரண்டை வற்றல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :-
பிரண்டை - கால் கிலோ (பொடியாக நறுக்கியது)
காய்ந்த மிளகாய் - 3
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :-
👉 அரிசியை கழுவி, தேவையான தண்ணீர் சேர்த்து, குழைய வேக வைத்துக்கொள்ள வேண்டும்.
👉 பிரண்டை மற்றும் மிளகாயை சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
👉 வதக்கியவற்றை நன்கு ஆற வைத்து, மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
👉 குழைய வேக வைத்துள்ள சாதத்துடன், அரைத்த பிரண்டை கலவையை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். கலவை கெட்டியாக இருக்க வேண்டும்.
👉 இதனுடன் தேவையான உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து கொள்ளவும்.
👉 இதனை நன்றாக கலந்து, சிறிய நெல்லிக்காய் அளவுக்கு, சிறிது சிறிதாக ஒரு சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து, 4 அல்லது 5 நாட்கள் நன்றாக காய வைக்க வேண்டும்.
👉 பின்னர் ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, நன்கு காய்ந்ததும், காய வைத்துள்ள வற்றலைப் போட்டு பொரித்தெடுத்தால் பிரண்டை வற்றல் ரெடி.
No comments:
Post a Comment