பூண்டு - வெங்காய குழம்பு
🍱 தேவையானவை:
பூண்டு - 100 கிராம்,
சின்ன வெங்காயம் - 20,
சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
புளி - எலுமிச்சைப் பழ அளவு,
எண்ணெய் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
சின்ன வெங்காயம் - 20,
சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
புளி - எலுமிச்சைப் பழ அளவு,
எண்ணெய் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
🍴 செய்முறை:
பூண்டைத் தோல் உரித்து இரண்டாக நறுக்கவும். வெங்காயத்தையும் தோல் உரித்து நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து... பூண்டு, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
இதில் சாம்பார் பொடி போட்டு வறுத்து, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

No comments:
Post a Comment