பகிர்வு
⫷⫸⫷⫸🅜🅐🅛🅛🅘🅚🅐⫷⫸⫷⫸
துவரம் பருப்பு கிச்சடி
அரிசி - 1 கப் (ஊற வைத்து, கழுவியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
வர மிளகாய் - 2
பிரியாணி இலை - 1
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கேரட் - 1 (நறுக்கியது)
பீன்ஸ் - 10 (நறுக்கியது)
கத்திரிக்காய் - 100 கிராம் (நறுக்கியது)
பட்டாணி - 100 கிராம்
இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
👉முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி சூடேற்ற வேண்டும்.
👉சன்னா மசாலா
பின் அதில் சீரகம், வர மிளகாய், பச்சை மிளகாய், பிரியாணி இலை போட்டு, தாளிக்க வேண்டும்.
அடுத்து, அத்துடன் துருவிய இஞ்சி சேர்த்து வதக்க வேண்டும்.
👉பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள அனைத்து காய்கறிகளையும் போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும்.
👉மீல் மேக்கர் உருளைக்கிழங்கு மசாலா
பிறகு கழுவி வைத்துள்ள அரிசி மற்றும் துவரம் பருப்பு போட்டு, 2 நிமிடம் கிளற வேண்டும்.
👉பின்பு நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், சீரகப் பொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
👉இறுதியில் 3 கப் தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி கொதித்ததும், குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
👉இப்போது சுவையான துவரம் பருப்பு கிச்சடி ரெடி!!! இதனை தயிர் பச்சடியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
No comments:
Post a Comment