வானமாமலை சின்னியம்மாள் ரஹஸ்யம்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:
பெரிய ஜீயர் ஸ்வாமியால் நியமிக்கப்பட்ட அஷ்டதிக்கஜங்களில் முதல்வரான பொன்னடிக்கால் ஜீயர் ஸ்வாமி (ஒன்றான வானமாமலை ராமாநுஜ ஜீயர் ஸ்வாமி) – புரட்டாசி புனர்வசு
ஒரு சமயம் ஒன்றான வானமாமலை ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் ஸ்வாமி எழுந்தருளியிருந்த இடத்திற்கு வந்து திருவடி ஸம்பந்தியான (வானமாமலை மடத்து சிஷ்யை ) சின்னியம்மாள் என்றொரு பெண்பிள்ளை தண்டன் சமர்ப்பித்து நிற்க, ஜீயர் ஸ்வாமி அவளை கடாக்ஷித்து ” பெண்ணே உனது தேசமேது, நாடேது, ஊரேது என்று பல கேள்விகளை கேட்க அப்பெண்மணியும் ஸ்ரீவைஷ்ணவ நிஷ்டைக்குச் சேர பதில் உரைத்தாராம். ஜீயர் ஸ்வாமிக்கும் இந்தப் பெண்மணிக்கும் நடத்த உரையாடலின் தொகுப்பு சின்னியம்மாள் ரஹஸ்யம் என்று போற்றப்படுகிறது. ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் தெரிந்து கொண்டு அனுஷ்டிக்க வேண்டிய விஷயங்கள் ஆகும்.
கேள்வியும் பதில்களும் :
வானமாமலை சின்னியம்மாள் வார்த்தை
1.உன் குலமென்ன ?
பாகவத குலம் .
2.கோத்திரம் எது ? ராமாநுஜ கோத்திரம் .
3. உன் ஸுத்ரம் என்ன ?
சடகோப ஸுத்ரம்
( சடகோபர் - நம்மாழ்வார் ) ‘
4.உன் வேதம் யாது?
‘ தமிழ் வேதம்
(நாலாயிர திவ்ய பிரபந்தம் )
5.உன் புருஷன் யார் ? புருஷோத்தமனாகிய எம்பெருமான்
6.உன் தாய் தந்தையர் ? திருவரங்கத் திவ்யத்தம்பதிகள்
7.உன் பந்துக்கள் யார் ?
ஆத்ம பந்துக்களான ஸ்ரீவைஷ்ணவ பாகவதர்கள்
8.உன் தொழிலென்ன ?
' ‘ பாகவத கைங்கரியம் .
9.அதனால் என்ன பிரயோஜனம் ?
கைங்கர்யமாகிற அதுவே பிரயோஜனம் .
10. உன்பிரார்த்தனை என்ன ?
பகவத் பாகவத ஆசார்யர்கள் திருவுள்ளம் குளிரும்படியாக கைங்கரியம் எப்போதும் கிடைக்க வேண்டும் என்கிற பிரார்த்தனை .
No comments:
Post a Comment