ரவா உப்புமா என்றால் அது மாலை நாலுமணி டிபன் என்பதாக நினைவில் ஆழமாக பதிந்துவிட்டது.
காரணம் 3.20க்கு பள்ளி விட்டதும் பல தடவை சுடசுட சாப்பிட்ட சுவை நாக்கிலிருந்து மூளைக்குப்போய் உறைந்ததுதான்.
அந்த நாலுமணி வெயில்,தெரு சத்தங்கள்,வெங்காய வாசனை,கிண்டும் ஓசை,மணம் எப்போதாவது வந்துபோகிறது நாலுமணிக்கு.
அன்றைய Two minutes Noodles!
இப்போது மாதிரி வீட்டு உப்புமாவில் பணக்காரத்தனம் இருக்காது. பட்டாணி, மு.பருப்பு,குடமிளகாய்,கொத்தமல்லி,நெய் இல்லாத லோயர் மிடில்கிளாஸ் லுக்குடன்தான் இருக்கும்.
இப்போது அதே பணக்காரத்தனத்துடன் உப்புமாவை 5.15 டிபனாக செய்துபோட ஆசை இருந்தாலும் ஏதோ உப்புமா கம்பெனியைப் பார்ப்பதுபோல் பார்க்கிறார்கள் இந்த கால தலைமுறைகள். இதுதான் வாழ்க்கை.
கண்ணுக்கெதிரே சமையலின் ஒரு சுவையை இந்த தலைமுறை இழந்துக் கொண்டுறப்பதை அசட்டு சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
அப்போதைய இளையதலைமுறையின் 50% விரும்பிச் சாப்பிடுவார்கள். ஆனால் இப்போது 20% ஆக குறைந்துவிட்டது.காரணம் காற்றடித்த உப்பிய பிளாஸ்டி பைகளில் கிடைக்கும் நொறுக்குத்தீனிகள் மற்றும் துரித உணவுகள். உப்புமாவை உப்புமா கம்பெனிபோல் ஒன்றும் இல்லாம ஆக்கிவிட்டது.
2011ல் இந்திய வம்சாவளி சமையல்காரர் ஒருவர் அமெரிக்காவில் உப்புமா டிபன் செய்து ஒரு லட்சம் டாலர் பரிசுபெற்றார்.”தங்கள் வாழ்வில் பாதித்த அல்லது எப்போதும் நினைவில் ஊசலாடும் ஒரு டிபன்” என்ற பிரிவில் இவர் செய்த டிபன் உப்புமா. என் நாலுமணி டிபன்.....!
இதன் கசின் ஆன கிச்சடியும் சுவையானது.
By ரவி ஆதித்யா
No comments:
Post a Comment