Thursday, March 17, 2022

எண்ணப்பறவை_60

எண்ணப்பறவை_60

'மாமா, பழசெல்லாம் மறந்துடுங்கோ.  அரவிந்த் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டான்.  நீங்க மேற்கொண்டு அவனோட அம்மா கிட்ட பேசி தீர்மானம் பண்ணிக்கோங்கோ.  பவானியும் என்னோட வரேன்னுதான் சொன்னா.  நான் தான் வேணாம், நானே சொல்லிட்டு வரேன்னு சொல்லிட்டேன்.'

'என்ன மேடம்.  இப்ப சந்தோஷம் தானே?  ஏதோ அந்த ப்ரியா மேடத்தோடு பேசுனது நல்லதா போச்சு.  என்ன மிஸ்டர் அரவிந்த். வாழ்க்கைல பிடிக்குதோ பிடிக்கலையோ சில காம்ரொமைஸஸ் எப்போதும் பண்ணிகிட்டு இருந்தா தான் லைஃப்ல இன்டரெஸ்ட் இருக்கும். ஐ ஆம் வெரி ஹாப்பி.  உங்க ரெண்டு பேர் மேரேஜுக்கு வேற ஏதாவது ஹெல்ப் வேணும்னாலும் தயங்காம கேளுங்க.  இனிமேல நீங்க இந்த ஆஃபீஸுக்கே மாப்பிள்ள ஆயிட்டீங்க.'

'ஜீஎஸ், என்னவோ பயந்தியேடா.  நான் சொன்னது சரியா போச்சா.  ரெண்டு பேர் கல்யாணத்தையும் உங்க ஆத்துக்காரிதான் நடத்திண்டு வரா தெரிஞ்சுக்கோ.'

'எல்லாம் பகவான் தான் மாமா என் புள்ள மனசுல புகுந்து விளையாடியிருக்கார்.  பவானி ஆத்துல கேட்டுண்டு நிச்சயதார்த்தத்துக்கு ஆக வேண்டியத பாருங்கோ.  முடிஞ்சா அன்னிக்கே அவா சம்மதிச்சா அவாத்துலேயே நிச்சயம் பண்ணிக்கலாம்.  இல்லாட்டி இருக்கவே இருக்கு நம்மாம்.  அடுத்த நாளே வெச்சிக்கலாம்.'

'எப்படி டீ அமுதா?  எல்லாமே கனவுல நடக்கற மாதிரி!  நெஜமா சொல்றேன்.  உனக்கு கடவுளோட அனுக்ரஹம் பரிபூ்ணமா இருக்கு.  யூ ஆர் க்ரேட்.  உங்க கல்யாணத்தும்போது நான் டெலிவரிக்காக பொறந்தாத்துக்கு போனாலும் போயிடுவேன்.  அட்லீஸட் நிச்சயதார்த்த சாப்பாடு சீக்கிரம் போடுடி.  நீ வேணா பாரு.  உன்னோட எண்ணப்பறவை ஸ்டோரி ஃபர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கப் போறது.'

'குமுதா கல்யாணமாகி பாடிக்கு போனாலும் நீயும் அரவிந்தும் இங்கேயே குடுத்தனம் நடத்துங்கோ.  நம்மாத்து மேல்மாடிய வேணா ஒழிச்சு தரேன்.  சுந்தரி கிட்ட நான் பேசிக்கறேன்.'

'படவா.. எல்லாரையும் எப்படி பயமூத்திட்ட கொஞ்ச நாளைக்கு.  இதுக்கெல்லாம் சேத்து வெச்சு அமுதாவ உட்டு நன்னா கவனிக்க சொல்றேன்.  கல்யாணம் ஆனாலும் என்ன மன்னின்னுதான் கூப்படணும்.  என்னவோ தெரியலடா, நீ மன்னி மன்னின்னு கூப்படறச்சே அப்படி ஒரு சந்தோஷம்.'

'ரொம்ப த்தேங்க்ஸ் ப்ரியா.  என்னுட்ட கூட சொல்லாம ஐஜி கிட்ட பேசி என்னென்னவோ பண்ணிட்டயே.  என் கல்யாணத்துல உன்னோட ரோல் தான் மாஸ்டர் ஸ்ட்ரோக்.'

'நான் சிவராமன் பேசறேன். உங்க கதைய படிச்சுட்டேன்.  அற்புதமா இருக்கு.  நிச்சயம் இது ஒரு சூப்பர் ஹிட்டா இருக்கும்னு நெனைக்கிறேன்.  உங்களுக்கு ரசிகர்களோட ஆதரவு கிடைக்கும்.  நீங்க வேணா பாருங்க.  நரசிம்மன் மாமாகிட்ட கூட சொன்னேன்.  அவரும் சந்தோஷப் பட்டார்.'

'நீ சமர்த்து பொண்ணுதான் அமுதா.  ஆனாலும் கொஞ்சம் துடுக்குத் தனத்த கொறச்சிக்கணும்.  நல்ல வேளை சமயபுரத்தாள் கருணையால உன் மனசுக்கு புடிச்சவனையே உன்னோட சேர்த்து வெச்சுட்டா.'

'வித்யாசமா எடுத்துக்காதே குமுதா.  இன்னிக்கு நைட் ஷிப்ட் எனக்கு.  பவானி ஆத்துக்கு வந்தேன்.  என்னமோ தோணித்து உன்ன பார்க்கணும்னு.  ஐ வோண்ட் டேக் மச் டைம்.  ஒரு காஃபி சாப்பிடற நேரம்தான்.  என்னதான் கல்யாணத்துக்கு அப்புறம் பேசிண்டே இருக்கப் போனாலும், இப்படி கல்யாணத்துக்கு முன்னாடி பேசற ரெண்டு வார்த்தைல கிடைக்கிற சந்தோஷம் தனிதான்.  என்ன நான் சொல்றது.'

'சாரி லக்ஷ்மணன் சார்.  ஆசையா அமுல் கம்பெனியில சேரணும்னு இருந்தேன்.  என்னென்னவோ ஸடர்ன் ச்சேஞ்சஸ்.  ஐ அம் மிஸ்ஸிங் அமுல்.  கண்டிப்பா எங்க கல்யாணத்துக்கு நீங்க ஃபேமிலியோட வரணும்.  கொஞ்ச நேரம்தான் உங்களோட பழக்கமா இருந்தாலும் என் லைஃப்ல மறக்க முடியாத நபர் நீங்க.'

'என்ன அரவிந்த்?  ஏகேண்ணா ஏக்கேண்ணான்னு சொல்லிகிட்டே இருப்பீங்க.  உங்க ரெண்டு பேரையும் நாங்க லாரல் ஹார்டின்னுதான் கிண்டல் பண்ணிகிட்டு இருப்போம்.  அவர விட்டுட்டு வேற வேலைக்கு போறது ஞாயமா?'

'அமுதா, எப்பப் பார்த்தாலும் ஆஃபீஸ் நேரம் போக ஆத்துக்கு வந்தா இந்த மட்டையடி கும்பலோட தான் அரட்ட.  எத நீ அவனுக்கு சொல்லி தரப்போறியோ இல்லையோ.. இந்த மட்டைய அவன் தூக்காம செய்யணும்.  என்னடா நான் ஒருத்தி தனியா இருக்கேனே.  இவளுக்கு பேசறதுக்கு யார் இருக்கான்னு துளி கூட நெனைக்காம.  இந்த கிரிக்கெட் பேட்ட கண்டு பிடிச்சவன ரெண்டு சாத்திட்டு வரணும் போல தோணறது.'

'மேடம்..  கேள்விப் பட்டோம்.. கல்யாணமாமே...  நாங்க எல்லாரும் ஆசையா இருக்கோம்.  உங்க கல்யாணத்தும்போது திருச்சிய ஒரு கலக்கு கலக்குவோம் பாருங்க.'

'அமுதா.. எல்லாரும் உனக்கு என்ன கிஃப்ட் வாங்கித் தரது ப்ரியான்னு கேட்டா.  நான் சொல்லிட்டேன் பணமாவே கொடுத்துடலாம்னு.  கிஃப்ட் எல்லாம் நன்னாத்தான் இருக்கும்.  ஆனா மிடில் க்லாஸ் குடும்பங்களுக்கு கல்யாணங்கங்கள்ல ஆசீர்வாத பணமும்தான தேவப் படறது.  சொத்து பத்தா இருக்கு நம்ம 

கிட்ட?  ஆசீர்வாத பணம் கூட பெருங்காயமா கல்யாணத்துல கரையும்.  என்ன பண்றது?  வாசனை புடிச்ச சந்தோஷம் போறாதா என்ன?'

சந்தோஷ தருணங்கள் வந்துவிட்டால் எப்படியெல்லாம் பேசித் தீர்க்கின்றன சொந்தங்களும் நெருங்கிய நட்புகளும்?

என் வரிகள் சிலவற்றை சேர்த்தே கதையை நிறைவு செய்கிறேன்.

ஆண்டவனுடைய அற்புதமே நல்ல மனங்களுக்கு ஏற்ப மனிதர்களையும் மனங்களையும் நம்முடன் பயணிக்க வைப்பதில் தான் இருக்கிறது.  சூழல்களை அவனே கொடுத்து நம்பிக்கைகளை பலப் படுத்துகிறான்.

எண்ணப் பறவை விண்ணைத் தொடும் காலம் கனிந்ததில் மகிழ்ச்சி.

NOBODY IS SENT BY ACCIDENT TO ANYONE.

முடிவில்லா கதையும் சாத்தியமே காலம் அனுக்ரஹித்தால்.  சுவைகளை சேர்த்துக் கொண்டே சென்றால் முடிவைப் பற்றி சிந்திக்கவே மாட்டோம்.  இருப்பினும் திகட்டாத அளவிலும் இருக்க வேண்டுமே என்ற பயத்தில் நிறைவு செய்கிறேன் கதையை.

உங்கள் எண்ணங்களில் இருவர் திருமணங்களையும் நடத்துங்கள்.  சந்தோஷங்கள் ததும்ப பல்லாண்டு வாழட்டும் அந்தப் பறவைகள்.

சுபம்...

No comments:

Post a Comment