Sunday, March 13, 2022

வெங்காயவடகம்

வெங்காயவடகம் 

 தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் –
 அரை கிலோ,
 மஞ்சள்தூள் – 50 கிராம், 
கடுகு – 50 கிராம்,
 வெந்தயம் – 25 கிராம்,
 சீரகம் – 25 கிராம்,
 மிளகு – 10 கிராம்,
 பூண்டு – கால் கிலோ,
 நல்லெண்ணெய் – 50 கிராம், 
உப்பு – ஒன்றரை ஸ்பூன். 

 செய்முறை:

🟡முதல் சின்ன வெங்காயத்தின் தலைப்பகுதியை மற்றும் வால் பகுதியை நறுக்கி எடுக்க வேண்டும். 

🟡பின்னர் தோல் உரித்துக் கொண்டு அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு உரித்து வைத்துள்ள வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் 50 கிராம் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இதனை இறுக்கமாக அழுத்தி, தட்டி வைத்து தொடர்ந்து இரண்டு நாட்கள் வெயிலில் உலர வைக்க வேண்டும். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து இதனை எடுத்து கொள்ள வேண்டும். -

🔴பின்னர் கால்கிலோ பூண்டை தோல் உரித்துக் கொண்டு, அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரைத்த பூண்டை ஊறவைத்த வெங்காயத்துடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் 50 கிராம் கடுகு, 25 கிராம் சீரகம் சேர்த்து கலந்து விட வேண்டும். 

🟡பின்னர் இவற்றுடன் 25 கிராம் வெந்தயம், 10 கிராம் மிளகு, உப்பு மற்றும் 50 கிராம் நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கைகளை வைத்து நன்றாக பிசைந்து விட வேண்டும். அனைத்து பொருட்களும் ஒன்றோடு ஒன்று கலந்து விடும் படி ஒரு 10 நிமிடத்திற்கு மேல் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் தட்டு போட்டு மூடி, ஒரு இரவு முழுவதும் அப்படியே வைக்க வேண்டும். பிறகு மறுநாள் காலை இதனைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு மறுபடியும் வெயிலில் காயவைத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

🔴 பின்னர் எப்பொழுதும் நீங்கள் குழம்பு வைக்கும்போது எண்ணெயில் சிறிதளவு வடகத்தை சேர்த்து வந்தால் போதும். உங்கள் குழம்பின் சுவை அதிகரித்துவிடும். -





No comments:

Post a Comment