காலை நேர சிந்தனை
( 18.03.2022)
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வரும் ஜுஸ்கள் விலைக்குறைவாக இருக்கும் மர்மம் பற்றி பலதடவை யோசித்திருக்கிறேன் .
அதே பழங்களை ஃபிரெஷாக வாங்கும் போது விலை அதிகம் . என்னதான் மொத்தமாக வாங்கினாலும் . தயாரிப்பு செலவு அடக்க விலை , தொழிலாளர்கள் , மிஷனரிகள் , டிரான்ஸ் போர்ட் இப்ப்டி பல விஷயங்கள் இருக்கே..!!
ஒரு பழத்தை ஜூஸாக செய்தால் அதிக பட்சம் இரெண்டு நாள் வரும். அதுக்கு மேல் அதுக்கு கேரண்டி கிடையாது. இது இல்லாமல் இதை பாக்கெட் செய்யும் போது முழுக்க முழுக்க 100 சதம் ஜுஸ் மட்டுமே வைக்க முடியாது .
இதனால்தான் .சில கெமிக்கல் சேர்த்து விற்பனைக்கு வருகிறது. ஒரு சில மில்லி க்கும் மிக க்குறைவாக சேர்ப்பதால் நமது உடம்புக்கு ஒன்னும் ஆகாது .இதுவே இந்த பொருட்களில் கலப்படம் செய்தால் நமது உடம்பு தாங்காது .
அதிகளவு சர்க்கரையும் , சிலதில் போதை ஐட்டமும் சேர்ப்பதால்தான் நாமும் இதற்கு அடிமைப்பட்டு தொடர்ந்து வாங்குகிறோம் .
உதாரனமாக சாதாரன லெமன் ஜுஸை சில மணி நேரங்களுக்குள் உபயோகப்படுத்திட வேண்டும். இல்லா விட்டால் அதன் நிறம் கருப்பாக மாறி விடும் .இருக்கும் பாத்திரத்தையும் வீனாக்கிவிடும் .
இதற்குதான் அதே நிறத்தை கொடுக்கும் சில கெமிக்ல்லை சேர்த்தால் ஒரு வருடம் ஆனாலும் அப்படியே இருக்கும் . ((ஆனா உங்கள் உடம்புக்குதான் கேரண்டி இல்லை ஹி..ஹி.. )).
ஓகே திரும்பவும், முதல் வரியிலிருந்து ஆரம்பிக்கிறேன் .ஒரு சில தயாரிப்புகளில் உதாரணம் மாங்காய் .ஜுஸ் கட்டியாக இல்லாமல் தண்ணீர் அதிகம் சேர்த்து போல் இருக்கும் .சிலதில் ஜுஸாகவே இருக்கும் .அதுவும் மாம்பழம்தான் , இதுவும் மாம்பழம்தான் அப்புறம் ஏன் இந்த இரெண்டு வகை குவாலிட்டி. ஒன்றில் கெமிக்கல் எக்ஸ்ராக்ட் அதிகம் இருக்கும் . மற்றொன்றில் மாம்பழ ஒரிஜினல் ஜுஸாகவே இருக்குமுன்னு நினைச்சா நீங்க கண்டிப்பாக ஏமாளிதான் .
இரெண்டிலுமே வாசனைக்குதான் மாம்பழம் இருக்கும் கலர் சேர்த்து இருப்பார்கள்.வருடம் முழுவதும் மாம்பழம் எங்கிருந்து வருமுன்னு யோசிக்கும் போது உண்மை புரியும் . எனது இத்தனை சந்தேகத்துடன் ஒரு புகழ் பெற்ற கம்பெனிக்குள் உள்ளே நுழைந்தேன்.(( இதை அது மாதிரி கம்பெனி நிர்வாகிகள் படிச்சால் என்னை கம்பெனி உள்ளே விடுவானுங்களான்னு தெரியல ..ஹி...ஹி.. )) .
ஒரு பக்கம் வாழைப்பழம் , மாம்பழம் , கொய்யா இப்படி நிறைய ஐட்டங்கள் இருந்தது.. ஒவ்வொன்னா பார்த்துகிட்டே போனேன் . இதன் இன்னொரு ஸைடில உருளை கிழங்குகள் டன் கணக்கில் இருந்துச்சி .நான் இதை வித்தியாசமா பார்த்ததை கண்டு நைஸாக என்னை வேறு பக்கம் கொண்டு போய்ட்டார் .இப்போதுதான் என்னோட ஒட்டு மொத்த சந்தேகமும் தீர்ந்தது அடப்பாவமே...!! வாழைப்பழம் கிலோ 3 ரூபாய் ஆனா உருளை கிழங்கு ஒரு ரூபாய்தான் ,,,, வித்தியாசம் புரிந்தது.
அப்படின்னா நாம மாம்பழமுன்னு நினைச்சு குடிப்பது முழுக்க மாம்பழஜுஸ் இல்லை. உருளை கிழங்கு ஜுஸ்தான், கொய்யா ஜுஸ் கிடையாது கொய்யா எஸன்ஸ் கலந்த உருளை ஜுஸ்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் .
உள்ளே நாலு வித (ஙே) ஜுஸ் குடுத்தாங்க ..குடித்துகிட்டே வந்தேன் . உருளை சேர்ப்பதால் பழசாறுக்கு அடர்த்தி அதிகம் கிடைக்கிறது செலவும் இல்லை .
உடலை குறைக்க விரும்புபவர்கள் இதை குடிச்சால் உடல் குறையாது மாறாக கூடவே செய்யும் ஏன்னா உருளையில் கார்போ ஹைட்டேட் மிக அதிகம்.
சர்க்கரை வியாதி உள்ளவங்க இதை அதிகம் சாப்பிடக்கூடாது . ஆனா இதை வெளியில சொல்லாம ரொம்பவும் ஈஸியா ஏமாத்திடறாங்க .
யாருக்கும் தெரியாது .கவர்ச்சிகரமா யாரையாவது வைத்து விளம்பரம் செய்தால் அக்கா மாலா, கப்சி மாதிரி எது குடுத்தாலும் நமது மக்கள் வாங்கி குடிப்பாங்க .விளம்பரம்தானே முக்கியம் .
வெளியில் எதையும் வாங்கி குடிக்க வேண்டாம் .முடிந்த வரை பழங்களாக வாங்கி வீட்டிலேயே பழச்சாறு செய்யுங்கள். வெளியே நீண்ட தூரம் போக நேர்ந்தால் ஒரு பாட்டிலில் கொண்டுப்போங்கள்.
முடிந்த வரை சொந்தமாக கொண்டு போவதால் போலியிலிருந்து தப்ப முடியும் .எந்த வித கெமிக்கல் சேர்க்காத ஒரிஜினல் ஜுஸ் குடித்த திருப்தியும் உங்களுக்கு கிடைக்கும்
இனி அடுத்த தடவை யாராவது பாட்டிலில் மாம்பழம் அது பெயர்......ன்னு சொன்னால் சொன்னவங்க முகத்துல சுடு தண்ணீயை ஊத்திடுவேன்னு சொல்லுங்க ஹி..ஹி...
நன்றி ஜெய்லானி
┈❀🌿🌺🌿❀┈❀🌿🌺🌿❀┈❀🌿🌺🌿❀┈
No comments:
Post a Comment