Thursday, March 17, 2022

மூச்சு விடும் நரசிம்மர்

 மூச்சு விடும் நரசிம்மர் 

ஒருமுறை அகத்திய முனிவர் இமயமலைக்கு சென்று சிவபெருமானை வணங்கிவிட்டு சிவபெருமானின் உத்தரவுப்படி தெற்கு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது கிருஷ்ணா மற்றும் மூசி நதிகள் இணையும் இடத்தில் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வானத்தில் இருந்து ஒரு அசரிரீ ஒலித்தது.

நீ தங்கியுள்ள நதிகள் இணையும் இடத்தில் ஒரு நரசிம்மர் விக்ரமம் உள்ளது. அந்த நரசிம்மர் விக்கிரகத்தை வழிபாடு செய்துவிட்டு உங்கள் பயணத்தை தொடங்குங்கள் என்று அந்த அசரிரீ சொன்னது. அதேபோல அங்கு இருந்த நரசிம்மர் விக்கிரகத்தை வழிபட்ட பின்னர் அகத்திய முனிவர் தன் பயணத்தை தொடங்கினார்.

காலப்போக்கில் அந்த நதிக்கரையில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அந்த நரசிம்மர் சிலை மண்ணில் மூழ்கிவிட்டது.

ரெட்டி ராகலு என்பவர் இந்த இடத்தில் ஒரு நகரத்தை உருவாக்க முயற்சி செய்தபோது இந்த இடத்தில் நரசிம்மர் சிலை கிடைத்தது. 

1377 ஆம் ஆண்டு நரசிம்மருக்கு அங்கு ஆலயம் அமைத்து மக்கள் எல்லோரும் வழிபட தொடங்கினார்கள். இந்த இடம் தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் வடபல்லி என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

அர்ச்சகர் ஒருவர் இந்த நரசிம்மர் சிலைக்கு வழிபாடு செய்தபோது நரசிம்மர் சிலையின் மூக்கில் இருந்து முச்சுக்காற்று வருவதை உணர்ந்தார்.

உடனே நரசிம்மர் காலுக்கு அருகில் ஒரு தீபத்தை வைத்துவிட்டு நரசிம்மர் மூக்கிற்கு அருகில் ஒரு தீபத்தை எடுத்துச் சென்றார்.

நரசிம்மரின் காலுக்கு அருகில் இருந்த தீபத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் நரசிம்மரின் மூக்கிற்கு அருகில் தீபத்தை எடுத்துச் செல்லும்போது தீபம் காற்றில் அசைந்ததை பார்த்தார். இன்றும் கூட இந்த ஆலயத்தில் உள்ள நரசிம்மர் சிலையின் மூக்கில் இருந்து முச்சுக்காற்று வெளிப்படுவதை பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து நரசிம்மரின் அருளை பெற்று வருகிறார்கள்.



No comments:

Post a Comment